திங்கள், 5 ஜனவரி, 2015

நெற்­றியில் ஏற்­படும் சுருக்­கங்­களை நீக்க...

கவலை இல்­லாத மனி­தனே இருக்க முடி­யாது. இன்பம் என்ற ஒன்று இருந்தால் கண்­டிப்­பாக துன்­பமும் இருக்­கவே செய்யும். உல­கத்தில் வாழும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் ஒவ்­வொரு விதத்தில் கவ­லைகள் இருக்கும். பல­ருக்கு பண கஷ்டம் என்றால், இன்னும் பல­ருக்கு உடல் ரீதி­யான கஷ்­டங்கள். இன்னும் சில­ருக்கு மன ரீதி­யான கஷ்­டங்கள். இந்த ஒவ்­வொரு வகை­யான கஷ்­டங்­களையும் மேலும் பல வகை­யாக பிரிக்­கலாம். மனி­த­னுக்கு அவ்­வ­ளவு கஷ்­டங்கள் உள்­ளன. இப்­படி அவன் சந்­திக்கும் பல கஷ்­டங்­களில் ஒன்று தான் தனக்கு வய­தாகும் கஷ்டம்.


ஆம், இள­வட்­ட­மாக இருக்கும் மனி­த­னுக்கு, எப்­போது உடல்­ரீ­தி­யான மாற்­றங்­களால் வயது அதி­க­ரிப்­பது தெரிய ஆரம்­பிக்­கி­றதோ, அப்­போதே பல­ருக்கும் உள­வியல் ரீதி­யான கவ­லைகள் ஆட்­கொள்ளும். தன் வயதை மறைத்து இள­மை­யாக காட்­சி­ய­ளிக்க தங்­களால் முடிந்த அனைத்­தையும் அவர்கள் செய்­வார்கள். அப்­படி ஒரு அறி­குறி தான் நம் சரு­மத்தில் ஏற்­படும் சுருக்­கங்கள். வய­தா­வதால் மட்டும் இது ஏற்­ப­டு­வ­தில்லை. அதிக மன அழுத்தம் மற்றும் வேலைப்­ப­ளு­வி­னாலும் இது ஏற்­ப­டு­கி­றது. இதனை பயன்­ப­டுத்தி சந்­தையில் இன்று பல நிறு­வ­னங்கள் இந்த க்ரீம், அந்த க்ரீம் என அடுக்கிக் கொண்டே போகி­ன்றன. நாமும் ஒன்றினை மாற்றி ஒன்­றாக வாங்கிக் கொண்டே இருக்­கிறோம். ஆனால் சீக்­கி­ரமே ஏற்­படும் முதிர்ச்­சியை போக்க நாம் ஆரோக்­கி­ய­மான வாழ்க்கை முறையை கடைப்­பி­டிக்­கி­றோமா என்­பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் இப்­படி சந்­தையில் உள்ள பொருட்­களை நாடு­வதை விட வீட்­டி­லேயே அதற்­கான தீர்வை நாம் பெறலாம் என்­பது உங்­க­ளுக்கு தெரி­யுமா? இயற்­கை­யான வழி­களில் வீட்­டி­லேயே உங்கள் சரும சுருக்­கங்­களை போக்க சில எளிய டிப்ஸ்­களைப் பார்க்­க­லாமா?

கடு­மை­யான வாழ்க்கை முறை: நீங்கள் சரி­யான வாழ்க்கை முறையை தான் வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றீர்கள் என்­பதை உங்­களால் உறு­தி­யாக சொல்ல முடி­யுமா? நீங்கள் ஆரோக்­கி­ய­மாக உண்­ணு­கி­றீர்­களா? நீங்கள் சரி­யான நேரத்தில் தூங்­கு­கி­றீர்­களா? நாள் முழு­வதும் வேலை பார்த்த பின்பு மிகவும் சோர்­வ­டைந்து விடு­கி­றீர்­களா? உங்­களைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விட­யங்­க­ளுக்கு கூட எரிச்சல் ஏற்­ப­டு­கி­றதா? இதற்­கெல்லாம் சேர்த்து பார்த்தால் கிடைக்கும் பதில் ஒன்று தான். - நீங்கள் சரி­யான வாழ்க்கை முறையை பின்­பற்­றாமல் இருக்­கி­றீர்கள். 40 வயது தொடங்­கிய பிறகு, உங்கள் உண­வுப்­ப­ழக்­கங்­க­ளிலும், வாழ்க்கை முறை­யிலும் நல்­ல­தொரு மாற்­றத்தை கொண்டு வர வேண்டும். இதை எப்­படி சாத்­தி­ய­மாக்­கு­வது என குழப்­ப­மாக உள்­ளதா? உங்கள் உண­வு­களில் அள­வுக்கதி­க­மான பச்சை காய்­க­றி­க­ளையும், ஆன்­டி-­ஆக்­ஸி­டன்ட்­க­ளையும் சேர்த்துக் கொள்­ளுங்கள். தினமும் உடற்­ப­யிற்சி செய்­யுங்கள் அல்­லது அரை மணி­நே­ர­மா­வது நடை கொடுங்கள். இதனை தொடர்ச்­சி­யாக ஒரு மாதத்­திற்கு செய்­யுங்கள். உங்கள் முகத்தில் கண்­டிப்­பாக உங்­களால் மாற்­றத்தை உணர முடியும்.

ஒலிவ் எண்ணெய் மசாஜ்: இனி நெற்­றியில் காணப்­படும் சுருக்­கங்­களைப் போக்­கு­வ­தற்­கான சில தீர்­வு­களை பார்க்­கலாம். இதற்­காக எக்ஸ்ட்ரா விர்ஜின் ஒலிவ் எண்­ணெய்யை கொஞ்சம் எடுத்துக் கொள்­ளுங்கள். சிறு துளிகள் இருந்­தாலே போது­மா­னது. சுருக்­கங்கள் இருக்கும் பகு­தி­களில் வெது­வெ­துப்­பான ஒலிவ் எண்­ணெய்யை கொண்டு, கீழி­ருந்து மேல் நோக்கி, ஒரு 10 நிமி­டங்­க­ளுக்கு மென்­மை­யாக மசாஜ் செய்­யவும். சிறந்த பலனைப் பெற, கொஞ்சம் தேங்காய் எண்­ணெ­யையும் சேர்த்துக் கொள்­ளலாம். ஒலிவ் எண்­ணெ­யுடன் சேரும் தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த ெமாய்ஸ்­சு­ரை­ச­ராக விளங்கும். இது சரு­மத்­திற்கு சிறந்த முறையில் நீர்ச்­சத்தை அளிக் கும்.

சிட்ரஸ் பழ மசாஜ் விட்­டமின் சி மற்றும் ஈ வழ­மை­யாக உள்ள ஆரஞ்சு மற்றும் எலு­மிச்சை போன்ற சிட்ரஸ் பழங்கள், உங்கள் சரும ஆரோக்­கி­யத்­திற்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். சருமம் மென்­மை­யாக இருப்­ப­தற்கு சிட்ரஸ் பழங்கள் பெரிதும் உதவி செய்­கின்­றன. இது­போக, இப்­ப­ழங்­களின் தோல்­களும் அதே அள­வி­லான நன்­மையை அளிக்­கின்­றன. சுருக்­கங்கள் நிறைந்­தி­ருக்கும் பகு­தி­களில் மற்றும் நீண்ட கால­மாக இருக்கும் கரும்­புள்­ளிகள் இருக்கும் பகு­தி­களில் இந்த சிட்ரஸ் மசாஜை முயற்சி செய்து பார்க்­கலாம்.

வீட்டுப் ஃபேஷியல் மசாஜ்: நெற்­றியில் உள்ள சுருக்­கங்­களைப் போக்க இரசா­யனம் இல்­லாத வீட்டு பேஷியல் மசாஜ்கள் பெரிதும் உதவும். உங்கள் ஃபேஸ் பேக்கை நீங்கள் தயா­ரிக்கும் போது, சரு­மத்­திற்கு நீர்ச்­சத்தை அளித்து புத்­து­ணர்­வோடு வைத்­தி­ருக்க உதவும் பொருட்­க­ளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த பேஸ் பெக்கை முகத்தில் தட­விய பிறகு, முகத்தின் தசை­களை அசைக்­கா­தீர்கள். ஃபேஸ் பேக் தட­வப்­பட்­டி­ருக்கும் போது, முகத்தின் தசை­களை அசைத்­தீர்கள் என்றால், அது நெற்றி சுருக்­கங்­க­ளுக்கு ஆபத்தாய் விளையும்.

ஆளி­விதை எண்ணெய்: நெற்­றியில் உள்ள சுருக்­கங்­களை தற்­கா­லி­க­மாக நீக்க ஆளி­விதை எண்­ணெய்யை பயன்­ப­டுத்­தலாம். இரண்டு வாரத்­திற்கு, 2-–3 டீஸ்பூன் ஆளி­விதை எண்­ணெய்யை தொடர்ச்­சி­யாக பயன்­ப­டுத்தி வந்தால், இந்த சுருக்­கங்கள் மாய­மா­வதை கண்டு நீங்கள் வியந்து போவீர்கள். இதற்கு மாற்­றாக, நீங்கள் விளக்­கெண்­ணெ­யையும் பயன்­ப­டுத்­தலாம். இதுவும் உட­னடி பலனை அளிக்கும்.

முட்டை வெள்ளைக்கருவுடன் கற்றாழை ஜெல்: கற்றாழை மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு என இரண்டிலுமே விற்றமின் ஈ வழமையாக நிறைந்துள்ளது. இதனை இளமைக்கான விட்டமின் என்றும் கூறலாம். இந்த இரண்டையும் கலந்து ஒரு பேஸ்ட் ஒன்றை தயார் செய்து கொள் ளுங்கள். அதனை நெற்றியில் மெதுவாக தடவுங்கள். அதை அப்படியே ஒரு 15 நிமிடங்களுக்கு விட்டு விட்டு, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல