தமது சுகவீனமுற்ற மகளுக்கு சிகிச்சையளிக்க பண வசதியில்லாததால் தமது மகனை வீதியில் விற்க பெற்றோர் முயற்சித்து வரும் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
சீனாவின் கிழக்கு ஷான்டோங் மாகாணத்தில் கிங்டவோ நகரிலுள்ள வெயிஹாய் வீதியில் மெங் ஸியாங்யான் (29 வயது) என்ற மேற்படி தாயார், தனது இரட்டைக் குழந்தைகளில் ஆண் குழந்தையை விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அந்த இரட்டைக் குழந்தைகளில் ஒருவரான பெண் குழந்தைக்கு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் குருதிப் புற்றுநோய் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தமது மகளை குணமாக்க தமது சேமிப்பு முழுவதையும் செலவிட்ட மெங் ஸியாங்யானும் அவரது கணவரும் உறவினர்களிடமும் நண்பர்களிடமும் பணத்தை கடனாக பெற்று சிகிச்சையை தொடர நேர்ந்தது.
அவர்களது மகளுக்கு சிகிச்சை அளித்து வரும் றிஸவோ அரசாங்க மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள், அந்த சிறுமிக்கு ஒவ்வொரு 10 நாட்களுக்கும் ஒரு தடவை இரசாயன சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தற்போது சிகிச்சையை தொடர பண வசதியில்லாத மேற்படி தம்பதி, தமது மகனை விற்க தீர்மானித்துள்ளனர்.

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக