விண்டோஸ் லைவ் இமெயில் கிளையண்ட் புரோகிராமில், நம் மின் அஞ்சல்களைப் பெற்ற நபர், அதனைப் படித்துவிட்டார் என்பதற்கான அத்தாட்சியைப் (receipt) பெறும் வகையில் செட்டிங்ஸ் செய்திட
விண்டோஸ் லைவ் இமெயில் (Windows Live e-mail) இதற்கான வசதியைக் கொண்டுள்ளது. இங்கு receipt என்பது, நாம் யாருக்கு அனுப்பினோமோ, அவர் அதனைப் படித்துவிட்டார் என்ற மெயில் செய்திதான். இதனை குறிப்பிட்ட சர்வர்களே, தாமாக நமக்கு அனுப்பி வைக்கும்.
ஆனால், அது போல “ரசீது” அனுப்பக் கூடாது என்று செட்டிங்ஸ் அமைத்துத் தடுக்க, உங்கள் நண்பருக்கும் உரிமையினை விண்டோஸ் லைவ் மெயில் தருகிறது. நீங்கள் ரசீது பெற என்ன செட்டிங்ஸ் அமைக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம்.
1. முதலில் Live Mail inboxஐத் திறக்கவும். மேலாக இடது பக்கம் உள்ள கீழ்விரி அம்புக் குறியை அழுத்தவும்.
2. கிடைக்கும் மெனுவில், Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
3. தொடர்ந்து Mail என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது Mail Options விண்டோ திறக்கப்படும். இங்கு Receipts டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
இதன் பின்னர் Request a read receipt for all sent messages என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
இறுதியில் ஓகே கிளிக் செய்து வெளியே வரவும்.
இதே இடத்தில், மற்றவர்களிடமிருந்து நீங்கள் பெறும் அஞ்சல்களை நீங்கள் படிப்பது குறித்த ரசீதுகளை அனுப்புவது குறித்தும் செட்டிங்ஸ் அமைக்கலாம். இது போன்ற அமைப்புகளை, அனைத்து அஞ்சல்களுக்குமாக அமைப்பதே சரி. ஒவ்வொருவருக்காக தனித்தனியே செட்டிங்ஸ் அமைக்க வேண்டியதில்லை.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக