விண்டோஸ் 7ல், சிங்கிள் கிளிக் கொண்டு பைல்களைத் திறக்க விரும்பினால்...
ஸ்டார்ட் மெனு செல்லவும். இதில் கிளிக் செய்தால் தேடல் கட்டம் கிடைக்கும். இந்த தேடல் கட்டத்தில் Folder Options என டைப் செய்து என்டர் தட்டவும். கிடைக்கும் பல முடிவுகளில் Folder Options முதல் விடையாக இருக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இனி திறக்கப்படும் விண்டோவில், Select single-click to open an item என்ற வரி கிடைக்கும். இதனைத் தேர்ந்தெடுத்து, ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி, ஒரு பைலைத் திறக்க, ஒருமுறை மவுஸால் கிளிக் செய்தால் போதும்.
டிஜிட்டல் தொழில் நுட்பத்தில், அடிக்கடி மெகா ஹெர்ட்ஸ் மற்றும் கிகா ஹெர்ட்ஸ் என்று குறிப்பிடப்படுகிறது. இதில் ஹெர்ட்ஸ் என்பது எதனைக் குறிக்கிறது? இதன் அலகு எதனை அளக்கிறது?
ஹெர்ட்ஸ் என்பதனைச் சுருக்கமாக Hz என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். ஜெர்மன் பிசிக்ஸ் விஞ்ஞானி Heinrich Rudolf என்பவரின் குடும்ப பெயர் ஹெர்ட்ஸ். ரேடியோ மற்றும் எலக்ட்ரிக்கல் அலைவரிசையினை, மெட்ரிக் முறையில் அளந்திட இந்த பெயர் வைக்கப்பட்டது.
ஒரு ஹெர்ட்ஸ் என்பது ஒரு விநாடியில் ஏற்படும் ஒரு சுற்று அல்லது அசைவு (ரேடியோ அலைவரிசையில்). கம்ப்யூட்டரைப் பொறுத்த வரை இது மானிட்டருடன் அதிகம் சம்பந்தப்படுத்தி பேசப்படுகிறது. சி.ஆர்.டி. மானிட்டர் (பழைய டிவி பெட்டி போல இருப்பது) அதன் ஸ்கிரீன் இமேஜை தொடர்ந்து காட்டாமல் விட்டு விட்டுத் தான் காட்டுகிறது. ஆனால் அதனை நாம் நம் கண்களால் பார்த்தால் கண் கெட்டுப் போகும். எனவே தான் விநாடியில் பலமுறை இது விட்டு விட்டுக் காட்டப்படுகையில் இடைவெளி தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக 85 Hz என்பதில் விநாடி நேரத்தில் 85 முறை இமேஜ் பின் வாங்கப்பட்டு மீண்டும் காட்டப்படுகிறது. அத்தனை முறை காட்டப்படுவதனாலேயே இமேஜ் அப்படியே நிலையாக நிற்பது போல நாம் உணர்கிறோம்.
மெஹா ஹெர்ட்ஸ் Mehahertz (MHz) ஒரு மெஹா ஹெர்ட்ஸ் என்பது பத்து லட்சம் சுற்றுகளாகும். அதாவது ஒரு விநாடியில் பத்து லட்சம் சுற்றுகள் ஏற்படுகின்றன. இது எப்படி ஏற்படுகிறது என்பதனை படமாகவோ அல்லது வேறு வழியாகவோ விளக்குவது கஷ்டம். கம்ப்யூட்டர் பிராசசரைப் பொறுத்தவரை மெஹா ஹெர்ட்ஸ் என்பது மிகவும் சாதாரணம். ஒரு கம்ப்யூட்டர் பிராசசர், உள்ளாக அமைந்த ஒரு கடிகாரத் துடிப்பினை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. ஒவ்வொரு துடிப்பிற்கும் ஒரு செயல் மேற்கொள்ளப்படுகிறது. எத்தனை முறை இந்த துடிப்பு ஏற்படுகிறது என்பதுதான் பிராசசரின் கிளாக் ஸ்பீட் என அழைக்கப்படுகிறது. இந்த வேகம் மெஹா ஹெர்ட்ஸ் என்பதில் அளக்கப் படுகிறது.
கிஹா ஹெர்ட்ஸ் Gigahertz (GHz): கம்ப்யூட்டர் உலகில் இது கம்ப்யூட்டர் பிராசசரின் வேகத்தைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் என்பது 1000 மெஹா ஹெர்ட்ஸ். முதலில் வந்த பெர்சனல் கம்ப்யூட்டர்கள் 4.77 மெஹா ஹெர்ட்ஸ் வேகம் கொண்ட பிராசசர்களைக் கொண்டிருந்தன. அதாவது விநாடிக்கு ஏறத்தாழ 48 லட்சம் கிளாக் துடிப்புகள். தற்போதைய ப்ராசசர்களின் வேகம் கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் காட்டப்படுகிறது.
விண்டோஸ் 7 அல்டிமேட், 64 பிட் கம்ப்யூட்டரில் எப்8 அழுத்தி சேப் மோட் செல்ல முயற்சித்தால், கிடைக்க மறுக்கிறது.
இதற்கு மாற்று வழி ஒன்று விண்டோஸ் 7 வைத்துள்ளது. ஸ்டார்ட் பட்டனில் கிளிக் செய்து, கட்டத்தில் “msconfig” என டைப் செய்து எண்டர் தட்டவும். இது, System Configuration டூல் காட்டும். இதில் Boot என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
Safe Boot என்பதற்கு அடுத்து உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். “Minimal” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதனைத் தேர்வு செய்தவுடன் ஓகே கிளிக் செய்திடவும்.
இதனை அடுத்து காட்டப்படும் பாக்ஸில் ஓர் எச்சரிக்கை செய்தி இருக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடக் கேட்டுக் கொள்ளும். அதாவது, உங்களுடைய கம்ப்யூட்டரை நீங்கள் சேப் மோடில் இயக்கலாம். இதில் Restart என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது நீங்கள் அப்போது கம்ப்யூட்டரில் பார்த்துக் கொண்டிருக்கும் பணியினை முடிக்க வேண்டும் என்றால், ரீ ஸ்டார்ட் செய்திடாமல், அந்த வேலையை முடிக்கவும். அதன் பின் ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது கம்ப்யூட்டர் சேப் மோடில் இயங்கத் தொடங்கும்.
நீங்கள் சேப் மோடில் இருக்கும்போது, நீங்கள் எதை எல்லாம், கம்ப்யூட்டரில் சரி செய்திட வேண்டும் எனத் திட்டமிட்டீர்களோ, அவை அனைத்தையும் முடித்துவிடவும். பின் மீண்டும் எம்.எஸ். கான்பிக் கொடுத்து System Configuration utility விண்டோ பெறவும். இங்கு சேப் மோட் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை எடுத்துவிடவும். இல்லை என்றால், உங்கள் கம்ப்யூட்டர் தொடர்ந்து சேப் மோடில் தான் இயங்கத் தொடங்கும்.
புளுடூத் குறித்து சுருக்கமாக விளக்கம்
போன், டேப்ளட் பி.சி., லேப்டாப் கம்ப்யூட்டர் மற்றும் சில ஸ்மார்ட் டெலிவிஷன் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு இடையே ஏற்படுத்தப்படும் வயர் இணைப்பில்லா, குறுகிய தூர இணைப்பிற்கு புளுடூத் தொழில் நுட்பம் என்று பெயர்.
இவற்றுடன் ஹெட்போன், மவுஸ், கீ போர்ட், ஸ்பீக்கர், மைக் ஆகியவை தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு செயல்பட முடியும்.
உங்களிடம் புளுடூத் ஹெட்செட் இருந்தால், அதனை உங்கள் போனுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, போனை பாக்கெட்டில் வைத்தவாறே, போனில் அழைப்பவர்களுடன் பேச முடியும்.
லேப்டாப்பினைச் சற்று தொலைவில் வைத்துவிட்டு, அதில் ஒரு பாடலை இயக்கி, புளுடூத் ஸ்பீக்கரில் கேட்க முடியும். லேப்டாப் கம்ப்யூட்டரை வயர்மூலம் எல்.சி.டி. டிவியுடன் இணைத்துவிட்டு, லேப்டாப் கம்ப்யூட்டரை மூடிவைத்துவிட்டு, புளுடூத் கீ போர்ட் மூலம், டிவியைப் பார்த்தவாறே, கம்ப்யூட்டரை இயக்கலாம்.
இதுவே ஸ்மார்ட் டிவி என்றால், வை பி இணைப்பு மூலம் டிவியில் இணைய உலா வரலாம். இதன் மூலம் டேட்டாவை மாற்றிக் கொள்ளலாம். பைல்களை அனுப்பலாம். வயர்கள் இணைப்பு இல்லாமல், குறுகிய இடத்தில் இணைப்பு பெறும் வசதியை இந்த புளுடூத் தொழில் நுட்பம் வழங்குகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக