திங்கள், 5 ஜனவரி, 2015

எண்ணெய்ப் பசைக் கூந்­தலை என்­னதான் செய்­வது?

எண்ணெய் பசை­யான, பிசு­பி­சுப்­பான கூந்தல் என்­பது பர­வ­லாகப் பல­ரி­டமும் காணப்­ப­டு­கிற ஒரு பிரச்சினை. எண்ணெய் பசை­யான மண்டைப் பகு­தி­யி­லி­ருந்தே எண்ணெய் பசைக் கூந்தல் உரு­வா­கி­றது. மண்டைப் பகு­தியில் உள்ள செபே­ஷியஸ் சுரப்­பி­களின் தூண்­டலே இதற்குக் காரணம். செபே­ஷியஸ் சுரப்பி சுரக்கும் சீபம், கூந்தல் ஆரோக்­கி­யத்­துக்கு மிக அவ­சி­ய­மா­னது. அது ஈரப்­ப­தத்தைத் தக்க வைத்துக் கொள்ளும். அதுவே இந்த சீப­மா­னது அள­வுக்­க­தி­க­மாக சுரந்தால், கூந்தல் அதை கிர­கித்துக் கொண்டு, எண்ணெய் பசை தோற்றம் பெறும். சில­ருக்கு எண்ணெய் பசை கூந்­தலின் விளை­வினால், எண்ணெய் வழி­கிற சருமப் பிரச்­சினையும் சேர்ந்து கொள்­வ­துண்டு.



என்ன காரணம்?

1. ஊறல் தோல் அழற்சி

2. எண்ணெய் பசை­யான சருமம்

3. வானிலை மாறு­பா­டுகள்

4. ஹோர்மோன் கோளா­றுகள்

5. கூந்­தலின் வேர் பகு­தியில் உள்ள ஃபங்கஸ் இன்ஃ­பெக் ஷன்

6. கூந்­தலை அள­வுக்கு அதி­க­மாக வாரு­வது

7. பாரம்­ப­ரியம்

8. பூப்­பெய்­துதல்

9. ஈரப்­பதம்

10. சுருள் சுரு­ளான கூந்தல் உடை­ய­வர்­களை விட, மென்­மை­யான, ஸ்ட்ரெயிட் கூந்தல் உடை­ய­வர்­களின் கூந்தல் அதிக எண்ணெய் பசை­யுடன் இருக்கும்.

மண்டை மற்றும் கூந்­தலில் அள­வுக்கு அதிக எண்ணெய் பசை தென்­ப­டு­வதே ஊறல் (தோல் அழற்சி) பிரச்சி­னைக்­கான அறி­குறி. சீபம் சுரப்பில் ஏற்­ப­டு­கிற பிரச்சி­னையின் அறி­கு­றி­யல்ல இது. ஊறல் தோல் அழற்சி உள்­ள­வர்­க­ளுக்கு வெள்ளை மற்றும் பிரவுன் நிறத்தில் செதில்கள் போல வரும். இதற்கு எண்ணெய் பசை­யான பொடுகு என்று பெயர். இது இருந்தால் தலையில் அரிப்பு இருக்கும். அரிப்பு அதி­க­மா­வதன் விளை­வாக, ஆக்­ரோ­ஷ­மாக அந்தப் பகு­தியை சொரிந்து அதைத் தீவி­ரப்­ப­டுத்திக் கொள்­வார்கள். இன்­பெ­க் ஷ­னா­னது காதுகள், புரு­வங்கள் மற்றும் மூக்கு வரை பரவும். பரு பிரச்சி­னையும் ஆரம்­பிக்கும்.

ஹோர்­மோன்கள்

பூப்­பெய்தும் பருவம் மற்றும் பிசி­ஓடி எனப்­ப­டு­கிற சினைப்பை நீர்க்­கட்டி பிரச்னை உள்­ள­வர்­க­ளுக்கு அந்த நேரத்தில் ஹோர்மோன் கோளா­றுகள் இருக்கும். இதனால் செபே­ஷியஸ் சுரப்­பிகள் தூண்­டப்­பட்டு அதிக சீபம் சுரக்கப் படும். இதனால் மண்டைப் பகு­தியும் கூந்­தலும் எண்ணெய் பசை­யுடன் காணப்­படும்.

என்ன பிரச்சினை?

எண்ணெய் பசை­யான கூந்தல் என்­பது ஒரு­வ­ருக்கு தோற்­றத்தில் கவ­லையைக் கொடுக்கும் விட­ய­மாக இருக்கும். அடர்த்­தி­யான கூந்தல் என்­பது இவர்­க­ளுக்குக் கன­வா­கவே இருக்கும். போனி டெயில் போட்டால் எலி வால் போலக் காட்­சி­ய­ளிக்கும். பின்­னவும் முடி­யாது. மொத்­தத்தில் ஷாம்போ குளியல் எடுக்­காமல் இவர்­களால் வெளியில் தலை­காட்ட முடி­யாது.

செய்­யக்­கூ­டி­யவை

எண்ணெய் பசைக் கூந்­த­லுக்­கான ஷாம்போ உப­யோ­கித்து வாரம் 3 முறை கூந்­தலை அலச வேண்டும்.

உங்கள் கூந்தல் மிகவும் எண்ணெய் பசை­யுடன் இல்லை என்றால், ஷாம்போ குளி­ய­லுக்குப் பிறகு மித­மான கண்­டி­ஷனர் உப­யோ­கிக்­கலாம்.

கூந்தல் ஈர­மாக இருக்கும் போதே பிசு­பி­சுப்புத் தன்­மையை ஏற்­ப­டுத்­தாத (நான் க்ரீஸ் புரொ­டக்ட்டிவ் ஸ்பிரே) ஸ்பிரே உப­யோ­கிக்­கலாம்.

செய்­யக்­கூ­டா­தவை

உங்கள் அழகுக்கலை நிபுணர் அறி­வு­றுத்­தாத வரை, தலைக்கு எண்ணெய் வைப்­பதைத் தவிர்க்­கவும்.

கூந்­தலை அதிக முறை பிரஷ் செய்தால் ஆரோக்­கி­ய­மா­னது என்­கிற நினைப்பில், அள­வுக்கு அதி­க­மாக வார வேண்டாம். அது எண்ணெய் சுரப்­பி­களைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதி­கப்­ப­டுத்தும்.

தீர்­வுகள்

எண்ணெய் பசை­யான கூந்­த­லுக்­கென்றே பிரத்தி­யேக ஷாம்போ கிடைக்­கி­றது. தின­சரி உப­யோ­கத்­துக்­கேற்ற வகையில் மைல்­டான ஷாம்­போ­வாக தேர்ந்­தெ­டுக்­கவும். கூந்­தலின் நுனிகள் ரொம்­பவும் வறண்­டி­ருந்தால், அந்தப் பகு­தி­க­ளுக்கு மட்டும் கண்­டி­ஷனர் உப­யோ­கிக்­கவும். ஓட்ஸில் தண்ணீர் விட்டுக் காய்ச்சி ஆற வைக்­கவும். தலையில் தடவி 15 நிமி­டங்கள் ஊற வைத்து, மித­மான ஷாம்போ உப­யோ­கித்து அல­சவும். 15 நாட்­க­ளுக்­கொரு முறை தலைக்கு ஹென்னா உப­யோ­கிப்­பதும், அதி­கப்­ப­டி­யான எண்ணெய் பசையைக் கட்­டுப்­ப­டுத்தும்.

எண்­ணெயில் பொரித்த, வறுத்த உண­வு­க­ளுக்கும், பதப்­ப­டுத்­தப்­பட்ட உண­வு­க­ளுக்கும் இடம் அளிக்­கா­தீர்கள். தின­சரி உணவில் நிறைய பழங்­களும் காய்­க­றி­களும் இருக்­கட்டும்.

உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்­ளவும். ஏரி­யேட்டட் பானங்­க­ளையும் போத்தல்­களில் அடைத்த பானங்களையும் தவிர்க்கவும். எண்ணெய் பசையான, பொடுகு நிறைந்த, ஆரோக்கியமற்ற மண்டைப் பகுதிக்கு எலுமிச்சை வியத்தகு பலன்களைக் கொடுப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. பாதி எலுமிச்சைப் பழத்தை மண் டைப் பகுதியில் தேய்த்து 15 நிமிடங் கள் வைத்திருந்து அலசவும். 15 நாட்க ளுக்கொரு முறை இதைச் செய்யலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல