ஞாயிறு, 28 டிசம்பர், 2014

உயர் பாது­காப்பு வல­யத்­துக்குள் ஓர் திடீர் பிர­வேசம்

ஓர் நேரடி ரிப்போட்

வலி. வடக்கு உயர் பாது­காப்பு வல­யத்­தினுள் உள்ள வீமன்­காமம் தைய­சிட்டி ஞான­வை­ர­வரின் ஆல­யத்தைப் பார்­வை­யிடச் சென்ற மக்கள் அழி­வுற்று சிதைந்­து­போ­யுள்ள தமது குடி­யி­ருப்­புக்­களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்­சி­ய­டைந்­துள்­ள­துடன் பிரிய மன­மின்றி மன­வே­த­னை­யுடன் வெளி­யே­றினர்.



கடந்த ெவள்ளியன்று காலை 11 மணி­ய­ளவில் மாவிட்­ட­புரம் கந்­த­சாமி ஆலய முன்­றலில் இருந்து, குறித்த ஆலய நிர்­வா­கத்­தினர் கீரி­மலை நகு­லேஸ்­வ­ரக்­கு­ருக்கள் தலை­மையில் ஆறு மதகுருமார் மற்றும் கிரா­மத்­த­வர்கள் உட்­பட சுமார் 15 பேர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் யாழ். மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னுடன் வலி. வடக்கின் உயர் பாது­காப்பு வல­யத்­திற்குள் பிர­வே­சித்­தனர்.

பாது­காப்பு நகர அபி­வி­ருத்தி அமைச்­சிடம் இதற்­கான எழுத்துமூல அனு­மதி ஏலவே பெறப்­பட்­டி­ருந்­தது.

யாழ் – காங்­கே­சன்­துறை வீதியில் மாவிட்­ட­புரம் கந்­த­சாமி ஆல­யத்திலிருந்து சுமார் 500 மீற்­ற­ரி­லுள்ள இரா­ணு­வத்த­டையை தாண்டி உள்ளே சென்ற வாக­னங்கள் காங்­கே­சன்­துறை வீதியில் மேலும் 400 மீற்­ற­ருக்கும் குறைந்த தூரம் பய­ணித்து பாது­காப்பு வேலி­யோரம் அமைக்­கப்­பட்­டுள்ள புதிய வீதியின் ஊடாக சென்­ற­வே­ளையில் வீதி­யோ­ரங்­களில் ஒரே பற்­றைக்­கா­டுகள் மட்­டுமே காட்­சி­ய­ளித்­தன.

பய­ணத்­தின்­போது எங்கும் நிசப்தம் நில­வி­யது. இதே­வேளை, கட்­டட சிதை­வு­களை புகைப்­படம் பிடிக்க முயன்ற போது, அதற்கு கூடவே பய­ணித்த இர­ணுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்­த­வர்கள் அனு­ம­திக்­க­வில்லை. இருப்­பினும் ஓரிரு படங்­களை எடுக்க அனு­மதி கிட்­டி­யது. அதே­வேளை, குறிப்­பிட்ட அளவு தூரம் சென்று ஓர் திருப்­பத்­தின்­மூலம் மாவிட்­ட­புரம் – மயி­லிட்டி வீதி­யான வி.சி. றோட்டை அடைந்து, தொடர்ந்தும் பய­ணிக்­கும்­போது வீதியின் மையப்­ப­கு­தியை உள்­ள­டக்­கி­ய­தாக ஓர் பெரிய இரா­ணு­வ­முகாம் நீண்டு சென்­றது. அதன் எல்லை கண்­ணுக்கு எட்­டிய தூரம் வரை புலப்­ப­ட­வே­யில்லை.

இவ்­வீ­தியின் இடது பக்­க­மாக தொடர்ந்து செல்­வ­தற்­காக இரா­ணு­வத்­தி­னரால் புதி­தாக அமைக்­கப்­பட்ட பாதையின் வழியே பய­ணித்­த­வேளை, ஓர் பெரிய வனப்­ப­கு­தியின் ஊடாக பய­ணிப்­பது போன்ற தோற்­றமே கண்முன் விரிந்­தது. எங்கும் ஒரே பற்­றைக்­கா­டுகள். எத்­தி­சை­யிலும் போதிய அடை­யா­ள­மற்ற தன்­மை­யா­க­வே­யி­ருந்­தது. அதே­வேளை, கொட்டித் தீர்த்த மழையின் விளைவால் சேறும் சக­தியும் எம்மை வழி­ய­னுப்ப மறுத்து வாகனச் சக்­க­ரங்­களை இறு­கப்­பி­டித்து நின்­றது. அதனால் சகல வாக­னங்­க­ளையும் அவ்­வி­டத்­தி­லேயே நிறுத்­தி­விட்டு இறங்கி நடக்க ஆரம்­பித்தோம். புதி­தாக மரங்­களை வெட்டி ஏற்­ப­டுத்­தப்­பட்ட பாதையே அன்றி அது ஓர் நிரந்­தர வீதி அல்ல என்­ப­தையும் புரிந்­து­கொண்டோம். கூடவே பய­ணித்த அந்தப் பிர­தே­சத்­தி­லேயே பிறந்து வளர்ந்­த­வர்கள், "ஆகா இதுதான் டீசல் கிணறு வாத்­தி­யாரின் காணி" எனவும் "இது தபால் ஊழி­யரின் வளவு" எனவும் அடை­யா­ள­மிட்­ட­வாறே வந்­தனர்.

அவ்­வாறே பேசி­ய­படி 10 நிமி­டங்கள் சென்­ற­வேளை, ஓர் பெரிய பழை­மை­வாய்ந்த ஆலயம் யாருமே அற்ற நிலை யில் பூட்­டப்­பட்டு பாழ­டைந்து காணப்­பட்­டது.

அனை­வரும் வாசல் முன்­ நின்றோம். அந்­த­ணர்கள் முன்­சென்று வேத மந்­தி­ரங்கள் ஓதி, தேங்காய் உடைத்து, கற்­பூரம் கொளுத்­திய பின் ஆலய வாசல் திறக்­கப்­ப­ட­டது. போரின் வடு ஆல­யத்­திலும் தென்­படத் தவ­ற­வில்லை. யுத்­தத்­திற்கு முன்பு ஓங்கி ஒலித்த காண்­டா­ம­ணியின் ஓர் எச் சம் மட்­டுமே இருந்­ தது

உட்­சென்ற அந்­த­ணர்கள் வேக­மாகத் தமது பணியை ஆரம்­பித்து சுமார் 15 நிமி­ டங்­க­ளிற்குள் ஓர் பூசையை நடத்தி முடித்­தனர்.

அனைத்தும் நிறை­வுற்று மீண்டும் ஆலயம் பூட்­டப்­பட்டு வந்த வழியே திரும்பிச் செல்ல முடி­வா­கிய போது, சில முதி­ய­வர்­களின் மனம் கனத்து பிரிய மன­மின்­றியே, கூடப்­ப­ய­ணித்­த­வர்­களின் வற்­பு­றுத்­த­லினால் நடக்க ஆரம்­பித்­தனர். ஒரு­வாறு வாகனம் நிறுத்­திய இடத்தை அடைந்தோம்

வண்டி காட்­டு­வ­ழிபோல் உள்ள பாதையின் ஊடாகப் பய­ணித்து பிர­தான பாதையை அடைந்­த­போது வீதியின் இரு­ம­ருங்­கிலும் உள்ள வீட்டின் உரி­மை­யா­ளர்கள் மனம் பொறுக்­காது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஊடாக இரா­ணுவ உத்­தி­யோ­கத்­த­ரிடம் தங்கள் இருப்­பி­டங்கள் இருந்த இடங்­களை பார்­வை­யிட அனு­மதி கேட்­ட­போது, வாக­னத்தை நிறுத்தி கீழே இறங்­காது பார்­வை­யி­டுங்கள் என்ற அனு­மதி மட்டும் கிடைத்­தது.

பார்­வை­யிட்­ட­வர்­களில் ஒரு சிலர் மனம் பொறுக்­காது வாக­னங்­களை விட்டு இறங்கி ஓடிச்­சென்று தமது வீட்டின் எஞ்­சி­யுள்ள சிதை­வுகள் மூலம் இருப்­பி­டங்­களை இனங்­கண்­டு­கொண்­ட­தோடு நினை­வுச்­சின்­ன­மாக புகைப்­படம் எடுக்­கவும் தவ­ற­வில்லை.

தொடர்ந்து சுமார் அரை மணி­நேரம் 300 மீற்றர் நடை­ப­ய­ணத்தின் பின் இரா­ணுவ உத்­தி­யோ­கத்­தரின் கண்­டிப்­பான உத்­த­ரவின் பெயரில் அனை­வரும் தமது சொந்த நிலங்­களைப் பிரிய மன­மின்றி ஏக்கத்துடன் வாகனங்களில் ஏறி, என்றோ ஒருநாள் எமது மண்ணில் வந்து நிம்மதி யாகப் படுத்து உறங்குவோம் என்ற மனக் குமுறலுடன் திரும்பினர்.

கடந்த 24 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணைப் பார்த்த நிம்மதி பலருக்கு. இறுதியாக மனவேதனையுடன் பயணித்து வீமன் காமம் வழியாக மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை அடைந்தோம். பின்னர் வீமன் காமம் பாடசாலை அருகில் உள்ள சோதனைச் சாவடியின் வழியாக உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்து வெளியேறி னோம்.

(ந.லோக­த­யாளன்)

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல