திருமணமான சில மணித்தியாலங்களில் கணவனை விட்டு ஓட முயற்சித்த பெண் ணை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் டில்லியில் இடம்பெற்றுள்ளது. இது தொட ர்பில் மேலும் தெரியவருவதாவது:-
டில்லிக்கு மிக அருகில் உள்ள பரேலியில் சி.பி.கஞ்ச் பகுதியைச் சேர்ந்த சந்திரபால் (32). என்பவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மணப்பெண் தேடி வந்துள்ளார். இந்நிலை யில், அவருக்கு அறிமுகமான கல்யாண தர கர் ஹோசியார் சிங், 35,000 ரூபா பணம் கொடுத்தால் மணம் முடித்து வைப்பதாகக் கூறியுள்ளார்.
அதன்படி கல்யாண தரகர் பார்த்த பெண்ணுடன் அருகிலுள்ள காத்திமா கிராம கோயி லில் மிக எளிய முறையில் திருமணம் நடந்துள்ளது. பின்னர் வீடு திரும்புவதற்காக மணமகன் வீட்டார் மணப்பெண்ணுடன் பரேலி ரயில் நிலையம் சென்றுள்ளனர்.
அங்கு கல்யாண தரகர் ஹோசியர் சிங் தரகு பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் மணப்பெண்ணும் அவருடன் சேர்ந்து தப்பி ஓட முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து பொதுமக்கள் தப்பி ஓட முயன்ற மணப்பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் ஏற்கனவே திருமணமானவர் என்பதும் கல்யாண தரகர் நடத்தி வந்த மோசடிக் கும்பலை சேர்ந்தவர் என்பதும் இது போல பல ஆண்களுடன் இப்பெண்ணை திருமணம் செய்து வைத்து தரகர் பணமோசடி செய்தமை தெரிய வந்துள்ளது. இதையடுத்து குறித்த பெண்ணை பொதுமக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக