இழந்தவை எதுவானாலும் இழப்புக்களை ஈடுசெய்வதென்பது எவராலும் முடியாது. அது உயிராக இருந்தால் வேதனைகள் ஒருவருக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் அது உறுத்தலே. அந்தவகையில், புகையிலைப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும், புற்றுநோயினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்கவும் புகையிலை எதிர்ப்பு தினமானது 1987ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில், புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த, ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31 ஆம் திகதி இத்தினம் உலகளவில் நினைவு கூரப்படுகின்றது. புகையிலைப் பாவனை எனும்போது வெறுமனே புகைத்தலை மட்டும் நாம் முன்னிலைப்படுத்த வில்லை. புகையிலையை உபயோகித்து தயாரிக்கப்படும் அனைத்து விதமான பொருட்களுமே இதில் உள்ளடங்குகின்றன.
புகைத்தல் மட்டுமன்றி புகையிலையைக் கொண்டு தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களுமே எமது உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் என்பது தெரிந்தும் அதை எம் சமூகம் விடுவதாய் இல்லை. இன்று இளைய சமுதாயத்தினர் மத்தியில் அதிகரித்து வரும் புகையிலைப் பாவனையானது அவர்களின் எதிர்காலத்தையே கேள்வி குறியாக்கிவிடும் அளவுக்கு அதிக தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் அவர்கள் அதிக அக்கறை செலுத்துவதில்லை.
புகையிலைப் பாவனையாலும் புகைத்தல் போன்ற பழக்கங்களினாலும் உலகம் முழுவதும் 60 இலட்சம் பேர் உயிரிழக்கின்றனர் என்றால் நம்புவீர்களா..? . சராசரியாக 6 விநாடிகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் இம்மரணங்கள் நிகழ்கின்றன. என்றாலும், புகைப்பவர்களின் எண்ணிக்கையோ குறைந்தபாடில்லை. உலக சுகாதார நிறுவனத்தின் தகவல்களின் படி புகையிலை பாவனையால் இதயம் மற்றும் இரத்தக்குழாய் நோய்கள், மாரடைப்பு, மார்புவலி, இதயக்கோளாறினால் ஏற்படும் திடீர் மரணம், ஸ்ட்ரோக் (பக்கவாதம்) போன்றன ஏற்படவும் காரணமாக அமைகிறது எனவும் குறிப்பாக வாய், தொண்டை, நுரையீரல், வயிறு, சிறுநீரகம், சிறுநீர்ப்பை உள்ளிட்ட உடல் பாகங்களில் புற்றுநோய் உண்டாகவும் புகையிலையே காரணம் எனவும் குறிப்பிடுகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் எதிர்வரும் இருபது வருடங்களில் நாட்டில் புகையிலைப் பாவனையால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக அதிகரிக்கும் எனவும் இன்றைய நிலையில், புகையிலைப் பொருள் பாவனை காரணமாக இலங்கையில் வருடத்திற்கு 20 ஆயிரம் பேர் வரையில் இறக்கின்றனர் எனவும் உலக சுகாதார நிறுவனத்தால் வெளியிடப்பட்ட தரவுகள் குறித்து நிற்கின்றன. இது மட்டும் இல்லாமல் அதே எண்ணிக்கையானவர்கள் பல்வேறு நோய்களுக்கு இலக்காவதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இன்றைக்கு உலக அளவில் 15 வயதுக்கு மேற்பட்ட ஆண்களில் 57 சதவீதமானோரும், பெண்களில் 10.8 சதவீதமானோரும் புகையிலையை ஏதோ ஒரு வடிவத்தில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக இவ்வயது பிரிவினர் பாடசாலை செல்பவர்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. உலக அளவில் 47 சதவீதமான ஆண்களும், 12 சதவீதமான பெண்களும் புகைத்தல் பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளனர். வளர்ச்சியடைந்த நாடுகளில் 42 சதவீதமான ஆண்களும் 24 சதவீதமான பெண்களும், வளர்ச்சியடைந்து வரும் நாடுகளில் 48 சதவீதமான ஆண்களும் 7 சதவீதமான பெண்களும் புகைத்தல் பழக்கமுடையவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
வளர்ந்து வரும் நாடு என்ற வகையில் இலங்கையும் அதில் உள்ளடங்குகின்றது. ஒரு சிகரெட் மனித ஆயுளில் 8 நிமிடங்களை கொல்கிறது. ஆனால் இவற்றை எமது சமூகம் உணர மறுப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு இன்று அதிகரித்துவரும் புகையிலைப் பாவனையானது ஆண்கள் மத்தியில் மட்டுமல்லாது பெண்கள் மத்தியிலும் அதிகளவு இடம்பிடித்துள்ளது. கிராமப்புறங்களில் பெண்கள் பொழுதுபோக்காக வெற்றிலையோடு புகையிலையையும் சேர்த்து வாயில் அசை போடுவது வழக்கம். சில சந்தர்ப்பங்களில் சுரக்கும் உமிழ்நீரினை வெளியேற்றுவதுமில்லை. இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் தாக்கத்தினை அவர்கள் உணர்வதில் இருக்கும் தாமதம் அவர்களின் உயிரையே இறுதியில் பறித்துவிடுகின்றது.
ஒரு பொருளை நுகர்ந்து, அதை சுவைப்பதில் இருக்கும் ஆர்வம் அப்பொருளின் எதிர்விளைவுகள் பற்றிய சிந்தனையில் இருப்பதில்லை.
இவ்வாறான பொருட்களின் உபயோகத்தால் ஆண்களின் ஆண்மைத் தன்மை குறையவும் மலட்டுத் தன்மை ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் அவ்வாறான தவறுகள் தெரிந்தே விடப்படுகின்றன. புகையிலை அல்லது புகையிலையால் தயாரிக்கப்பட்ட (சிகரெட்) ஏதேனும் பொருட்களில் இருந்து வெளியாகும் புகையானது சுமார் 250 வகையான நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள், இரசாயனங்கள், உடலுக்கு அதிகளவு பாதிப்பை உருவாக்கும் உலோகங்கள் என்பவற்றை உள்ளடக்கியிருப்பதாக ஆய்வின் தகவல்கள் வெளிப்படுத்தியுள்ள நிலையில் இவற்றில் பதினொரு வகையான மூலக்கூறுகள் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது..
குறிப்பாக குரூப் ஒன்று கார்சிகோஜன் (Group 1 Carcinogens) எனும் மூலக்கூறானது உடலுக்கு மிகவும் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது எனவும் அம்மூலக்கூறானது பொதுவாக புகையிலையால் தயாரிக்கப்படும் பொருட்களில் உள்ளடங்கியுள்ளது என்றும் குழந்தைகளுக்கான மாஸ்ஜெனரல் மருத்துவமனையைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் புகையிலையில் சேர்க்கப்படுகின்ற இரசாயனப் பொருட்களால் அதை பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் மாத்திரமன்றி அருகில் இருப்பவர்களும் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். உதாரணமாக மனைவி கருவுற்றிருக்கும் போது, கணவர் அருகிலிருந்து புகைப்பிடித்தால் குழந்தை வளர்ச்சி தடைபட்டு எடை குறையவும், கருச்சிதைவு ஏற்படவும் கூட வாய்ப்பு அதிகம். மேலும் குழந்தையின் அறிவு வளர்ச்சி தாமதப்படும். அதேவேளை குழந்தைப்பருவத்திலேயே ஆஸ்துமா ஏற்படவும் வாய்ப்புகள் அதிகமுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் மக்கள் இன்னும் விழிப்படையவில்லை என்றே கூறவேண்டும்.
உடனடியாக எந்தவொரு பழக்கத்தையும் மாற்றிக் கொள்வதென்பது கடினமே. ஆனால் பாதிப்புகள் வருமென்று தெரிந்தும் அவற்றை புறக்கணிக்காது அதன் பாவனையை அதிகரிக்கும் போது இழப்புகளைத் தடுப்பதென்பது கேள்விக்குறியான ஒரு விடயமே.
இவ்வாறான செயற்பாடுகளால் ஏற்படும் இழப்புக்களை தடுப்பதற்கு பல நடவடிக்கைகள் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதேவேளை அவை அமுல்படுத்தப்படும் போது குறிப்பிட்ட அளவு நன்மைகள் ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவை இவ்வாறான பொருட்களை உபயோகிக்கும் தரப்பினரை பொறுத்தது என்றே கூற வேண்டும்.
ஒவ்வொரு தனிநபருக்கும் அவர்களின் வாழ்க்கையை திட்டமிடும் உரிமை இருக்கின்றது. எதிர்காலம் தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும். விளைவுகள் பற்றிய தகவல்களை சிறுவயது முதல் நாம் எமது பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்கவேண்டும். பாடசாலை செல்லும் போது சக நண்பர்களுடன் இணைந்து பொழுது போக்காக பழகும் சில விடயங்கள் காலப்போக்கில் அவர்களை அப்பழக்கத்திற்கு அடிமையாக்கிவிடும்.
எனவே இவ்விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும். பாடசாலைகளிலும் சரி வீட்டு சூழலிலும் சரி இவ்விடயம் தொடர்பில் மாணவர்களுக்கு அறிவூட்டுதல் கட்டாயமாகும். எதிர்கால சமுதாயத்தினரின் வளமானதும் ஆரோக்கி யமானதுமான எதிர்காலம் இன்றைய தலைமுறையினரின் மாற்றத்தில் உள்ளத ென்பதை அனைவரும் உணர வேண்டும்.
ஆர்.தேவிகா

.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக