சிரியா மற்றும் ஈராக்கில் தம்மால் கைப்பற்றப்பட்ட பிராந்தியங்களில் இஸ்லாமிய தேசத்தை பிரகடனப்படுத்தியுள்ள ஐ.எஸ். போராளிகள் திருடர் ஒருவருக்கு கையை துண்டித்து தண்டனை வழங்குவதையும் ஆபாச படங்களை பார்வையிட்ட ஒருவருக்கு சவுக்கால் அடித்து தண்டனை நிறைவேற்றுவதையும் வெளிப்படுத்தும் புகைப்படங்களை அந்தப் போராளிக் குழு வெளியிட்டுள்ளது.
திருட்டுக் குற்றச்சாட்டுக்குள்ளானவருக்கு இயுபரேட்ஸ் மாகாணத்திலுள்ள காயிம் நகரில் கையை துண்டித்து தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதன்போது பெருந்தொகையான பார்வையாளர்கள் முன்பாக முகமூடியணிந்த ஐ.எஸ். போராளியொருவர் தண்டனை விதிப்புக்குள்ளான நபரின் கையை மேசையில் வைத்து, அதை வெள்ளைத் துணியொன்றால் மூடுகிறார்.
அந்த மேசையில் வெட்டுக் காயங்களில் நோய் தொற்று ஏற்படுவதை தடுப்பதற்கான மருந்தை உள்ளடக்கிய போத்தலொன்று காணப்படுகிறது.
தொடர்ந்து குறிப்பிட்ட நபரின் மணிக்கட்டு கயிற்றால் கட்டப்படுகிறது.
இதனையடுத்து அந்த நபரின் கரம் வெட்டுக் கத்தியால் வெட்டி துண்டாக்கப்படுகிறது.
இதன் போது துண்டிக்கப்பட்ட கரப் பகுதி தூக்கி வீசப்பட்டு அந்தரத்தில் பறந்து விழுகிறது.
அந்தக் கரம் சரியான முறையில் துண்டிக்கப்படாமை காரணமாக அதன் தசைப் பகுதி கிழிந்து தொங்குவதை போராளிகளால் வெளியிடப்பட்ட துல்லியமான புகைப்படங்கள் வெளிப்படுத்துகின்றன.
அதேசமயம் கிழக்கு சிரிய நகரான டெயிர் எஸோரில் ஆபாச வீடியோ படங்களை கண்டுகளித்த குற்றச்சாட்டில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கடி தண்டனை நிறைவேற்றப்படும் காட்சியை உள்ளடக்கிய புகைப்படங்களும் ஐ.எஸ். போராளிகளால் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்படி வீடியோ காட்சியில் ஐ.எஸ். போராளிகளின் வழக்கத்தின் பிரகாரம் தண்டனை நிறைவேற்றத்துக்கு உள்ளான இளைஞர், தனக்கு தண்டனை வழங்கிய ஐ.எஸ். போராளியை கட்டியணைக்கிறார்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக