திங்கள், 5 ஜனவரி, 2015

மணிக்­கட்டில் வலி

கத்­தியைப் பிடிச்சு மரக்­க­றி­தன்னும் வெட்ட முடி­யுதே. இந்தக் கையாலை பெருந்­தொல்லை” என்­றவர் ஒரு பெண்­மணி என்­பதைப் புரிந்து கொண்­டி­ருப்­பீர் கள்.

கை என்று பொது­வாகச் சொன்­னாலும் மணிக்­கட்­டைத்தான் குறிப்­பிட்டார். அது வும் ஒரு பக்­கத்தில் மட்­டுமே. இன்னும் தெளி­வாகச் சொன்னால் மணிக்­கட்டின் வெளிப்­பு­ற­மாக கட்டை விரலும் மணிக்­கட்டும் சந்­திக்கும் இடத்­தில்தான் வலி.



நோயின் குணங்கள்

மணிக்­கட்டின் வெளிப்­பு­றத்தில் ஏற்­படும் இந்த நோய்க்கு வாயில் நுழைய மறுக்கும் ஒரு பெயர் மருத்­து­வத்தில் உண்டு. ‘டி குயர்­வெ­யினஸ் ரீனோ சைனொ­வைடிஸ்’ என்­ப­தாகும். இது மூட்­டு­களில் ஏற்­படும் மூட்டு நோயல்ல.

அதா­வது ஆர்த்­த­ரைட்டிஸ் நோயல்ல. மணிக்­கட்டின் ஓர­மாக ஒரு திசுப்­ப­ட­லத்தின் ஊடாக சென்று பெரு­வி­ரலை அடையும் தசை­நாணில் ஏற்­படும் நோயா கும். பெரு­வி­ரலை ஆட்ட வளைக்க உத­வு­வது அந்தச் தசை­நாண்தான். தசை­நாணை சவ்வு என்றும் சொல்­லலாம்.

இந் நோய் உள்­ள­வர்­க­ளுக்கு மணிக்­கட்டை வளைக்கும் போதும், ஏதா­வது பொருளை பற்றிப் பிடிக்­கும்­போதும், வலி அதி­க­மாகும்.

இந் நோய் ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­ப­தற்­கான காரணம் தெளி­வாக தெரி­ய­வில்லை. ஆயினும் அந்தத் தசை­நாண்­களை அள­விற்கு அதி­க­மாகப் பயன்­ப­டுத்­து­வ­தாக இருக்­கலாம்.

வலிதான் இந்­நோயின் முத­லா­வதும் முக்­கி­ய­மா­ன­து­மான அறி­கு­றி­யாகும். பெரு­வி­ரலின் அடிப்­ப­குதி முதல் மணிக்­கட்­டு­வரை இந்த வலி நீடிக்கும். விரலை ஆட்டி வேலை செய்­யும்­போது வலி அதி­க­ரிக்கும். அந்த இடத்தில் சற்று வீக்­கமும் ஏற்­ப­டலாம்.

நாளாந்த வேலை­களின் போது பெரு­வி­ர­லையும் மணிக்­கட்­டையும் பயன்­ப­டுத்தும் செயற்­பா­டு­களில் சிரமம் ஏற்­படும். விரலை மடக்கும் போது திடீ­ரென இறுகிப் பின்னர் விடு­வ­து­போன்ற உணர்வு சிலரில் ஏற்­ப­டு­வ­துண்டு.

வலியைத் தவிர பெரு­விரல் மற்றும் சுட்டு விர­லிகள் மரப்­பது போன்ற உணர்வும் சிலரில் ஏற்­ப­டு­வ­துண்டு.

ஆரம்ப நிலையில் அக்­க­றைப்­ப­டுத்­தாமல் விட்டால் வலி­யா­னது முன்­பு­ற­மாகப் பெரு­வி­ர­லுக்கும், பின்­பு­ற­மாக முன்­னங்­கை­யிற்கும் பரவி வேதனை அதி­க­மாகும்.

எவ்­வாறு ஏற்­ப­டு­கி­றது

பெரு­வி­ரலை இயக்கும் இரு தசை­நாண்கள் மணிக்­கட்டுப் பகு­தியில் ஒரு திசுப்­ப­ட­லத்தின் ஊடா­கவே செல்­கின்­றன. அத் தசை­நாண்­க­ளுக்கு வேலை அதி­க­ரிக்­கும்­போது அவற்றில் அழற்சி ஏற்­பட்டுத் தடிப்படையும். இதுவே நோய்க்­கான முக்­கிய கார­ண­மாக இருக்­கி­றது.

இருந்­த­போதும் ரூமட்­ரொயிட் ஆர்­தி­ரைடிஸ் போன்ற மூட்டு நோய்­களின் போதும் ஏற்­ப­டலாம்.

மணி­கட்­டிற்கு அல்­லது அத்­த­சை­நார்­களில் அடி­ப­டு­வதால் உட்­கா­யங்கள் ஏற்­பட்டு, அதன் விளை­வா­கவும் இந்நோய் ஏற்­பட வாய்ப்பு உண்டு.

எவ­ருக்கும் இந்நோய் ஏற்­ப­டலாம் என்­ற­போதும் 30 முதல் 50 வய­தா­ன­வர்­க­ளி­டையே அதிகம் காணப்­ப­டு­வ­தாகச் சொல்­லப்­ப­டு­கி­றது. அத்­தசை நாண்­க­ளுக்கு அதிக வேலை கொடுக்கும் பணி­களில் ஈடு­ப­டு­ப­வர்­க­ளுக்கு வரு­வ­தற்­கான சாத்­தியம் அதிகம்.

எனவே, தோட்­டத்தில் எதை­யா­வது கிண்­டு­வது வெட்­டு­வது போன்ற வேலைகள், கொல்ப், டெனிஸ் போன்ற விளை­யாட்­டுக்கள், குழந்­தையைத் தூக்­கு­வது போன்­ற­வற்றைத் தொடர்ந்து செய்­யும்­போது இப் பிரச்­சினை தோன்­றலாம். பெண்­களில் இது தோன்­று­வது அதிகம். கர்ப்­ப­மாக இருக்­கும்­போதும் ஏற்­ப­டு­வ­துண்டு. பொது­வாக நடுத்­தர வய­தி­ன­ரி­டையே எற்­பட்ட போதும் பேரப் பிள்­ளை­களைப் பரா­ம­ரிக்கும் வேலை தலையில் வீழ்­வதால் சற்று வய­தான பெண்­க­ளிலும் இங்கு காண­மு­டி­கி­றது.

வலி வந்தால் என்ன செய்­யலாம்

உங்­க­ளுக்கு எந்­தெந்த வேலைகள் செய் தால் வலி எடுக்­கி­றதோ அவற்றைச் செய்­வதைத் தவி­ருங்கள்.

வலி உள்ள இடத்தில் ஐஸ் வைப்­பது வலி­யையும் வீக்­கத்­தையும் தணிக்க உதவும்.

வலி­நி­வா­ரணி மாத்­தி­ரை­களை உட்­கொள்­ளலாம்.

மணிக்­கட்­டையும் பெரு­வி­ர­லையும் ஆடாமல் வைத்து ஓய்வு கொடுப்­ப­தற்கு பன்டேஸ் பண்­ணு­வது உதவும். இதற்­கான Splint, brace போன்­றவை மருந்­த­கங்­களில் கிடைக்கும். இவற்றை பகல் முழு­வதும் அணிந்­தி­ருக்­கலாம்.

வலியைத் தணிப்­ப­தற்கு சில பயிற்­சிகள் உதவும். வலி­யுள்ள இடத்தில் மருத்­து­வர்கள் ஸ்டிரோயிட் ஊசி மருந்து போடு­வ­துண்டு. இதுவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

மிக அரி­தாக வலி மிகக் கடு­மை­யாக இருந்தால் சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­ப­டு­வ­துண்டு. தசை­நாணை அழுத்திப் பிடிக்கும் திசுப்­ப­ட­லத்தை வெட்டி இளக்­கு­வதன் மூலம் தசை­நாண்­களை இல­கு­வாக அசை­ய­வி­டு­வார்கள்.

பயிற்­சிகள்

பல்­வேறு வித­மான பயிற்­சிகள் உள்­ளன டெனிஸ் பந்தை அழுத்தல் பயிற்சி வலி­யுள்ள கையில் ஒரு டெனிஸ் பந்தை பற்றிக் கொள்­ளுங்கள். மெது­வாக பந்தின் மீது அழுத்­துங்கள். வலி ஏற்­ப­ட­வில்லை எனில் அழுத்­தத்தை சற்று கூடு­த­லாகப் பிர­யோ­கி­யுங்கள். சுமார் 5 செக்கன்க­­ளுக்கு அழுத்தி வைத்­தி­ருந்­து­விட்டு பின்னர் பிடியைத் தளர்த்­துங்கள்.

இவ்­வாறு 5 முதல் 10 தட­வைகள் செய்­யுங்கள். தினமும் 4-5 தட­வைகள் இப் பயிற்­சியைத் திரும்பச் செய்­யுங்கள்

இப் பயிற்­சியைச் செய்­வ­தற்கு முன்­னரும் பின்­னரும் அந்த இடத்­திற்கு சுடுநீர் ஒத்­தடம் கொடுக்­கலாம். அதைத் தொடர்ந்து மறு கையால் மெது­வாக அவ்­வி­டத்தை நீவி மசாஜ் பண்­ணு­வது உதவும்.

முழங்கை மணிக்­கட்டு பயிற்சி

வலி­யுள்ள பக்கக் கையை முழங்கைப் பகு­தியை மடிக்­காது, நேராக நீட்­டுங்கள். அதே நேரம் பெரு­வி­ரலை ஏனைய நான்கு விரல்­களும் பொத்­தி­யி­ருக்­கு­மாறு மூடுங்கள். இப்­பொ­ழுது உங்கள் மணி­கட்டை சின்ன விரல் பக்­க­மாக படத்தில் காட்­டி­ய­படி மெது­வாக மடி­யுங்கள். அப்­போது வலி ஏற்­ப­டு­வ­தாக உணர்ந்தால் மேலும் மடிப்­பதைத் தொட­ராது நிறுத்­துங் கள். 5 செகண்­டு­க­ளுக்கு அந்­த­ளவில் வைத்­தி­ருங்கள். வலி அதி­க­ரிக்­க­வில்லை எனில் 5 முதல் 10 தட­வைகள் இதே பயிற்­சியைத் தொட­ருங்கள்

மணிக்­கட்டுப் பயிற்சி

வலி­யுள்ள பக்­கத்தின் முழங்­கையை நேராக நீட்­டுங்கள். அக் கையின் பிற்­பு­றத்தை மற்றக் கையால் பற்றி அது மணிக்­கட்டுப் பகு­தியில் முன்­பு­ற­மாக வளை­யு­மாறு சற்று அழுத்தம் கொடுங்கள். 10 முதல் 30 செக்கண்­டு­க­ளுக்கு அவ்­வாறே பிடித்­தி­ருங்கள்.

அடுத்து நோயுள்ள கையின் பெரு­விரல் தவிர்ந்த ஏனைய நான்கு விரல்­க­ளையும் மற்றக் கையால் உட்­பு­ற­மி­ருந்து வெளிப்­பு­ற­மாகத் தள்­ளுங்கள். 10 முதல் 30 செக்கண்­டு­க­ளுக்கு அவ்­வாறே பிடித்­தி­ருங்கள். மூன்று தட­வைகள் இவற்றை திரும்பச் செய்­யுங்கள். தினமும் மூன்று தட­வைகள் செய்ய வேண்டும்.

கைலாகுப் பயிற்சி

கைலாகு கொடுக்­கும்­போது உங்­க­ளது மணிக்­கட்டு, முன்­னங்கை, மற்றும் விரல்கள் ஆகி­ய­வற்றின் தசை­நார்கள் இறுக்­க­மின்றி தளர்­கின்­றன. இது இந்­நோய்க்கு நல்ல பயிற்­சி­யாகும். ஆனால் அதற்­காக மற்­ற­வர்­களின் கைகளை பயற்சிக்காக எதிர்பார்க்க முடியாது.

எனவே உங்களது நோயுள்ள கையால் மற்றக் கையைப் பற்றிப் பயிற்சி செய்யுங் கள். கைகளை இறுக்கமாகப் பற்றாமல் தளர்ச்சியாகப் பற்றிக் கொண்டு கைலாகு கொடுப்பது போல மேல் கீழாக சற்று ஆட்டுங்கள். அதேபோல பக்கவாட்டிலும் சில தடவை ஆட்டுங்கள். இது 30 செக்கண் டுகள் வரை தொடரலாம்.

மேலும் இரண்டு தடவைகள் செய்யுங்கள்

இறுதியாக ஓய்வு மற்றும் பயிற்சிகளின் பயனாக அப் பெண்ணின் மணிக்கட்டு வலி தணிந்து விட்டது. மீண்டும் அத் தசைநார்களுக்கு அதீத வேலை கொடுக்காது கவனம் எடுப்பதாகச் சொல்லியிருப்பதால் மீண்டும் வலி வராது என நம்பலாம்.

டொக்டர்.எம்.கே.முரு­கா­னந்தன். குடும்ப மருத்­துவர்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல