திங்கள், 5 ஜனவரி, 2015

மனிதம் மரித்­துப்­போன ஒரு நாளில்

தலிபான் அமைப்பின் கொலை­வெறித் தாண்­ட­வத்­துக்குப் பின்னர், பெஷாவர் நகர இராணுவப் பள்­ளிக்­கூ­டமே இரத்­தத்தை உறை­ய­வைக்­கும்­படி காட்சி தந்­தது. பள்ளிக் கட்­டி­டங்­களின் தாழ்­வா­ரங்­க­ளிலும் வகுப்­ப­றை­க­ளிலும் துப்­பாக்­கி­க­ளி­லி­ருந்து சீறிப் பாய்ந்த குண்­டுகள் ஏற்­ப­டுத்­திய வடுக்­களும், மாண­வர்­களின் உடல்­க­ளி­லி­ருந்து பீறிட்டு அடித்த இரத்­தமும், உட­லி­லி­ருந்து பிய்ந்த தசை­களின் துணுக்­கு­களும், சித­றிய பைகளும், புத்­த­கங்­களும், கரு­வி­க­ளு­மாகக் காட்­சி­தந்­தன.



பள்­ளிக்­கூ­டத்­துக்குள் ஆயு­தங்­க­ளுடன் புகுந்த தலி­பான்கள் எல்லாக் கட்­டி­டங்­க­ளுக்கும் சென்று கண்ணில் பட்ட மாண­வர்­க­ளையும் ஆசி­ரி­யர்­க­ளையும் சுட்­டுக் ­கொன்­றிருக்கிறார்கள். பின்வாசல் வழி­யாகத் தப்பி ஓடிய பலரும், இறந்­தவர்களுக்கு நடுவில் உயி­ரற்ற சடலம் போலப் படுத்­துக்­கொண்டு நடித்த சில­ரும்தான் உயிர் தப்­பி­யி­ருக்­கி­றார்கள்.

இனி, அடுத்­தது என்ன?

“நீங்கள் சொல்லி அனுப்­பி­ய­படி பள்­ளிக்­கூ­டத்தில் இருந்த எல்லா மாண­வர்­க­ளையும் சுட்­டுக்­கொன்­று­விட்டோம். இனி, அடுத்து என்ன செய்ய வேண்டும்?” என்று தலிபான் அமைப்பின் தலைவர் அபுசார், இந்தப் படு­கொ­லை­க­ளுக்குப் பிறகு பள்­ளிக்­கூ­டத்­தி­லி­ருந்து எங்கோ இருந்த யாரி­டமோ கேட்­டி­ருக்­கிறார்.

“இப்­போது இராணுவம் உள்ளே வரும், அவர்­க­ளையும் கொன்­று­விட்டு அதன் பிறகு உங்­களை மாய்த்துக் கொள்­ளுங்கள்” என்று அங்­கி­ருந்து பதில் வந்­தி­ருக்­கி­றது. பாகிஸ்தான் உளவுத் துறை அதி­கா­ரிகள் இந்தத் தொலை­பேசி உரை­யா­டலை இடை­ம­றித்துக் கேட்­டுள்­ளார்கள். இராணுவப் பள்­ளிக்­கூ­டத்தில் படிக்கும் மாண­வர்­களைச் சுட்டுக் கொல்ல வேண்டும் என்ற தீர்க்­க­மான முடி­வோடு அதற்­குண்­டான ஆயு­தங்­க­ளுடன் திட்­ட­மிட்டு வந்­தி­ருக்­கி­றார்கள். பெரிய வாக­னத்தில் வந்­த­வர்கள், ‘இனி திரும்பிப் போகக் கூடாது’ என்ற முடி­வோடு பள்­ளிக்­கூ­டத்­துக்குப் பக்­கத்தில் உள்ள மயானம் வழி­யாக நுழை­யும்­போதே, வாகனத்திலி­ருந்து இறங்­கி­யதும் அதை வெடி­குண்டால் தகர்த்து எரித்­தி­ருக்­கி­றார்கள். பல மணி நேரம் சுழன்று சுழன்று அந்த பள்­ளிக்­கூ­டத்­துக்­குள்­ளேயே சுற்­றிச்­சுற்றி கட்­டிடம் கட்­டி­ட­மாகப் போய்ச் சுட்­டி­ருக்­கி­றார்கள்.

பாகிஸ்­தானே செய­லி­ழந்­தது

இந்தப் படு­கொ­லையை அடுத்து பாகிஸ்தான் முழு­வ­துமே செயலிழந்து பரி­த­வித்­தது. தலி­பான்­களின் பயங்­க­ர­வாதத் தாக்­குதல் அந்த நாட்­ட­வ­ருக்குப் புதி­ய­தல்ல என்­றாலும், பச்­சிளங் குழந்­தை­களை இப்­படி ஈவி­ரக்­க­மின்றிக் கும்பல் கும்­ப­லாகச் சுட்­டுக்­கொல்­வார்கள் என்று யாருமே எதிர்பார்க்­க­வில்லை. அரசுக் கட்­டி­டங்கள் உட்­பட எல்லா இடங்­க­ளிலும் தேசியக் கொடிகள் பாதிக் கம்­பத்தில் பறந்­தன. கடை, வர்த்­தக நிறு­வ­னங்கள் மூடி­யி­ருந்­தன. தொலைக் காட்­சி­களில் அவ்­வப்­போது வரும் தக­வல்­களைப் பார்த்துக் கொண்­டே­யி­ருந்­தனர். கோபம், துயரம், ஆற்­றாமை, விரக்தி என்று வெவ்­வேறு உணர்ச்­சி­க­ளுக்கு மாறி­மாறி ஆட்­பட்­டார்கள்.

சவப்­பெட்­டி­களின் ஊர்­வலம்

பெஷாவர் நக­ரமே சிறிய சவப்­பெட்­டி­களால் நிறைந்து விட்­டதோ என்று அஞ்­சும்­ப­டி­யாக இருந்­தது. ஆள­ர­வமே இல்­லாத வீதி­களில் திடீர் திடீ­ரெனச் சிலர் கும்­ப­லாக ஒரு சவப்­பெட்­டியைச் சுமந்­து­கொண்டு கல்­ல­றையை நோக்கி நடந்­து­கொண்­டி­ருந்­தார்கள். மக்கள் கண்­ணீ­ருடன் மசூதிகளுக்கும் கல்­ல­றை­க­ளுக்கும் சென்­றார்கள்.

அதி­கா­ரிகள் ஆய்வு

இராணுவப் பள்­ளியில் நடந்­த­வற்றை மூத்த அதி­கா­ரிகள் ஆய்வு செய்­தனர். தட­ய­வியல் துறை­யி­னரும் ஆங்­காங்கே தட­யங்­களைச் சேக­ரித்­துக்­கொண்­டி­ருந்­தனர். பள்­ளிக்­கூட முதல்­வரின் அறையே பெரிய வதைக்­கூ­ட­மாகக் காட்சி தந்­தது. அங்கே ஒருவர் தன்­னு­டைய உடலில் கட்­டி­யி­ருந்த வெடி­குண்டை வெடிக்கச் செய்து இறந்­தி­ருக்­கிறார். அவ­ருடன் சேர்ந்து அந்த அறையில் இருந்­த­வர்­களும் உடல் சிதறி இறந்­தி­ருக்­கி­றார்கள். சுவ­ரெங்கும் ரத்­தமும் சதைத் துண்­டு­களும் அப்­பிக்­கி­டக்­கின்­றன. குண்டு பாய்ந்த அடை­யா­ளங்­களும் வெடி­குண்டுச் சிதறல் ஊடு­ரு­வி­யதால் ஏற்­பட்ட பாதிப்­பு­க­ளு­மாக அந்த அறையும் பல­மாகச் சேதப்பட்­டி­ருக்­கி­றது. தாஹிரா காஜி என்ற அந்தப் பெண் முதல்வர் இரண்டு மாண­வர்­களை அணைத்துக் காப்­பாற்ற முயற்சி செய்து, அந்த மூர்க்­கர்­களால் கொல்­லப்­பட்­டி­ருக்­கிறார்.

மைய­மான நிர்­வாகக் கட்­டி­டத்தைச் சுற்­றி­யி­ருந்த நான்கு பெரிய கட்­டி­டங்­க­ளிலும் மாண­வர்கள் சட­லங்­க­ளாக விழுந்­துள்­ளார்கள். புத்­தகப் பைகளும் சாப்­பாட்டுப் பொட்­ட­லங்­களும் கால­ணி­களும் பெல்ட்­டு­களும் தொப்பி களும் நாலா­பு­றங்­க­ளிலும் சிதறிக் கிடக்­கின்­றன. இரத்தம் சுவர்­களில் தெறித்­தி­ருக்­கி­றது. ஆங்­காங்கே சிறிய குளம் போலத் தேங்கி, காய்ந்தும் உறைந்தும் கிடக்­கி­றது. துர்­நாற்றம் மூக்கைத் துளைக்­கி­றது. நிற்க முடி­யாத அள­வுக்கு வேத­னையும் சேர்ந்­து­கொள்­கி­றது.

மாண­வர்­களின் கலை நிகழ்ச்சி, பேச்­சுப்­போட்டி, விருந்­தினர்களின் உரை நிகழ்ச்சி ஆகி­ய­வற்­றையே பார்த்துப் பழ­கிய அந்தப் பள்­ளிக்­கூட அரங்கம், கொலைக்­க­ள­மாக மாறியிருக்­கி­றது. அந்த அரங்­கி­லி­ருந்து மட்­டுமே நூற்­றுக்கும் மேற்­பட்ட சட­லங்கள் கிடைத்­த­தாகத் தெரி­விக்­கின்­றனர். ஒரு­வர்­மீது ஒரு­வ­ராகச் சுட்­டுத்­தள்­ளப்­பட்­டதால் சட­லங்கள் அடுக்­கி­ய­படி இருந்­தி­ருக்­கின்­றன.

கொலை­யா­ளி­க­ளி­ட­மி­ருந்து தப்­பிக்க மேஜைக்கு அடியில் ஒளியப் பார்த்­தி­ருக்­கி­றார்கள். எவ­ரையும் விட்­டு­விடக் கூடாது என்று அந்தக் கய­வர்கள் முடி­வு­செய்து, மாண­வர்­களை சட்­டையைப் பிடித்து இழுத்து வந்து, துப்­பாக்­கிக்கு முன்னால் நிறுத்தித் தலை­யி­லேயே சுட்டு ஒவ்­வொ­ரு­வ­ராகக் கொன்­றி­ருக்­கி­றார்கள்.

தலி­பான்கள் அரங்கில் நுழைந்­த­போ­துதான், முத­லு­தவி செய்­வது எப்­படி என்று ஒரு இராணுவ அதி­காரி மாண­வர்­க­ளுக்குச் செயல்­வி­ளக்­க­மாகச் செய்­து­காட்­டி­யிருந்திருக்­கிறார். அவரும் தப்­ப­வில்லை.

7 மனித வெடி­குண்­டுகள்

இராணுவம் உள்ளே வந்­ததும் 5 மனித வெடி­குண்­டுகள் தங்­க­ளு­டைய உடலில் கட்­டி­யி­ருந்த வெடி­குண்­டு­களை வெடிக்கச் செய்து, மாண­வர்­களில் பலரைத் தங்­க­ளுடன் சேர்த்து பலி­வாங்­கிக்­கொண்­டார்கள். 2 பேர் உள்ளே வந்த இராணுவக் கமாண்­டோக்கள் மீதே பாய்ந்து வெடி­குண்­டு­களை வெடிக்கச் செய்­தார்கள். அதில் கமாண்­டோக்­களில் 7 பேர் காயம் அடைந்­தார்கள். ஒரு­வ­ருக்கு முகத்தில் பலத்த காயம் ஏற்­பட்­டது.

பள்ளிக் கட்­டி­டத்தை இராணுவம் தன்­வசம் கொண்டு வந்து விட்­டது என்று தெரிந்­ததும் ஏரா­ள­மானோர் உள்ளே ஓடி­வந்­தார்கள். அங்கே அவர்கள் கண்ட காட்சி அதிர்ச்­சி­ய­டைய வைத்­தது. “அடுக்­க­டுக்­காக மாணவர்களின் சட­லங்கள், எங்கும் ரத்தம், சிலர் மட்­டுமே உயி­ரோடு முன­கிக்­கொண்­டி­ருந்­தார்கள். இதை நான் பார்க்காம­லேயே இருந்­தி­ருக்­கலாம்” என்று கண்­ணீரைக் கட்டுப் படுத்­திக்­கொண்டு சொன்னார் ஒரு இரா ணுவ அதி­காரி.

இராணுவத்தின் மீது கோபம்

இந்தப் பள்­ளிக்­கூ­டத்தில் இராணுவத்­தி­னரின் பிள்­ளை­க­ளுடன் சிவி­லி­யன்­களின் பிள்­ளை­களும் படிக்­கி­றார்கள். தர­மான கல்வி கிடைக்கும் என்று அந்தப் பள்­ளியில் சேர்த்த அவர்கள், இப்­போது இராணுவத்தின் மீதே கோப­மாக இருக்­கி­றார்கள். இப்­ப­டிப்­பட்ட தலி­பான்கள் அடக்க முடி­யாமல் எதற்­காக இராணுவம் இருக்­கி­றது, அணு­குண்டும் போர் விமா­னங்­களும் எங்கே போய்­விட்­டன என்று கோப­மாகக் கேட்­கி­றார்கள். எங்­க­ளு­டைய உயிரைக் காப்­பாற்ற முடி­யா­விட்டால் இராணுவம் இருந்து என்ன பயன் என்­கி­றார்கள்.

தலி­பான்கள் இப்­படிக் கொடூரத் தாக்­குதல் நடத்­தி­யதால் அவர்­க­ளுக்கு அஞ்­சவும் மாட்டோம், அவர்­க­ளுடன் சேரவும் மாட்டோம் என்று முகம்­மது தாஹிர் என்ற கட்­டிடக் கலை மாணவர் கூறினார். அதுவே பல­ரு­டைய கருத்­தா­கவும் இருக்­கி­றது.

பள்ளி முதல்­வ­ருக்கு அஞ்­சலி

இராணுவப் பள்­ளிக்­கூ­டத்தின் முதல்­வ­ராக இருந்த தாஹிரா காஜி எல்­லோ­ரு­டைய அன்­பையும் பெற்­றவர். கனி­வா­கவும் நகைச்­சு­வை­யா­கவும் பேசுவார். அவ­ரு­டைய படிப்பு, நாக­ரிகம், அடக்கம் ஆகி­யவை எல்­லோ­ரையும் கவர்ந்­தி­ருக்­கி­றது. தங்­க­ளு­டைய குழந்­தை­களின் இழப்பைப் போலவே அந்த முதல்­வரின் இழப்­பையும் பெரிய சோக­மாகக் கரு­து­கி­றார்கள். மாண­வர்­களைக் காப்­பாற்ற முயன்று இறந்த அவ­ருக்கு நினை­வஞ்­சலி செலுத்­து­கின்­றார்கள். அவ­ரு­டைய சொந்தக் கிரா­ம­மான லாண்டி அர்­பா­புக்கு அவ­ரு­டைய சவப்­பெட்டி வந்­த­போது, ஊரே திரண்டு கண்ணீர் வடித்­தது. அவ­ரு­டைய சவப்­பெட்டி குழியில் இறக்­கப்­பட்­ட­போது அந்த ஊர் ஆண்கள் அனை­வரும் வாய்­விட்டுக் கத­றி­னார்கள். “எங்கள் ஊருக்கே பெருமை தேடித்­தந்த படிப்­பாளி அவர். மிகப் பெரிய பொறுப்பில் இருந்த அவரை நாங்கள் எங்கள் ஊர்க்­கா­ர­ராகப் பெற மிகவும் கொடுத்து வைத்­தி­ருந்­தி­ருக்­கிறோம், இப்போது இழந்துவிட்டோம்” என்று ஆற்றாமையுடன் கூறினார்கள்.

நன்றி : நியூயோர்க் டைம்ஸ்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல