ஆங்கிலத்தில் Monopoly என்ற சொல் ஒருவரின் தன்னாளுமையைக் குறிக்கும். ஆனால், கம்ப்யூட்டர் ஓ.எஸ். குறித்துப் படிக்கையில் Duopoly என்ற சொல் இரண்டு விஷயங்களின் ஆளுமையைக் குறிக்கும். குறிப்பிட்ட ஒரு விற்பனைச் சந்தையில் இரண்டு நிறுவனங்கள் மட்டும் பெரிய அளவில் அதனை இயக்கி, தங்கள் ஆளுமைக்குள் சந்தையை வைத்துக் கொண்டால், அது Duopoly ஆகும். இந்த வகையில், கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பிரிவில், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களின் இயக்க முறைமைகள் ஆட்சி செலுத்தி வருகின்றன. மொபைல் போன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐ.ஓ.எஸ். என இரண்டும் தங்கள் ஆளுமையை நிலை நாட்டி வருகின்றன.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக