கணணி மையம் (Web Browsers) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கணணி மையம் (Web Browsers) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 24 ஜூன், 2018

ஃபயர்பாக்ஸில் புதிய வசதி | Side View

ஃபயர்பாக்ஸ் பிரவுசரில் சைடுபார் எனும் வசதி இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். இதேபோல இப்போது சைடுவியூ எனும் வசதியை ஃபயர்பாக்ஸ் முன்னோட்ட அடிப்படையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதி மூலம் ஒரே நேரத்தில் இரண்டு இணையதளங்களை அருகருகே பார்க்கலாம். அதாவது யூடியூப் வீடியோ பார்த்தபடி ஷாப்பிங் செய்யலாம் அல்லது ட்விட்டர் பதிவுகளைப் பார்த்தபடி வேறு ஒரு தளத்தைப் பார்க்கலாம். ஃபயர்பாக்ஸ் சோதனை வசதிகளின் கீழ் இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, இதைத் தனியே தரவிறக்கம் செய்து பயன்படுத்த வேண்டும்.
தரவிறக்கம் செய்
Share |

வெள்ளி, 24 பிப்ரவரி, 2017

கூகுள் குரோமில் பலருக்கு தெரியாத ஷார்ட் கட் வசதிகள்

உலகின் பெரும்பாலான இண்டர்நெட் பயனாளிகள் உபயோகிக்கும் பிரெளசர் கூகுள் குரோம் என்பது அனைவரும் அறிந்ததே. பயன்படுத்துவதற்கு எளிதாக உள்ள இந்த பிரெளசரை கோடிக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

புதன், 8 பிப்ரவரி, 2017

ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ்!

மொஸில்லா ஃபயர்பாக்ஸ் நிறுவனத்தினர் தற்போது வெளியிட்டுள்ள புதிய புரௌசர் ஃபயர்பாக்ஸ் ஃபோகஸ். இந்த புரௌசர் ஐபோன் பயனாளிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்று கூறினால், அது மிகையாகாது.

செவ்வாய், 31 ஜனவரி, 2017

எட்ஜ் பிரவுசரில் அடோப் ப்ளாஷ் பிளேயர் இயக்கத்தை நிறுத்துவதற்கான வழி

உங்கள் பிரவுசரில் அதன் இயக்கம் நிறுத்தப்பட்டே அமைக்கப்பட்டிருக்கலாம். பொதுவாக, ப்ளாஷ் பிளேயரை மட்டுமே சார்ந்து அமைக்கப்படும் இணைய தளங்கள் மட்டுமே, அதை இயக்குமாறு பாப் அப் செய்தி தரும். எட்ஜ் பிரவுசரில், ப்ளாஷ் இயக்கப்பட்டிருந்தால், அதனை நிறுத்தி வைக்க வழி தரப்பட்டுள்ளது.

பிரவுசர்கள் தரும் அறிவிப்புகளைத் தடுக்க

இப்போது நாம் பயன்படுத்தும் பிரவுசர்கள் அனைத்துமே, அவற்றில் இயங்கும் இணைய தளங்கள், அவை குறித்த அறிவிப்புகளை (notifications) நமக்குக் காட்டிட அனுமதி அளிக்கின்றன. அதற்கேற்ற வகையில், பிரவுசர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஏதேனும், செய்தி மற்றும் வர்த்தக ரீதியிலான இணைய தளங்களைப் பார்க்கையில், உடனே ஒரு பாப் அப் விண்டோ காட்டப்படும். “இந்த தளத்திலிருந்து எந்த தகவலையும் நீங்கள் காணத் தவறாமல் இருக்க வேண்டுமென்றால், நாங்கள் எங்கள் அறிவிப்புகளை உங்களுக்குத் தருகிறோம். தரட்டுமா?” என்று அதில் கேள்வி இருக்கும்.

செவ்வாய், 29 நவம்பர், 2016

பத்து கோடி பயனாளர்களின் யு.சி. பிரவுசர்

அலிபாபா மொபைல் பிசினஸ் குரூப் என்னும் நிறுவனம் வழங்கும் யு.சி. பிரவுசரை (UC Browser), இந்தியாவில் மாதந்தோறும் 10 கோடிக்கும் மேலானவர்கள் பயன்படுத்தி வருவதாக, அந்நிறுவனம் அறிவித்துள்ளது. Stat Counter என்னும் ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ள தகவல்களின்படி, இந்தியாவில் 57% போன்களில் இந்த பிரவுசர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குரோம் விரிவாக்க செயலிகளை நீக்கும் முன்

பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் பிரவுசராக குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதற்கான எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள் எனப்படும் நீட்சி செயலிகள், பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன. குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம்.

ஞாயிறு, 25 செப்டம்பர், 2016

டார்க்வெப் தெரியுமா உங்களுக்கு? தெரியவேண்டாம் ப்ளீஸ்!

முன்குறிப்பு: இணையத்தின் இருட்டுப் பக்கங்கள் குறித்த இந்தப் பதிவு, உங்களை அலர்ட் செய்ய மட்டுமே!

டார்க்வெப் - இணையத்தில் அதி தீவிரமாய் உலவும் ஆட்களுக்கு இந்த வார்த்தை பரிச்சயமாகி இருக்கும். இன்னும் சிலருக்கு சமீபத்தில் கேள்விப்பட்டதை போல இருக்கலாம். கபாலி படம் டார்க்வெப்பில்தான் ரிலீஸுக்கு முன் லீக்கானது. ஆனால் கபாலி பரபரப்பில் இதைப் பற்றி எல்லாரும் மறந்துபோனார்கள். உண்மையில் கபாலியை விட ஆயிரம் மடங்கு திருப்பங்களும் 'திடுக்' குகளும் நிறைந்த இடம் இந்த டார்க்வெப்.

செவ்வாய், 24 மே, 2016

இணையத்தில் பின் தொடரலைத் தடுக்க

இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, அவ்வாறு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

புதன், 18 மே, 2016

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்க

குரோம் பிரவுசரின் வேகத்தை அதிகரிக்கக் கீழ்க்காணும் செயல்பாடுகளை மேற்கொள்ளுங்கள். அவற்றை இங்கு சுருக்கமாகத் தருகிறேன்.

1. குரோம் பிரவுசருக்கான அப்டேட் பைல்களைத் தரவிறக்கம் செய்து மேம்படுத்திக் கொள்ளவும். இதற்கு chrome://help என அதன் அட்ரஸ் பாரில் டைப் செய்து, சென்று, அதில் தரப்படும் வழிகளைப் பின்பற்றவும்.

செவ்வாய், 17 மே, 2016

எட்ஜ் பிரவுசர்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பின்னரும், பலர் எட்ஜ் பிரவுசரைப் பயன்படுத்தலாமா, வேண்டாமா? என்ற தயக்கத்தில் உள்ளனர். விண்டோஸ் 10 சிஸ்டத்தின் மிகச் சிறந்த பயன் தரும் ஒரு செயலியாக எட்ஜ் பிரவுசர் கிடைத்துள்ளது. தேவையற்ற சந்தேகங்களால், இந்த பிரவுசர் தரும் புதிய பல வசதிகளை இழந்துவிடக் கூடாது.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

குரோம் பிரவுசர்: சில குறிப்புகள்

இணைய உலா வர பெரும் அளவில் பயன்படுத்தப்படும் பிரவுசர்களில், குரோம் பிரவுசர் முதல் இடம் கொண்டுள்ளது. நம் விருப்பத்திற்கேற்ப அதனை வழி அமைத்துக் கொள்ளும் வசதியே இதற்குக் காரணம். மற்றும் இது தரும் பாதுகாப்பு, நம்மை வழி நடத்தும் இடைமுகம், தொடர்ந்து வழங்கப்படும் புதிய வசதிகள் என இதன் தன்மைகள், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைத் தொடர்ந்து உயர்த்தி வருகிறது.

திங்கள், 2 நவம்பர், 2015

பிரவுசரை வைரஸ் தாக்குதலிலிருந்து காப்பாற்ற

உங்கள் கம்ப்யூட்டரில் செயல்படும் பிரவுசர் செயலியை வைரஸ் புரோகிராம்கள் கைப்பற்றலாம்; செயல்படவிடாமல் முடக்கிப் போடலாம். பிரவுசர் புரோகிராம்களில் உள்ள பிழையான குறியீடுகள் வழியாக, ஹேக்கர்கள் வைரஸ் அனுப்ப முயற்சிக்கலாம். அல்லது பிரவுசர்களில் பயன்படுத்தும் ப்ளக் இன் புரோகிராம்கள் வழியாகவும் இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, உங்கள் கம்ப்யூட்டரைச் செயல் இழக்கச் செய்திடலாம். இந்த முயற்சிகளை முறியடிக்கும் வகையில் நாம் சில முன்னேற்பாடான செயல்பாடுகளை எப்போதும் மேற்கொள்ள வேண்டும். அவற்றை இங்கு காணலாம்.

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

“ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல்” ActiveX Control

ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் என்பவை அடிப்படையில், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் சிறிய புரோகிராம்கள். இவை விண்டோஸ், விண்டோஸ் மீடியா பிளேயர் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆகியவை, அப்ளிகேஷன்களை அவர்களின் எல்லைக்குள்ளேயே இயக்க இந்த ஆக்டிவ் எக்ஸ் கண்ட்ரோல் புரோகிராம்கள் உதவுகின்றன. ஏறத்தாழ ஜாவா ஆப்லெட் எனப்படும் புரோகிராம்களின் செயல்பாட்டினை ஒத்ததே இவை.

பிரவுசர் தரும் பிழைச் செய்திகள்

பிரவுசர் வழியாக இணையத்தை நாடுகையில், இணைய தளங்களைத் திறக்க முற்படுகையில் நமக்குப் பலவகையான பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. இந்த பிழைச் செய்திகளைப் பார்த்தவுடன், ''அவ்வளவுதான், இந்த இணைய தளம் சரியில்லை. நம்மால் அணுக முடியாது” என்று முடிவு செய்து விலகிவிடுகிறோம். ஆனால், அந்தப் பிழைச் செய்திகளை விரிவாகப் படித்துத் தெரிந்து கொண்டால், நாம் இலக்கு வைத்திடும் இணைய தளங்களில் பெரும்பாலான தளங்களைப் பிற வழிகளில் அணுகிப் பார்த்து விடலாம் என்பதே உண்மை.

ஞாயிறு, 19 ஏப்ரல், 2015

மைக்ரோசாப்ட் விரைவில் தர இருப்பது ஸ்பார்டன் (Spartan) பிரவுசர்

விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அனைவருக்கும் கிடைக்கும்போது இந்த பிரவுசர் கிடைக்கும். 'ஸ்பார்டன்' என்பது புதிய பிரவுசரின் குறியீட்டுப் பெயர் தான். இந்த பெயரிலேயே பிரவுசர் கிடைக்கலாம். அல்லது வேறு பெயரில் கிடைக்கலாம்.

புதன், 18 பிப்ரவரி, 2015

ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க

பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே தன்னிடமிருந்து நீக்கியது. வேறு சில பிரவுசர்களும் இதே போல சிலவற்றைத் தள்ளி வைத்தன.

சனி, 27 டிசம்பர், 2014

குரோம் பிரவுசரில் இணைய உலா முடிந்த பிறகு, தனிப்பட்ட தகவல்களை, பிரவுசரே அழித்துவிடும் வகையில் செட் செய்திட

பொதுவாக, இணைய பிரவுசர்கள், நம் இணைய உலா சார்ந்த தகவல்களைப் பதிவு செய்து கொள்கின்றன. இவை ஹிஸ்டரி, குக்கி பைல்கள், தேடல்கள், டவுண்லோட் செய்தவை மற்றும் நம் இணைய உலா சார்ந்த அனைத்து தகவல்களும் பதியப்படுகின்றன. அந்த தகவல்களை, பிரவுசர் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்கிறது. ஆனால், இவற்றை நாமாகத்தான் அழித்து வருகிறோம். நாம் கேட்டுக் கொண்டால் தான், பிரவுசர் இவற்றை அழிக்கிறது. இருப்பினும் அனைத்து பிரவுசர்களும், அவையே அழித்துக் கொள்ளும் வகையில் செட் செய்வதற்கான வழிகளைக் கொண்டுள்ளன.

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

அறியப்படாத ஐந்து பிரவுசர்கள்

இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன.

திங்கள், 27 ஜனவரி, 2014

பிரவுசர் பேவரிட்ஸ் மாற்றம்

இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பயன்படுத்துபவர்களில் பலர், தாங்கள் ஏற்கனவே அமைத்த, தங்களுக்குப் பிடித்தமான இணைய தளங்களின் முகவரிகள் அடங்கிய பேவரிட்ஸ் பட்டியலை எப்படி, தங்களின் புதிய பதிப்பிற்கு மாற்றிக் கொள்வதென வழியைத்தேடுகின்றனர். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மேம்படுத்தப்பட்ட பதிப்பு மட்டுமின்றி, வேறு பிரவுசர்களுக்கும் மாற்றக் கூடிய வழிகளைக் காணலாம்.

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல