குழந்தை பாக்கியமே இல்லாது தனது வாழ்வு அஸ்தமனமாகப் போகிறது என கவலையடைந்த நபரொருவர், 1959 ஆம் ஆண்டு தனது மனைவியால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கடிதத்தின் மூலம் தனக்கு 61 வயது மகனொருவர் உள்ளதை அறிந்து இன்ப அதிர்ச்சிக்குள்ளான சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
டோனி திரபனி (81 வயது) என்ற மேற்படி நபருக்கு 1959 ஆம் ஆண்டு அவரது முன்னாள் காதலி எழுதிய கடிதத்தில், ''எனக்கு சிறிய மகன் இருக்கிறான். அவனுக்கு இப்போது 5 வயதாகிறது. நான் கூறுவது என்னவென்றால், அவன் உங்கள் மகன். அவன் 1953 ஆம் ஆண்டு நவம்பர் 13 ஆம் திகதி பிறந்துள்ளான்'' என எழுதப்பட்டிருந்தது.
அக்கடிதத்தை குழந்தை பாக்கியமற்ற டோனியின் மனைவி மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் தனது மனைவி இறந்து விட்டதால் அவரது கோப்புகளிலிருந்த அலுமாரியை டோனி சுத்திகரிக்க முயன்ற போது, அந்த அலுமாரி இழுப்பறையில் தனது காதலியால் எழுதப்பட்ட கடிதம் மறைத்து வைக்கப்பட்டுள்ளதை கண்டு திகைப்படைந்துள்ளார்.
இதனையடுத்து தனது 61 வயது மகனான சாமுவேல் சைல்ட்ரெஸை அவர் தேடிக் கண்டுபிடித்துள்ளார்.
தனது தந்தை தன்னை வேண்டாமென ஒதுக்கியிருந்ததாக இதுவரை காலமும் கருதியிருந்ததாக சாமுவேல் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக