திங்கள், 5 ஜனவரி, 2015

பட்டுப் போன்ற கால்­க­ளுக்கு ....

அழ­கிற்கு அதிகம் முக்­கி­யத்­துவம் கொடுக்கும் பெண்கள், முகம் மற்றும் கைக­ளுக்கு அள­வுக்கு அதி­க­மாக கவனம் செலுத்­து­வார்கள். ஆனால் அழகு என்­பது வெறும் முகம் மற்றும் கைகளில் மட்டும் இல்லை, கால்­க­ளிலும் தான் உள்­ளது. ஆம், சில­ருக்கு கால்கள் மிகவும் மென்­மை­யா­கவும், பட்டுப் போன்றும் இருக்கும். அத்­த­கை­ய­வர்கள் எந்த ஒரு ஆடை­யையும் கூச்­ச­மின்றி அணி­யலாம். ஆனால் சில­ருக்கு கால்­களில் அதி­கப்­ப­டி­யான முடி இருக்கும்.



அத்­த­கை­ய­வர்கள் சுடிதார், ஜீன்ஜ், புடவை ஆகி­ய­வற்றை மட்டும் தான் அணிய முடியும். மேலும் எவ்­வ­ளவு தான் பிடித்­த­மான பாவாடை இருந்­தாலும், அதனை பார்த்து மட்டும் தான் ரசிக்க முடி­யுமே தவிர அணிய முடி­யாது. ஆகவே பலர் கால்­களில் உள்ள முடியை நீக்­கு­வ­தற்கு ெவக்சிங் செய்­வார்கள். இவ்­வாறு கால்­க­ளுக்கு வெறும் வெக்சிங் செய்தால் மட்டும் கால்கள் மென்­மை­யா­கி­வி­டாது.

அதற்கு ெவக்சிங் செய்த பின்னர் ஒரு­சில செயல்­களை பின்­பற்ற வேண்டும். அதற்­காக அழகு நிலை­யங்­க­ளுக்கு செல்­லுங்கள் என்று சொல்­ல­வில்லை. வீட்டில் இருக்கும் ஒரு­சில பொருட்­களைக் கொண்டு கால்­களை பரா­ம­ரித்து வந்தால், நல்ல அழ­கான, பட்டுப் போன்ற கால்­களைப் பெறலாம். சரி, இப்­போது மென்­மை­யான கால்­களைப் பெற என்­ன­வெல்லாம் செய்ய வேண்­டு­மென்று பார்ப்போம்.

மசாஜ் செய்­யவும்: தினமும் குளிக்கும் முன் அல்­லது இரவில் படுக்கும் முன், நறு­மண எண்­ணெய்­களைக் கொண்டு கால்­களை நன்கு மசாஜ் செய்ய வேண்டும். குறிப்­பாக மசாஜ் செய்யும் போது, கீழ் நோக்­கி­ய­வாறு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால்­க­ளுக்கு இரத்த ஓட்டம் அதி­க­ரித்து, கால்கள் வறட்­சி­யின்றி மென்­மை­யாக இருக்கும்.

ரோஸ் வோட்டர்: கால்­களின் அழகை அதி­க­ரிக்க வேண்­டு­மெனில், குளித்த பின்னர் ஒரு வாளியில் தண்­ணீரை ஊற்றி, அதில் ரோஜா இதழ்கள் அல்­லது ரோஜ் வோட்­டரை கலந்து, அதில் கால்­களை ஊற வைக்க வேண்டும். இதனால் கால்கள் நல்ல மணத்­துடன் இருப்­ப­தோடு, கால்­களும் பொலி­வாக காணப்­படும்.

பால்: கால்­களின் பொலிவை அதி­க­ரிக்க, குளிக்கும் 1/2 மணி­நே­ரத்­திற்கு முன் பாலைக் கொண்டு நன்கு மசாஜ் செய்து, பின் குளிர்ச்­சி­யான நீரில் அலச வேண்டும்.

உரு­ளைக்­கி­ழங்கு: கால்­களை அழ­காக்­கு­வ­தற்கு, உரு­ளைக்­கி­ழங்கு துண்டைக் கொண்டு கால்­களை தேய்த்தால், கால்­களில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, கால்கள் பளிச்­சென்று காணப்­படும்.

சிட்ரஸ் பழங்கள்: எலு­மிச்சை சாற்றில் உப்பு சேர்த்து கலந்து, அதனை கால்­களில் தடவி மேல் நோக்­கி­ய­வாறு தேய்த்து, குளிர்ச்­சி­யான நீரில் அல­சினால், கால்களின் பொலிவு அதிகரிக்கும். இந்த செயலை வெக்சிங் செய்த பின்னர் செய்ய வேண்டாம். ஏனெனில் சில நேரங்களில் இது சருமத்தில் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல