பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.
குரோம் பிரவுசரில் இதற்கான செட்டிங்ஸ் வழிகளைக் கீழே தருகிறேன்.
குரோம் பிரவுசரில் செட்டிங்ஸ் (Settings) திரையைப் பெறவும். இதன் கீழாக Show advanced settings என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்தால், மேலும் பல பிரிவுகள் கீழாக விரிந்து கிடைக்கும். இதில் Privacy என்ற தலைப்பில், Content செட்டிங்ஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.
குக்கீஸ் (Cookies) என்பதன் கீழாக “Keep local data only until I quit my browser” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதனை அமைத்த பின்னர் சேவ் செய்து வெளியேறவும். இனி உங்களைப் பற்றிய தகவல்கள், நீங்கள் குரோம் பிரவுசரை மூடுகையில் நீக்கப்படும்.
இதற்கு மாற்றாக இன்னொரு வழியும் உள்ளது. குரோம் வெப் ஸ்டோரில், Click&Clean extension என்ற ஒரு எக்ஸ்டன்ஷன் புரோகிராம் கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து, இன்ஸ்டால் செய்திடவும்.
இதனை இன்ஸ்டால் செய்த பின்னர், Click&Clean என்ற ஒரு பட்டன் பிரவுசரின் டூல் பாரில் இருக்கும். இதனைக் கிளிக் செய்து, Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Extra என்பதன் கீழாக, “Delete private data when Chrome closes” என்பதில் enable செய்து இயக்கவும். இதில், எந்த வகை டேட்டா நீக்கப்பட வேண்டும் என்பதனையும் நீங்கள் வரையறை செய்திடலாம். இதன் பின்னர், உங்கள் இணைய உலா குறித்த அனைத்து தகவல்களும் நீக்கப்படும்.
ஆனால், ஒன்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். நீங்கள் சென்று பார்த்த இணைய தளங்கள் அனைத்தின் முகவரிகளும், நினைவில் கொள்ளாமல் நீக்கப்படுவதால், இணைய தள முகவரிகள், இனி, தானாக முழுமையடையாது. நீங்கள் தான் முழுமையாக டைப் செய்திட வேண்டியதிருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக