இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் திட்டம் கடந்த வியாழக்கிழமை முதல் மீண்டும் அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன அறிவித்துள்ளார். பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்கிழமை இடம் பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின் போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து நாட்டில் அமைதியான சூழல் உருவாக்கப்பட்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை அமுலுக்குக் கொண்டுவரப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ் யுத்தம் காரணமாக புலம் பெயர்ந்து இந்தியா உட்பட வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இரட்டைப்பிரஜாவுரிமையைப் பெற்று பலனடையும் நிலை ஏற்பட்டிருந்தது.
புலம் பெயர்ந்த தமிழ் மக்களில் பெரும்பகுதியினர் அந்தந்த நாடுகளின் பிரஜாவுரிமைகளைப் பெற்று வாழ்ந்து வருகின்றனர். கடந்த 30 வருட யுத்தத்தின் போது பல இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் அகதிகளாக கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என புலம் பெயர்ந்திருந்தனர். இவ்வாறு புலம் பெயர்ந்தவர்களில் பெருமளவானோர் அந்தந்த நாடுகளின் பிரஜாவுரிமைகளைப் பெற்றுள்ளனர். இவ்வாறானவர்கள் இலங்கையில் இரட்டைப்பிரஜாவுரிமையினைப் பெறுவதற்கு விருப்பம் கொண்டுள்ளனர்.
2009 ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டம் 2011 ஆம் ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது. இதனால் இரட்டைப் பிரஜாவுரிமையினை வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பெறமுடியாத சூழல் ஏற்பட்டிருந்தது. பெருமளவானோர் இரட்டைப்பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தபோதிலும், அந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை.
யுத்தம் முடிவடைந்ததை அடுத்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களை மீண்டும் நாட்டுக்குள் அழைக்கும் செயற்பாட்டினை அரசாங்கத் தரப்பு மேற்கொண்டது. புலம்பெயர் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்யவேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கவேண்டுமென்ற கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டன. மூன்று தசாப்தகாலமாக முரண்பட்டிருந்த போதிலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதையடுத்து தமது நாட்டுக்குத் திரும்பி முதலீடுகளில் உதவிகளையும் செய்வதற்கு பெருமளவான புலம் பெயர் தமிழர்கள் விருப்பம் கொண்டிருந்தனர்.
இதற்கிணங்க இரட்டைப்பிரஜாவுரிமைக்கும் பெருமளவானோர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால் திடீரென 2011 ஆம் ஆண்டு இந்தச் செயற்பாடு இடைநிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கும் நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்க செயற்பாடேயாகும். ஆனாலும் புதிய கட்டுப்பாடுகளுடனேயே இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் உள்நாட்டில் மீண்டும் வாழ வேண்டுமெனவும் தங்களது பிள்ளைகள் அரச பாடசாலைகளில் கல்வி பயில வேண்டும் எனவும் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க இத்திட்டம் மீண்டும் அரசாங்கத்தினால் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முன்னர் இருந்தது போல் இல்லாமல் இரட்டைப் பிரஜாவுரிமை புதிய விதிமுறைகளுக்கு அமைய நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு வழங்கப்படும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் மேலதிக செயலாளர் தமயந்தி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இரட்டைப் பிரஜாவுரிமை பெறுவதற்கான விதிமுறைகள் பற்றி அவர் மேலும் விளக்கமளிக்கையில் இரட்டைப் பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட நாடுகளுக்குரிய உயர்ஸ்தானிகர் அல்லது வெளிநாட்டுத் தூதுவரின் உறுதிப்படுத்தலுடன் வழங்கப்படவேண்டும். அத்துடன் விண்ணப்பதாரியின் இரட்டை பிரஜாவுரிமைக்கான தகுதியும் இவர்களால் அனுமதிக்கப்படவேண்டும். அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்று விசேட குழுவினால் விண்ணப்பதாரியின் தகைமை மற்றும் ஆவணங்கள் பரிசீலிக்கப்படுவதுடன் ஆவணங்களில் நம்பகத்தன்மை மற்றும் சம்பந்தப்பட்ட நாட்டுத் தூதுவரின் பரிந்துரையின் பேரில் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரண்டாம் கட்டமாக விண்ணப்பதாரி ஒரு நேர்முகப்பரீட்சைக்கு முகம் கொடுப்பதுடன் நேர்காணல் குழுவினால் தமது விண்ணப்பம் மற்றும் அனைத்து ஆவணங்களும் பரிசீலனை செய்யப்பட்டதன் பின்னர் ஜனாதிபதியின் அனுமதிக்காக அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்திருக்கின்றார்.
தமது சொந்த நாட்டுக்குத் திரும்பி தமது சமூகத்திற்கும் நாட்டுக்கும் உதவிகளைப் புரிவதற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தயாராகவே உள்ளனர். ஆனால் அதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தும் செயற்பாடுகள் நாட்டில் இடம் பெறுகின்றனவா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. புலம் பெயர்ந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் தொடர்ந்தும் நாட்டுக்கு எதிராக செயற்படுவதாகவும் மீண்டும் விடுதலைப்புலிகளை உயிர்ப்பிக்க முனைவதாகவும், அரசாங்கத் தரப்பில் குற்றம் சுமத்தப்படுகின்றது.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரசாரங்களின் போதும் இத்தகைய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டே வருகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் பலரும் புலம் பெயர் புலி ஆதரவாளர்களினால் நாட்டுக்கு பெரும் பங்கம் ஏற்படப்போகின்றது. இதற்கான திட்டங்கள் தீட்டப்படுகின்றன என்று தெரிவித்து வருகின்றனர். இத்தகைய ஒரு சூழ்நிலையில் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது எண்ணங்களை மாற்றி சொந்த நாட்டுக்கு வந்து முதலீடுகளை செய்வதற்கு எவ்வாறு முன்வருவார்கள் என்ற கேள்வி எழுகின்றது.
அத்துடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் அரசியல் தீர்வொன்றை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அரசியல் தீர்வுக்கான முன்முயற்சிகள் எதுவும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கும் அரசாங்கத் தரப்பினருக்குமிடையிலான சந்தேகங்கள் மற்றும் முரண்பாடுகள் தீர்க்கப்பட்டால் மாத்திரமே புலம்பெயர் மக்கள் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு உதவும் நிலை ஏற்படும்.
ஆனால், எமது நாட்டைப்பொறுத்தவரையில் அரசியல் சுயநலனுக்காக புலம்பெயர் தமிழர்களை சுட்டிக்காட்டி தமது வாக்குகளை அதிகரிக்கும் செயற்பாடுகளிலேயே ஆளும் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இரட்டைப்பிரஜாவுரிமை வழங்குவதற்கான செயற்றிட்டம் மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் புலம்பெயர் தமிழர்கள் மீது சந்தேகம் கொண்டுள்ள அரசாங்கத்தரப்பு இரட்டைப்பிரஜாவுரிமைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு அதனை வழங்க முன்வருமா என்பதில் பெரும் சந்தேகம் நிலவுகின்றது.
நாட்டில் தமிழ், சிங்கள சமூகங்களிடையே நிரந்தர ஒற்றுமையும் சமாதானமும் ஏற்பட வேண்டுமானால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய அரசியல் தீர்வு காணப்படவேண்டும். இதனைவிடுத்து யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையிலும் புலம் பெயர்ந்த தமிழர்கள் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என நோக்குவது எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ளத்தக்க செயற்பாடல்ல.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வடபகுதிக்குச் செல்லும் வெளி நாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் அந்த நாடுகளின் பிரஜாவுரிமை பெற்ற தமிழர்கள் அந்தர அவசரத்திற்கு கூட உடனடியாக வடபகுதி செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. அவர்கள் கொழும்புக்கு வந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற காத்திருக்கவேண்டிய சூழல் நிலவிவருகின்றது.
இந்த நடைமுறையும் புலம்பெயர் தமிழர்கள் மீதுள்ள சந்தேகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என்று எண்ணவேண்டியுள்ளது. இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் மீது தொடர்ந்தும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதனால் இரு சமூகங்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தினை உடனடியாக ஏற்படுத்திவிட முடியாது. தற்போது இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கும் செயற் பாட்டை ஆரம்பித்தது போன்று புலம் பெயர் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்தால் அது நாட்டுக்கு நன்மை அளிக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக