திங்கள், 5 ஜனவரி, 2015

உயிரைக் கையில் பிடித்தவாறு விமானங்களில் பயணிக்க வேண்டிய நிலை

உலகில் அண்­மைக்­கா­ல­மாக அதி­க­ரித்­து­வரும் விமான விபத்­துக்­களால் உல­க­ளா­விய ரீதியில் மக்கள் மத்­தியில் ஒரு­வித பீதி நில­வு­கின்­றது. உயிரைக் கையில் பிடித்­த­வாறு மர­ண­ப­யத்­து­ட­னேயே விமானப் பய­ணங்­களை மேற்­கொள்ள வேண்­டிய நிலை இன்று ஏற்­பட்­டுள்­ளது. மறு­புறம் இது நவீன தொழில்­நுட்­பத்­துக்கு சவா­லா­கவும் மாறி­யுள்­ளது. மேலும், விமானப் போக்­கு­வ­ரத்துத் துறையில் பல்­வேறு நவீன தொழில்­நுட்ப வச­திகள் மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், அவற்றால் விபத்­துக்­களை தடுக்க முடி­ய­வில்லை. அதுவும், அண்­மைக்­கா­ல­மாக இவ்­வா­றான சம்­ப­வங்கள் அடுத்­த­டுத்து நிகழ்ந்து வரு­கின்­றன. அதில் ஓர் அங்­க­மாக ஏர் ஏசியா விமான விபத்தும் இடம்­பெற்­றுள்­ளது.



கடந்த 28ஆம் திகதி மலே­சி­யாவைச் சேர்ந்த ‘எயார் ஏசியா’ விமான நிறு­வ­னத்தின் ‘ஏ320–200’ எயார் ஏசியா விமானம், இந்­தோ­னே­ஷி­யாவில் உள்ள சுர­பவா என்ற இடத்தில் இருந்து சிங்­கப்­பூரை நோக்கிச் சென்­றுள்­ளது. இந்த விமா­னத்தில் 162 பேர் பயணம் செய்­துள்­ளனர்.

இந்­நி­லையில் குறித்த விமானம் புறப்­பட்டு சுமார் 42 நிமி­டங்­களில், சிங்­கப்­பூர்–­ஜ­கார்த்தா விமான தகவல் பிராந்­தி­யத்தின் கட்­டுப்­பாட்டு மையத்­து­ட­னான தொடர்பை இழந்து திடீ­ரென மாய­மா­னது. இத­னை­ய­டுத்து சிங்­கப்பூர், மலே­சியா, அவுஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­களின் கடற்­ப­டை­யினர் ஒன்­றி­ணைந்து தேடுதல் வேட்­டையில் ஈடு­பட்­டனர்.

இதே­வேளை காணாமற்போன எயார் ஏசியா 8501 விமா­னத்தை ஜாவா கடலின் அடித்­த­ளத்தில் தேடு­வ­தற்­காக அனுப்­பப்­பட்ட தன்­னி­யக்க நீர் மூழ்கி உப­க­ர­ண­மொன்று அந்த விமா­னத்தின் சிதைவை கண்­டு­பி­டித்­துள்­ள­தாக இந்­தோ­னே­ஷிய அதி­கா­ரிகள் தெரி­வித்­தனர்.

அந்த விமா­ன­மா­னது கடற்­மேற்­ப­ரப்­பி­லி­ருந்து 24 மீற்­ற­ரி­லி­ருந்து 30 மீற்றர் வரை­யான ஆழத்தில் தலை­கீ­ழான நிலையில் காணப்­பட்­ட­தாக இந்­தோ­னே­ஷிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலை­யத்தில் உறு­தி­செய்­தனர். ஆரம்­பத்தில் கட­லி­லி­ருந்து 40 சட­லங்கள் வரை மீட்­கப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்த நிலையில் 7 சட­லங்கள் மீட்­கப்­பட்­டதை அந்த அதி­கா­ரிகள் உறு­தி­ப­டுத்­தி­யுள்­ளனர்.

அதே­ச­மயம் கடலின் கீழ் பகு­தியில் விமா­னத்தின் உடல் பகு­தி­யி­னது என நம்­பப்­படும் நிழற்­தோற்­ற­மொன்றும் மீட்பு உத்­தி­யோ­கத்­தர்­களால் அடை­யாளம் காண ப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் அந்த விமா­னத்தில் பய­ணித்த ஏனை­ய­வர்­களின் சட­லங்கள் கடலின் கீழ் மூழ்­கி­யுள்ள விமா­னத்­துக்குள் சிக்­கி­யி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கி­றது. எயார் ஏசியா விமா­னத்தில் பய­ணித்த மூவ­ரது சட­லங்கள் ஒருவர் கையை ஒருவர் பற்­றிய நிலையில் ஜாவா கடலில் மிதந்­த­தாக தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டி­ருந்த விமா­ன­மொன்றின் விமானி தெரி­வித்தார்.

மேற்­படி விமானம் காணாமல் போய் 3 நாட்கள் கடந்த நிலையில் பொர்­னியோ தீவுக் கடற்­க­ரைக்கு அப்பால் விமா­னத்தின் சிதை­வுகள் கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அங்­கி­ருந்து மீட்­கப்­பட்ட சட­லங்­களின் எண்­ணிக்கை குறித்து வெவ்­வேறு அதி­கா­ரிகள் வெவ்­வேறு தக­வல்­களை வழங்கி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த விமா­னத்தை தேடும் நட­வ­டிக்­கையில் விமா­னங்கள் பலவும் ஈடு­பட்­டி­ருந்த நிலையில் அந்த சிதை­வு­களை 38 வய­தான இந்­தோ­னே­சியா மீன­வ­ரான மொஹமட் தஹா என்­ப­வரே முதன் முத­லாக கண்டு அது தொடர்பில் அறி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

கடலில் உலோகப் பொருட்கள் மிதப்­பதை தஹா கண்­ட­போதும் அவை விமா­ன­மொன்­றுக்­கு­றி­யவை என்­பதை அவர் தனது கிரா­ம­மான பெலின்­யு­விற்கு திரும்பும் வரை அறிந்­தி­ருக்­க­வில்லை. இது தொடர்பில் தஹா கூறு­கையில், "கடலில் சிறிதும் பெரி­து­மாக பாகங்கள் மிதந்­தன. அவற்றுள் பெரி­யது சுமார் 4 மீற்றர் நீளமும் இரு மீற்றர் அக­ல­மு­மு­டை­ய­தாக இருந்­தது. அவை எயார் ஏசியா விமா­னத்தின் வர்­ணத்தை ஒத்­த­வை­யாக இருந்­தன" என்று கூறினார்.

விமா­னத்தின் கறுப்­பு­ப்பெட்டி இது­வரை மீட்­கப்­ப­டாத போதும் சீரற்ற கால­நி­லையே இந்த விமான அனர்த்­தத்­திற்கு காரணம் என தான் நம்­பு­வ­தாக எயார் ஏசியா நிறுவ குழு­மத்தின் தலைமை நிறை­வேற்­ற­தி­காரி டோனி பெர்­னாண்டஸ் தெரி­வித்தார்.

அந்த விமா­னத்தில் பய­ணித்த அனை­வ­ருமே உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என நம்­பப்­ப­டு­கிற நிலையில் கடல் பரப்பில் உயிர்­காப்பு மித­வை­யொன்று மிதந்து வந்­தமை விமா­னத்தில் பய­ணித்­த­வர்கள் எவ­ரா­வது உயிர் தப்­பி­யி­ருக்­கலாம் என்ற எதிர்­பார்ப்பை தோற்­று­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது.

அதே­ச­மயம் மீட்­கப்­பட்ட சட­லங்­க­ளி­லொன்று உயிர்க் காப்பு மேலங்­கியை அணிந்த நிலையில் காணப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேற்­படி விமா­னத்தின் சிதை­வு­களை தேடும் பணி­களில் இந்­தோ­னே­சியா, மலே­ஷியா, அவுஸ்­தி­ரே­லியா, சிங்­கப்பூர் உள்­ளிட்ட நாடு­களைச் சேர்ந்த சுமார் 30 கப்­பல்கள், 15 விமா­னங்கள், 7 ஹெலி­கொப்­டர்கள் ஈடு­பட்­டன.

அதே­வேளை உயி­ரி­ழந்த பய­ணி­களின் குடும்­பங்­க­ளுக்கு இந்­தோ­னே­ஷிய ஜனா­தி­பதி ஜோகோ விடோடா, மலே­சிய பிர­தமர் நஜீப் ரஸாக் ஆகியோர் ஆழ்ந்த கவலை தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வி­பத்தில் திடீர் திருப்பம் என்­ன­வென்றால், எயார் ஏசியா விமானம் விபத்­துக்­குள்­ளா­கு­மென்று முன்­கூட்­டியே தனது வலைப்­ப­திவில் எழு­திய நபர் ஒரு­வரால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் ஏசியா விமா­னத்தை ஒரு "கறுப்புக் கரம்" குறி வைத்­துள்­ள­தாக டிசம்பர் 15ஆம் திகதி தனது வலைப்­ப­திவில் எழு­தி­யுள்ளார். இவர் வெளி­யிட்ட ஒரு போஸ்டில், எயார் ஏசி­யாவை ஒரு நிழல் அமைப்பு குறி வைத்­துள்­ளது என கூறி­யுள்ளார்.

மேலும், இதற்கு முன்பு பாதிப்­புக்­குள்­ளான எம்.எச் 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமா­னங்­க­ளையும் கூட, இதே குழுதான் குறி வைத்துத் தாக்­கி­ய­தா­கவும் இவர் கூறி­யுள்ளார். எனவே எயார் ஏசி­யாவில் செல்ல நினைக்கும் சீனர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இல்­லா­விட்டால் எம்.எச். 17 காணாமல் போனது போல நீங்­களும் காணாமல் போய் விடு­வீர்கள் என அவர் குறிப்­பிட்­டுள்ளார். ஆனால் இவர் கறுப்புக் கரம் என கூறு­வது தீவி­ர­வாத அமைப்­பையா? அல்­லது ஏதா­வது நாட்­டையா? என்­பது தெளி­வா­க­வில்லை.

இது ஒரு­புறம் இருக்க, எயார் ஏசியா விமானம் விபத்­துக்­குள்­ளா­னத்­திற்கு விமா­னியின் கவ­ன­யீனம் தான் காரணம் என அவுஸ்­தி­ரே­லிய விமானப் படை போக்­கு­வ­ரத்து வல்­லுனர் ஒருவர் கூறி­யுள்ளார்.

இது­கு­றித்து அவுஸ்­தி­ரே­லிய விமானப் போக்­கு­வ­ரத்து வல்­லுனர் நீல் ஹேன்ஸ் போர்டு கூறு­கையில்,

ஆபத்­தான பகுதி என்று அறி­யப்­பட்ட ஜாவா கடற்­ப­கு­தியின் மேல் பறந்­ததன் கார­ண­மா­கவே குறித்த விமானம் விபத்­துக்­குள்­ளா­ன­தாக அறி­யப்­ப­டு­கின்­றது.

அந்தப் பாதையின் வழியே பய­ணித்­தி­ருக்கக் கூடாது இந்த ஆபத்­தான திட்­டத்­திற்கு விமா­னத்தில் பணி­பு­ரிந்த இந்­தோ­னே­ஷியக் விமா­னியோ அல்­லது பிரெஞ்சு முதல் நிலை அதி­கா­ரியோ கார­ணமாய் இருக்­கலாம் என கூறி­யுள்ளார். மேலும் சுர­பயா விமான நிலை­யத்தில் கொடுக்­கப்­பட்ட வானிலை ஆய்­வியல் அறிக்­கையை விமா­னிகள் படித்­த­னரா? எப்­படி அவர்கள் தங்­க­ளுக்குள் தொடர்பு கொண்­டார்கள்? என்றும் கேள்வி எழுப்­பி­யுள்ளார். அதா­வது, ஒரு­வ­ரு­டைய தாய்­மொழி பஹாசா, இன்­னொ­ரு­வ­ரு­டை­யதோ பிரெஞ்சு. இந்­நி­லையில் பொது மொழி­யான ஆங்­கிலம் எந்த அள­வுக்கு இரு­வ­ருக்கும் நல்ல தொடர்பை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும்? எனவே இது விமா­னத்தை வழி நடத்­தி­ய­வர்­களின் தவறே இதற்கு காரணம் என அவர் வாதி­டு­கிறார்..

அது­மாத்­தி­ர­மன்றி கடந்த மார்ச் 8ஆம் திகதி மலே­சி­யா­வி­லி­ருந்து கோலா­லம்பூர் நோக்கிச் சென்ற MH 370 என்ற விமானம் காணாமல் போன நிலையில் இன்­று­வ­ரை­யிலும் எவ்­வித தக­வலும் இல்­லாமல் இருப்­ப­துவும் அனை­வ­ரையும் பெரும் வியப்­பிலும் சோகத்­திலும் ஆழ்த்­தி­யுள்­ளது.

அடுத்­த­டுத்து மலே­ஷியா எயார் லயன்­ஸுக்கு குறி­வைப்­பது ஏன்? யாரால் இச்­செ­யல்கள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன? தீவ­ர­வா­தி­களா? அல்­லது வேறு ஏதேனும் குழுக்­களா? அல்­லது தானா­கவே இவை நிகழ்­கின்­றதா? என பல கேள்­விகள் எழுந்த வண்­ணமே உள்­ளன. கடந்த 28ஆம் திகதி இந்­தோ­னே­ஷி­யா­வி­லி­ருந்து புறப்­பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உல­க­ளவில் இன்னும் ஓயாத அலை­களாய் இருக்கும் நிலையில்,கடந்த புதன்­கி­ழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலை­நகர் மணி­லா­வி­லி­ருந்து 159 பய­ணி­க­ளுடன் பானே தீவில் உள்ள கலி­போ­வுக்கு சென்ற விமா­னமும் விபத்­துக்­குள்­ளா­கி­யது.

கலிபோ விமான நிலை­யத்தில் குறிப்­பிட்ட ஓடு­த­ளத்தில்(runway) விமா­னத்தை தரை­யி­றக்­கும்­போது, திடீ­ரென விமானம் கட்­டுப்­பாட்டை இழந்து அதி­வே­க­மாக ஓடி­யுள்­ளது. இதனால் ஓடு­த­ளத்தை தாண்டி புல்­வெ­ளியில் விமானம் பாய்ந்­துள்­ளது. ஆனால் விமா­னத்தின் முன்­ப­குதி மண்ணில் குத்தி நின்­று­விட்­டதால், பெரிய விபத்து தவிர்க்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது. இதில் பய­ணி­க­ளுக்கு காயம் எதுவும் ஏற்­ப­ட­வில்லை என்­றாலும் இச்­சம்­ப­வத்தால் விமான நிலை­யத்தில் சிறிது நேரம் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது என்­பது தான் உண்மை.

வர­லாற்றில் அதி­க­மான விமான விபத்­துக்­களும் விமானக் கடத்­தல்­களும் உல­கப்போர் நடை­பெற்ற காலங்­களில் இருந்தே இடம்­பெற்று வந்­துள்­ளன. வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்ட முதல் விமா­ன­ வி­பத்து 1925ஆம் ஆண்டு செப்­டெம்பர் மாதம் USS Shenandoah என்ற விமா­ன­திற்கு ஏற்­பட்­டது. இதில் 14 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக வர­லாற்று சான்­றுகள் கூறு­கின்­றன. பல முறை­களில் விமான விபத்­துக்கள் ஏற்­பட்­டாலும் பிர­தான கார­ண­மாகக் கூறப்­ப­டு­வது விமான ஓட்­டியின் கவ­னக்­கு­றைவு, வானிலை மாற்­றங்கள், விமானம் தரை­யி­றங்கும் போதோ அல்­லது தரை­யி­லி­ருந்து புறப்­படும் போதோ பறவை மோதுதல் என்­ப­வை­யாகும். இவை மூன்­றை­யுமே பாது­காப்பு கொள்­கைகள் மூலம் தவிர்ப்­பது கடினம்.

அதா­வது 35 ஆயிரம் அடி­க­ளுக்கு மேலேதான் பய­ணிகள் விமானம் இயக்­கப்­ப­டு­கின்­றது. இங்கு ஆபத்­துக்கள் அதிகம். திடீர் காற்­ற­ழுத்தம், வெற்­றிடம் என்­ப­வற்றால் விமானம் குலுங்கும், காற்­றில்­லாத வெற்­றி­டங்­களில் விமா­னத்தின் இயந்­திரம் உயிர் பெறு­வதும் கடி­ன­மா­னது. காரணம் அப்­ப­டியே முற்­றாக அணைந்து போய் விபத்து ஏற்­படும்.

அண்­மைக்­கா­ல­மாக இடம்­பெற்ற விமான விபத்­துக்­களை உற்­று­நோக்கும் போது கடந்த2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் உலகின் பல நாடு­க­ளிலும் மிக மோச­மான 15 விபத்­துக்கள் ஏற்­பட்­டி­ருக்­கின்­றன.

அந்­த­வ­கையில், ஜுன் மாதம் முதலாம் திகதி பாரி­ஸி­லி­ருந்து ரி யோடி ஜெனி­ரோ­விற்கு பறந்து கொண்­டி­ருந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்­லாண்டிக் கடலில் விழுந்­ததில் 228 பய­ணிகள் உயி­ரிழந்­தனர். 2009ஆம் ஆண்டு 30ஆம் திகதி கெமரோஸ் நாட்டின் கடல் பகு­தியில் பய­ணிகள் விமானம் ஒன்று விழுந்­ததில் 150 பேர் உயி­ரி­ழந்­தனர். மேலும் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி குவாஸ்வின் நகரில் ஏற்­பட்ட விமான விபத்தில் 168 பேர் உயி­ரி­ழந்­தனர்.

இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஜன­வரி 10ஆம் திகதி லெப­னானின் பெய்ரூட் அருகே எத்­தி­யோப்­பியா விமானம் விபத்­துக்­குள்­ளா­னதில் 90 பேர் உயி­ரி­ழந்­தனர். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்­யாவின் ஸ்மோலென்ஸ் நகரில் இடம் பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜின்ஸ்க் உட்­பட 97 பேர் உயி­ரி­ழந்­தனர். அதே ஆண்டு மே 12ஆம் திகதி லிபி­யாவின் திரி­போலி நகரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்­கி­யதில் 103 பேர் உயி­ரி­ழந்­தனர். மேலும் இந்­தி­யாவின் மங்­களூர் விமான நிலை­யத்தில் எயார் இந்­தியா விபத்­துக்­குள்­ளா­னதில் 158 பேர் உயி­ரி­ழந்­தனர். மேலும் ஜுலை 28ஆம் திகதி பாகிஸ்தான் தலை­ந­க­ரான இஸ்­லா­மாபாத் புற­நகர் பகு­தியில் மோதி 152 பேர் உயி­ரி­ழந்­தனர்.

இத்­தோடு நின்­று­வி­ட­வில்லை இந்த உயிர்ச் சேதம், 2011ஆம் ஆண்டு ஜன­வரி 10ஆம் திகதி ஈரானின் யூரே­மியா நகரில் இடம்­பெற்ற விமான விபத்தில் 77பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். செப்­டெம்பர் 7ஆம் திகதி ரஷ்­யாவின் யாரோஸ்லாவ் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏப்ரல் 20ஆம் திகதி இஸ்லாமாபாத் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மே 9ஆம் திகதி ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 160 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நீண்ட இடைவெளியின் பின் கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய விமான விபத்துக்கள் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது.

இந்த விமான விபத்துக்கள் அனைத்தும் தரையில் நடந்த விபத்துக்கள். இதற்கான காரணங்கள் கூட தெளிவாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பல விமானங்களோ இன்று வரையிலும் காணாமற்போன பட்டியல்களில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. அதில் குறிப்பிட்டுக் கூறினால் இறுதியாக காணாமல் போன விமானங்களின் வரிசையில் இடம் பிடித்த MH 370 விமானத்தை குறிப்பிடலாம். மேலும் 1937, 1945, 1962போன்ற காலப் பகுதிகளில் காணாமல் போன விமானங்களின் விபரங்கள் இன்றுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

தொகுப்பு :எஸ்.டொரின்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல