திங்கள், 12 ஜனவரி, 2015

நீங்கள் இணையத் தளத்தின் அடிமையா..?




புதிய போதை

இணையம்... கேட்­டதைக் கொடுக்கும் அலா­வுதீன் பூதம். மெகா சைஸ் புத்­த­கங்­களைப் புரட்­டா­மலே, சீனியர் ஜீனி­யஸ்­க­ளிடம் சந்­தேகம் கேட்­கா­மலே விர­ல­சைவில் தகவல் சுரங்­கத்தைத் திறக்கும் தங்கச் சாவி. அப்­ப­டிப்­பட்ட சூப்பர் பவர் பூதம் நம் கட்­டுப்­பாட்டை மீறினால் என்ன ஆகும்? மனி­த­குல மேம்­பாட்­டுக்­காக உரு­வாக்­கப்­பட்ட ஒரு தொழில்­நுட்பம், பூமராங் ஆகி அவ­னையே தன் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ கதை­களைப் படித்­தி­ருப்போம். அப்­ப­டித்தான் இன்று இணையம் தன்­னு­டைய அடி­மை­யாக மனி­தனை மாற்றிக் கொண்­டி­ருக்­கி­றது. சரி... இதனால், என்ன ஆகி­விடப் போகி­றது? ‘‘இணைய அடி­மைத்­தனம் என்­பது தனிப்­பட்ட பிரச்­னை­யல்ல. வேறு ஏதோ ஒரு மன­நலக் கோளாறின் அடை­யா­ள­மா­கவோ, தீவி­ர­மான பிரச்சி­னையின் வடி­கா­லா­கவோ இருக்­கலாம். அதனால், உட­ன­டி­யாகக் கவ­னிக்க வேண்­டி­யது அவ­சியம்’’ என்­கிறார் மன­நல மருத்­துவர் மோகன் வெங்­க­டா­ச­ல­பதி.



‘‘தேவைக்கும் அதி­க­மாக இணை­யத்தைப் பயன்­ப­டுத்­து­வது, பயன்­ப­டுத்தும் உந்­து­தலைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யா­தது, நாளுக்கு நாள் இந்த நேரம் அதி­க­மா­வது, இதனால் குடும்பம், தொழில், மன­ரீ­தி­யாக பாதிப்பு ஏற்­ப­டு­கிற சூழ்­நிலை... இதையே Internet addiction disorder என்று சொல்­கிறோம். கடந்த சில ஆண்­டு­க­ளா­கவே ஆய்­வுக்­கு­ரிய, வருத்­தத்­துக்­கு­ரிய பிரச்சி­னை­யாக இணைய அடி­மைத்­தனம் அதி­க­ரித்து வரு­கி­றது. ‘உல­க­ளா­விய இக்­கட்­டான சூழல்’ என்று இதை ஆய்­வா­ளர்கள் கவ­லை­யோடு கூறு­கி­றார்கள். இணை­யத்தைப் பற்­றியே நினைத்துக் கொண்­டி­ருப்­பது, வெளி­யேற வேண்டும் என்று நினைத்­தாலும் முடி­யா­தது, இணையத் தொடர்பு கிடைக்­கா­த­போது பதற்றம் ஏற்­ப­டு­வது, இணை­யப்­ப­யன்­பாட்டில் கட்­டுப்­பாட்டைப் பின்­பற்ற முடி­யா­தது, கொடுத்த வாக்கைக் காப்­பாற்ற முடி­யாத நிலை போன்ற அறி­கு­றி­களின் மூலம் இதைக் கண்­டு­பி­டிக்க முடியும்.

தன்­னம்­பிக்­கை­யின்மை, தனிமை, வெறுமை, குற்ற உணர்ச்சி, பயம், கவலை போன்ற வாழ்க்­கைப்­பி­ரச்­னை­களை எதிர்­கொள்ள முடி­யாமல், சிலர் அதற்கு நிவா­ர­ண­மாக இணை­யத்தைப் பயன்­ப­டுத்த ஆரம்­பிப்­பார்கள். கடை­சியில் அந்தப் பிரச்சி­னை­களும் தீராமல், இணைய அடி­மைத்­த­னமும் கூடு­த­லாக வந்து சேர்­வ­துதான் மிச்சம். இணை­யத்தை அதீ­த­மாகப் பயன்­ப­டுத்­து­கி­ற­வர்கள் மனச்­சோர்வு, மனப்­ப­தற்றம், அடுத்­த­வர்­க­ளிடம் சரி­யான முறையில் உற­வு­களைப் பரா­ம­ரிக்க முடி­யாத குற்ற உணர்ச்சி போன்ற மன­நலப் பாதிப்­புக்கு ஆளா­ன­வர்­க­ளா­கவே பெரும்­பாலும் இருக்­கி­றார்கள். அத­னால்தான், இணை­ய­அ­டி­மைத்­தனம் என்­பதை ஒரு தனிப்­பட்­ட ­வி­ஷ­ய­மாகப் பார்க்கக் கூடாது என்று மருத்­து­வர்கள் சொல்­கி­றார்கள்.

நல்ல மன­நி­லையில் இருக்­கிற ஒரு­வரும் இணை­யத்தை அதி­க­மாகப் பயன்­ப­டுத்­தும்­போது, நாள­டைவில் மன­நலப் பிரச்­னை­களில் மாட்டிக் கொள்­வது நடை­முறை உண்மை. தூக்­கத்தை இழப்­பது, தொழில் திறன் குறை­வது, வேலைக்குச் செல்­லாமல் தவிர்ப்­பது, மாண­வர்­க­ளாக இருந்தால் கல்­வியில் கவனம் செலுத்த முடி­யாமல் போவது, சமூ­கத்தில் மரி­யாதை குறை­வது போன்ற பிரச்சி­னைகள் இதனால் உரு­வாகும். சாதா­ர­ண­மாக ஆரம்­பிக்கும் ஒரு தேவையை நாள­டைவில் அடி­மைத்­த­ன­மாக மாற்­று­வது மூளையில் இருக்கும் ரிவார்ட் சென்­டர்தான் (Reward center). போதைப் பழக்­கங்கள் எல்­லாமே மூளை சம்­பந்­தப்­பட்­டவை என்­பதை யோசித்தால் புரியும். இந்த போதைப்­பொ­ருட்கள் மூளையில் என்­ன­வெல்லாம் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­கி­றதோ, அதே­வே­தி­யியல் மாற்­றங்­க­ளைத்தான் இணை­யமும் மூளையில் ஏற்­ப­டுத்­து­கி­றது.

விளை­யாட்­டுகள், சூதாட்­டங்கள், பங்­குச்­சந்தை, நீலப்­ப­டங்கள் ஆகி­யவை பர­வ­லாகக் காணப்­ப­டு­கிற அடி­மைத்­த­னங்கள். இவற்றில் சமூக வலைத்­த­ளங்கள் இன்னும் அதிக பாதிப்பை ஏற்­ப­டுத்­து­கி­றது. ‘நிஜ­வாழ்வில் யாரும் தேவை­யில்லை’ என்று நினைக்­கிற ஒருவர், ஆயி­ரக்­க­ணக்­கான நண்­பர்­களை முக­நூலில் வைத்துக் கொண்டு அவர்­க­ளுடன் நட்பு பாராட்­டு­வது பொய்­யா­னது மட்­டு­மல்ல... ஆபத்­தா­னதும் கூட. ஒரு புகைப்­ப­டமோ, நிலைத்­த­க­வலோ பதிந்­து­விட்டு, அதற்கு வரும் லைக், கமென்ட்­டு­க­ளையே பார்த்­துக்­கொண்­டி­ருப்­பது மன­நோயின் அடை­யா­ளமே. இணை­யத்­துக்கு அடி­மை­யா­ன­வர்­களை மீட்­ப­தற்­காக மறு­வாழ்வு மையங்கள் அமைக்கும் அள­வுக்கு சீனாவின் நிலை­மை ­மோ­ச­மா­கி­யி­ருக்­கி­றது. கொரி­யா­விலும் இதே கதைதான் என்­பதை அந்த அரசே ஒப்புக் கொண்­டுள்­ளது. அமெ­ரிக்­காவில் இணைய அடிமை மறு­வாழ்வு மையங்கள் செயல்­படத் தொடங்­கி­விட்­டன.

25 வயது வரைதான் நம் மூளையில் வயரிங் அப் (Wiringup) என்று சொல்­லக்­கூ­டிய முதிர்தல் நடக்­கி­றது. மூளையின் செல்­க­ளுக்­கி­டையில் எந்­த­அ­ள­வுக்கு இணைப்பு ஏற்­பட்டு வளர்ச்­சி­ய­டை­கி­றதோ, அந்த அளவு நாம் புத்­தி­சா­லி­யா­கவும்,முக்­கிய முடி­வுகள் எடுப்­பதில் பக்­கு­வ­மா­ன­வர்­க­ளா­கவும் உரு­வாவோம்.

ஆனால், இணை­யத்தின் உப­யத்தால் குழந்தைப் பரு­வத்­தி­லேயே எல்லா தக­வல்­க­ளையும் இன்று தெரிந்து கொண்­டாலும் மூளைத்­திறன் குறை­வாக இருப்­பது அப்­பட்­ட­மான உண்மை. இந்தப் பாதிப்­புக்கு 17 முதல் 20 வய­து­வரை உள்­ள­வர்கள் ஆளா­கி­றார்கள் என்­பதால், பதின் பரு­வத்தில் இருப்­ப­வர்கள் மிகுந்த கவ­னத்­துடன் இருக்க வேண்டும். சில பிரச்­னை­களை நாமே புரிந்­து­கொண்டு, சரி செய்து கொள்­வது மன­நல சிகிச்­சையில் ஒரு­வகை.

சில­ருக்கு மன­நல ஆலோ­சனை, சிகிச்சை தேவை­யி­ருக்கும். பாதிக்­கப்­பட்­ட­வரின் எண்­ணங்­க­ளையும் நடத்­தை­க­ளையும் மாற்றி இந்தப் பழக்­கத்தில் இருந்து வெளிக்­கொண்டு வரு­வது இதில் ஒரு முறை. தொழில்­ரீ­தி­யாக, தனிப்­பட்ட தேவையின் அடிப்­ப­டையில் மட்­டுமே இணை­யத்தைப் பயன்­ப­டுத்த முயற்­சிப்­பது இன்­னொரு வழி. இந்த இணை­ய­த­ளங்­க­ளைத்தான் பார்க்க வேண்டும், இத்­தனை மணி நேரம்தான் அனு­மதி போன்ற கட்­டுப்­பா­டு­களை நம் கம்பி­யூட்­ட­ருக்கு கொடுக்கும் மென்­பொ­ருட்­களைப் பயன்­ப­டுத்­து­வதும் பலன் தரும்!’’

நீங்கள் இணை­ய­த்தள

அடி­மையா?

கிம்­பர்லி யங் என்ற மருத்­துவர் இந்தப் பரி­சோ­தனை முறையை வடி­வ­மைத்­தி­ருக்­கிறார். முதலில் சில கேள்­விகள்...

1. தேவைக்கும் அதி­க­மாக இணை­யத்தைப் பயன்­ப­டுத்­து­கி­றீர்­களா?

2. துணை­யுடன் இருப்­ப­தை­விட இணையம் அதிக மகிழ்ச்­சியைத் தரு­கி­றதா?

3. வீட்டு வேலை­களை எல்லாம் தள்­ளி­வைத்­து­விட்டு இணை­யத்தில் உல­வு­கி­றீர்­களா?

4. தொழிலோ, படிப்போ... இணை­யத்தில் அதிக நேரம் செல­வ­ழிப்­பதால் பாதிக்­கப்­ப­டு­கி­றதா?

5. இணையம் மூல­மாக புதிய உற­வுகள் அதி­க­மா­கி­றதா?

6. அதிக நேரம் இணை­யத்தில் இருப்­ப­தாக உங்­களைக் குற்றம் சாட்­டு­கி­றார்­களா?

7. உங்­க­ளது இணையப் பயன்­பாடு பற்றி பகி­ரங்­க­மாகப் பேசாமல் இரக­சியம் காக்­கி­றீர்­களா?

8. இணை­யத்தால் உங்­க­ளது செயல்­திறன் குறைந்­து­விட்­ட­தாக உணர்­கி­றீர்­களா?

9. முக்­கி­ய­மான பிற வேலை­களை விட்­டு­விட்டும் இணை­யத்தைப் பயன்­ப­டுத்து கிறீர்­களா?

10. இணை­யத்தைப் பயன்­ப­டுத்­தும்­போது யாரே­னும்­இ­டை­யூறு செய்தால் கோபம் வரு­கி­றதா?

11. எப்­போது ஒன்­லை­னுக்கு செல்வோம் என்று நினைக் கிறீர்­களா?

12. வாழ்க்­கையின் முக்­கிய விஷ­யங்­களை மனம் யோசிக்கும் நேரத்தில் அந்த சிந்­த­னை­களைத் தடை செய்­து­விட்டு மீண்டும் இணை­யத்­துக்குள் மூழ்­கு­கி­றீர்­களா?

13. இணையம் இல்­லாத ஒரு­நாளை வெறு­மை­யாக உணர்­கி­றீர்­களா?

14. இன்னும் கொஞ்ச நேரம்தான் என்று உங்­க­ளுக்கு நீங்­களே சொல்லிக் கொள்­கி­றீர்­களா?

15. வேறு வேலை­களில் இருக்­கும்­போதும் இணை­யத்­துக்கு எப்­போது போவோம் என்று ஏக்கம் வரு­கி­றதா?

16. நீண்ட நேரம் இணையம் பயன்­ப­டுத்­து­வதால் தூக்­கத்தை இழக்­கி­றீர்­களா?

17. இணையம் பயன்­ப­டுத்தும் நேரத்தை மறைக்க விரும்­பு­கி­றீர்­களா?

18. வெளியே செல்லும் நேரத்தைக் குறைத்துக் கொண்டு இணை­யத்­தி­லேயே இருக்க விரும்­பு­கி­றீர்­களா?

19. இணையப் பயன்­பாட்டைக் குறைக்க முயற்­சித்தும் முடி­ய­வில்­லையா?

20. சாதா­ர­ண­மாக நிம்­ம­தி­யி­ழந்து இருக்கும் நீங்கள் இணை­யத்­துக்கு வந்­த­வுடன் உற்­சா­க­மாக உணர்­கி­றீர்­களா?

இக்­கேள்­வி­க­ளுக்குப் பின் வரும் 5 பதில்களில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து மதிப் பெண்களைக் குறித்துக் கொள்ளுங்கள். உங்களது மொத்த மதிப்பெண்களுக்கான முடிவு கடைசியில்...

அரிதாக - 1

எப்போதாவது - 2

அவ்வப்போது - 3

மிகப் பெரும்பாலானநேரங்களில் - 4

எப்போதும் - 5

முடிவுகள்:

20 முதல் 49 வரை

உங்களது இணையப் பயன்பாடு இயல்பான அளவில்தான் உள்ளது. சற்று அதிக நேரம் இணையத்தில் இருப்பது போல தோன்றினாலும் கட்டுப்படுத்திக் கொள்ளும் சக்தி உங்களுக்கு உண்டு.

50 முதல் 79 வரை

இணையத்தினால் அடிக்கடி பிரச்னைக்கு ஆளாகிறீர்கள். உங்களை நீங்களே மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது... உஷார்!

80 முதல் 100 வரை

இணையத்துக்கு நீங்கள் முழுமையாக அடிமையாகிவிட்டீர்கள். கணிசமான அளவு சேதாரம் உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல