திங்கள், 12 ஜனவரி, 2015

பிரான்ஸை உலுக்கிய அல்கைதா தாக்குதல்கள்

சார்ளி ஹெப்டோ என்ற பத்­தி­ரி­கையின் பாரிஸ் அலு­வ­லகம். அந்த அலு­வ­ல­கத்தில் ஆசி­ரியர் பீடக் கூட்டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இரு ஆயு­த­பா­ணிகள் அலு­வ­லக வளா­கத்­திற்குள் நுழை­கி­றார்கள். தாம் ஏந்­தி­யி­ருந்த துப்­பாக்­கிகள் மூலம் அங்­குள்­ள­வர்­களை சர­மா­ரி­யாக சுடு­கி­றார்கள். சுவர்­க­ளிலும் மேசை­க­ளிலும் இரத்தம் தெறிக்­கி­றது. பத்து பேர் மர­ணத்தைத் தழு­வு­கி­றார்கள். அவர்­களில் எட்டுப் பேர் பத்­தி­ரி­கையின் செய்­தி­யா­ளர்கள்.



கட்­ட­டத்தில் இருந்து வெளியே வரும் ஆயு­த­பா­ணிகள் கறுப்பு நிறக் காரை நோக்கித் திரும்­பு­கி­றார்கள். தாம் திரும்பும் வழியில் தம்மைத் தடுத்த பொலிஸா­ரையும் அவர்கள் விட்டு வைக்­க­வில்லை. அவர்­க­ளையும் சுடு­கி­றார்கள். துப்­பாக்கிச் சூட்டில் காய­ம­டைந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை கைக்­கெட்­டிய தூரத்தில் சுட்டுத் தள்ளி, தமது வன்­மத்தை வெளிப்­ப­டுத்­து­கி­றார்கள். இந்த ஆயு­த­பா­ணிகள் அல்­ஜீ­ரிய வம்­சா­வ­ளியைச் சேர்ந்த முஸ்லிம் சகோ­த­ரர்கள் என்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. ஒருவர் செய்யத் கொவ்­வாச்சி. மற்­றவர் ஷெரிப் கொவ்­வாச்சி.

இன்­னொரு காரையும் கடத்தி பாரிஸ் நகரின் வட­ப­கு­தியை நோக்கி விரை­கி­றார்கள். பாரிஸ் நகரம் முழு­வ­திலும் அல்­லோல கல்­லோலம். ஆயு­த­பா­ணி­களைத் தேடி பொலிஸார் வலை­வி­ரிக்­கி­றார்கள். பாரிஸ் நகரின் வட­கி­ழக்கில் இருந்து தகவல் வரு­கி­றது. அங்­குள்ள எரி­பொருள் நிலை­யத்­திற்குள் பிர­வே­சித்த ஆயு­த­பா­ணிகள், உணவுப் பொருட்­க­ளையும் பெற்­றோ­லையும் கொள்­ளை­யிட்டுச் சென்­றதை பொலிஸார் அறி­கி­றார்கள். கொள்ளைச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­டை­ய­வர்­களை சொல்லும் அடை­யா­ளங்­களை விசா­ரித்­த­போது, சார்ளி ஹெப்­டோவைத் தாக்­கிய ஆயு­த­பா­ணிகள் எரி­பொருள் நிலை­யத்­தையும் கொள்­ளை­யிட்­டமை தெரி­ய­வ­ரு­கி­றது. இங்கும் பொலிஸார் குவிக்­கப்­ப­டு­கி­றார்கள்.

பாரிஸ் நகரில் மீண்டும் துப்­பாக்கிச் சூட்டு சம்­பவம். பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்தர் ஒருவர் சுட்டுக் கொல்­லப்­ப­டு­கிறார். இந்தச் சம்­பவம் பற்றி பொலிஸார் அதிகம் அலட்டிக் கொள்­ள­வில்லை. அவர்கள் பாரிஸின் வடக்­கி­லுள்ள காட்டுப் பகு­தியில் ஆயு­த­பாணி சகோ­த­ரர்­களைத் தேடி வலை­வி­ரிக்­கி­றார்கள். பாரிஸ் நகரில் இருள் சூழ்­கி­றது. பத்­தி­ரிகை அலு­வ­லகத் தாக்­கு­தலில் பலி­யா­ன­வர்­க­ளுக்கு அஞ்­சலி செலுத்தும் வகையில் ஐஃபிள் கோபு­ரத்தின் விளக்­குகள் அணைக்­கப்­ப­டு­கின்­றன.

பாரிஸ் நகரில் காரொன்று கடத்­தப்­ப­டு­கி­றது. கடத்­தப்­பட்ட கார் நெடுஞ்­சா­லையில் விரை­கி­றது. பொலிஸார் பின்­தொ­டர்ந்து செல்­கி­றார்கள். பொலிஸார் மீது துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது. காரைக் கடத்­தி­ய­வர்கள் ஆயு­த­பாணி முஸ்லிம் சகோ­த­ரர்கள் தானென்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. பொலிஸார் விரட்­டு­கி­றார்கள். ஆயு­த­பாணி சகோ­த­ரர்­களின் கார் பாரிஸின் வட­கி­ழக்கில் அமைந்­துள்ள கைத்­தொழில் பேட்­டைக்கு விரை­கி­றது. அவர்கள் காரில் இருந்து இறங்கி, ஒரு அச்­ச­கத்­திற்குள் நுழை­கி­றார்கள். அதில் உள்­ள­வர்­களைப் பணயக் கைதி­யாக பிடித்து வைக்­கி­றார்கள்.

பாரிஸ் நகரின் கிழக்குப் பிர­தேசம். அங்­குள்ள யூத பல்­பொருள் அங்­கா­டிக்குள் மற்­றொரு ஆயு­த­பாணி நுழை­கிறார். அதில் ஐந்து பேரை பணயக் கைதி­க­ளாக பிடிக்­கிறார். அங்கு இருந்­த­வர்­க­ளுக்கும் ஆயு­த­பா­ணி­க­ளுக்கும் இடையில் வாக்­கு­வாதம் முற்­று­கி­றது. அதன் முடிவில் துப்­பாக்கி வெடிக்­கி­றது. இரண்டு பேர் பலி­யா­கின்­றனர். பொலிஸார் ஆயு­த­பாணி பற்­றிய தக­வல்­களை வெளி­யி­டு­கி­றார்கள். முன்­னைய தினம் பாரிஸ் நகரில் பெண் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தரை சுட்­டவர் இவர் தானென்­பது தெரிய வரு­கி­றது.

பல்­பொருள் அங்­காடி ஆயு­த­பா­ணி­யுடன் பொலிஸார் பேசு­கி­றார்கள். அச்­ச­கத்தில் சிக்­கி­யுள்ள முஸ்லிம் சகோ­த­ரர்­களைத் தாக்க வேண்­டா­மென அவர் கூறு­கிறார். சகோ­த­ரர்கள் தாக்­கப்­படும் பட்­சத்தில், அங்­கா­டியில் தடுத்து வைக்­கப்­பட்ட பணயக் கைதி­களில் ஐந்து பேர் கொல்­லப்­ப­டு­வார்கள் என்று ஆயு­த­பாணி எச்­ச­ரிக்­கிறார். மறு­பு­றத்தில், அச்­ச­கத்தை சுற்றி வளைத்த அதி­ரடிப் படை­வீ­ரர்கள் ஆயு­த­பா­ணி­யுடன் பேரம் பேசு­கி­றார்கள். அவர்­களோ, தாம் ஜிஹாத் போரா­ளி­க­ளாக வீர மர­ணத்தைத் தழுவ விரும்­பு­வ­தாகக் கூறு­கி­றார்கள்.

மணித்­து­ளிகள் கழி­கின்­றன. அச்­ச­கத்தில் துப்­பாக்கிச் சூட்டு சத்­தங்கள் கேட்­கின்­றன. குண்­டுகள் வெடிக்­கின்­றன. சகோ­த­ரர்­களைக் கொன்று விட்டு, பணயக் கைதியை மீட்டு விட்­ட­தாக அதி­ர­டிப்­படை வீரர்கள் அறி­விக்­கி­றார்கள். பாரிஸ் நகர யூத பல்­பொருள் அங்­கா­டி­யிலும் குண்டு வெடிப்புச் சத்­தங்கள். ஆயு­த­பாணி கொல்­லப்­ப­டு­கிறார். ஆயு­த­பா­ணி­யுடன் பணயக் கைதிகள் நால்­வரும் பலி­யா­ன­தாக தகவல் வெளி­யா­கி­றது. தமக்கு அல்கை­தா­விடம் இருந்து நிதி கிடைத்­த­தாக ஆயு­த­பா­ணி­யொ­ருவர் கூறிய தக­வ­லையும் பொலிஸார் வெளி­யி­டு­கி­றார்கள். பிரெஞ்சுத் தொலைக்­காட்­சி­களில் காட்­சிகள் மாறு­கின்­றன. ஜனா­தி­பதி பிரன்­சுவா ஹொல்­லந்தே பேசு­கிறார். பிரான்ஸ் மீதான அச்­சு­றுத்­தல்கள் ஓய­வில்லை என்­கிறார்.

கடந்த புதன்­கி­ழமை ஆரம்­பித்து வெள்­ளிக்­கி­ழமை பிற்­பகல் வரை பிரான்ஸில் நிகழ்ந்த சம்­ப­வங்­களின் தொகுப்பைப் பார்த்தோம். 2001ஆம் ஆண்டு செப்­டெம்பர் 11ஆம் திகதி ஒரு சில கணங்­களில் அமெ­ரிக்­கா­விற்கும் இஸ்­லா­மிய உல­கிற்கும் இடை­யி­லான உற­வு­களை திருப்பிப் போட்ட தாக்­குதல்.

அந்­த­ள­விற்குத் தீவி­ர­மா­ன­தாக இல்­லா­விட்­டாலும், ஐரோப்­பிய சமூ­கத்­திற்கும் அங்கு வாழும் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கும் இடை­யி­லான சமூக உற­வு­களில் கணி­ச­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக பாரிஸ் சம்­ப­வங்கள் அமைந்­தி­ருந்­தன.

அன்று உலக வர்த்­தக மையத்தின் இரட்டைக் கோபு­ரங்­களும் பென்­ட­கனும் இலக்கு வைக்­கப்­பட்­டன. இவை அமெ­ரிக்க பொரு­ளா­தா­ரத்­தி­னதும், பாது­காப்­பி­னதும் மைய நாடி­க­ளாகக் கரு­தப்­படும் கட்­ட­டங்கள். இன்று ஒரு ஊடக நிறு­வனம் இலக்கு வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. பிரெஞ்சு மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், கருத்துச் சுதந்­திரம் என்­பது மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விட­ய­மாக இருப்­பதால், சமூ­கத்தி;ல் முடிந்­த­ளவு உணர்­வு­பூர்­வ­மான தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் நோக்­கத்­துடன் ஆயு­த­பா­ணிகள் தாக்­கு­தலை நடத்­தி­யி­ருக்­கி­றார்கள். ஆயு­த­பாணி யூத பல்­பொருள் அங்­கா­டியை இலக்கு வைத்­த­தையும் எதேச்­சை­யான விஷ­மாகக் கரு­த­மு­டி­யாது. இது யூத எதிர்ப்பின் ஊடாக இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வா­தத்தின் ஆதிக்­கத்தை நிலை­நாட்­டக்­கூ­டிய செய­லெனக் கரு­தலாம்.

அமெ­ரிக்கா மீதான தாக்­குதல் மிகவும் சிக்­க­லான விஷயம். விமா­னங்­களைக் கடத்திச் சென்று அதீத பாது­காப்­புடன் கூடிய இலக்­குகள் மீது மோத வைப்­பது லேசுப்­பட்­ட­தல்ல. அத்­த­கைய தாக்­கு­த­லுக்கு அதிக தயார்ப்­ப­டுத்­தலும், கூர்­மை­யான திட்­ட­மி­டலும், நிறு­வ­ன­ம­யப்­ப­டுத்­தப்­பட்ட கட்­ட­மைப்பும் அவ­சியம். பிரான்ஸின் தலை­ந­கரில் அமைந்­துள்ள பத்­தி­ரிகை அலு­வ­ல­கத்தைத் தாக்­குதல் என்­பது அத்­தனை சிர­ம­மான விஷ­ய­மல்ல. எது­வித திட்­ட­மி­டல்­களும், பின்­புல உத­வி­களும் இன்றி தாக்­கு­தலைக் கட்­ட­விழ்த்து விட முடியும். தாக்­கு­தலை நடத்த தனி­ந­பர்கள் போதும்.

யெமனில் இயங்கும் அல்­கைதா வலைப்­பின்­ன­லுடன் தொடர்­பு­டைய ஆயு­த­பாணிக் குழு­வொன்று சார்ளி ஹெப்டோ பத்­தி­ரிகை மீதான தாக்­கு­த­லுக்கு உரிமை கோரி­யுள்­ளது. நபி பெரு­மா­னாரை கார்ட்­டூ­னாக வரைந்து கேலி செய்­த­மைக்கு பழி வாங்கும் நோக்­கத்­துடன் தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக அரே­பிய வளை­கு­டா­விற்­கான அல்­கைதா என்ற அமைப்பு அறிக்கை விடுத்­தி­ருக்­கி­றது. இந்தக் குழுவின் அறிக்­கையை புறக்­க­ணித்து விட முடி­யாது. ஏனெனில், பத்­தி­ரிகை அலு­வ­ல­கத்தைத் தாக்க வந்த ஆயு­த­பா­ணி­களில் ஒருவர், இது யெமனில் இயங்கும் அல்­கை­தாவின் வேலை­யென ஊட­கங்­க­ளிடம் கூறுங்கள் என கோஷ­மிட்­டி­ருந்தார்.

அது மாத்­தி­ர­மன்றி, அச்­ச­கத்தில் சிக்­கி­யி­ருந்த சமயம் தொலை­பே­சியின் ஊடாக தொடர்பு கொண்ட கொவ்­வாச்சி சகோ­த­ரர்­களும் அல்­கைதா பற்றி பேசி­ய­தாக அறி­விக்­கப்­ப­டு­கி­றது.

இத்­த­கைய தாக்­கு­தல்கள் மூலம் இஸ்­லா­மிய கடும்­போக்கு அமைப்­புக்கள் அடைய முனையும் இலக்­குகள் தெளி­வா­னவை. இவை மேலைத்­தேய நாடு­களில் வாழும் இஸ்­லா­மிய சமூ­கத்தின் மத்­தியில் கடும்­போக்­கு­வா­தத்தை ஏற்­ப­டுத்­து­வ­துடன் தொடர்­பு­டை­யவை. அமெ­ரிக்­கா­விலும், ஐரோப்­பிய நாடு­க­ளிலும் வாழும் முஸ்­லிம்கள் பெரும்­பாலும் வன்­மு­றை­க­ளையும், பயங்­க­ர­வா­தத்­தையும் நிரா­க­ரிக்­கி­றார்கள். எந்த சமூ­கத்தில் தஞ்சம் கோரி­னார்­களோ, அந்த சமூ­கத்தின் ஓரம்­ச­மாக வாழ்­வதை முஸ்­லிம்கள் விரும்­பு­கி­றார்கள். ஐரோப்­பிய சமூ­கங்­களில் இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான உணர்­வ­லை­களைத் தூண்டி விட்டு, அந்த சமூ­கத்­த­வர்­களை இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக தூண்டி விடு­வது கடும்­போக்கு சக்­தி­களின் நோக்கம்.

இத்­த­கைய நோக்­கத்தில் ஒரு சூட்­சுமம் மறைந்­தி­ருக்­கி­றது. ஈராக்­கிலும், சிரி­யா­விலும், எகிப்­திலும், மியன்­மா­ரிலும் இஸ்­லா­மி­யர்கள் ஒடுக்­கப்­ப­டு­கி­றார்கள் என்ற உணர்வில் வாடும் ஐரோப்­பிய முஸ்­லிம்கள் மத்­தியில், தாம் வாழும் சமூ­கத்­திலும் தாம் வெறுக்­கப்­ப­டு­கிறோம் என்ற எண்­ணத்தின் வித்­துக்­களை விதைத்து விடு­வது எளிது. இதன் மூலம், இஸ்­லா­மிய சமூ­கத்தை இல­கு­வான முறையில் ஐரோப்­பி­யர்­க­ளுக்கு எதி­ராகத் திருப்பி விடலாம்.

செப்­ரெம்பர் 11 தாக்­கு­தலைத் தொடர்ந்து நிகழ்ந்த அர­சியல், சமூக, பொரு­ளா­தார மாற்­றங்கள் மற்றும் தீவி­ர­மான புலம்­பெ­யர்­தலின் விளை­வு­களால் இன்;று ஐரோப்­பிய சமூகம் பெரிதும் முனை­வாக்­கப்­பட்டு இருக்­கி­றது. தமது இருப்பைக் கேள்­விக்­கு­றிக்கு உள்­ளாக்க வந்­த­வர்­க­ளாக ஐரோப்­பிய மக்கள் முஸ்­லிம்­களைப் பார்க்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றார்கள். இத்­த­கைய சூழ்­நி­லையில், சார்ளி ஹெப்டோ பத்­தி­ரிகை போன்ற கலா­சார அடை­யா­ளங்­களைத் தாக்­கு­வதன் மூலம் முனை­வாக்­கத்தைத் தீவி­ரப்­ப­டுத்­து­வது இஸ்­லா­மிய கடும்­போக்கு அமைப்­புக்­களின் நோக்­க­மாக இருக்­கி­றது.

இன்று ஐரோப்­பிய தலை­வர்கள் 'முஸ்­லிம்கள் வேறு, இஸ்­லா­மிய கடும்­போக்­கு­வாதம் வேறு' என்­பதை வலி­யு­றுத்த முனைந்­தாலும், இன்று ஐரோப்­பிய சமூ­கத்தில் இஸ்­லாத்­திற்கு எதி­ரான வெறுப்­பு­ணர்வு அர­சி­யல்­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. பிரான்­ஸையே உதா­ர­ண­மாக எடுத்துக் கொள்ள முடியும். ஐரோப்­பிய நாடு­களில் முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் நாடு பிரான்ஸ் தான். இங்கு தீவிர வல­து­சாரிக் கொள்­கையை அனு­ச­ரிக்கும் மாரி லா பென் என்ற பெண்­மணி, இஸ்­லாத்­திற்கு எதி­ரான கொள்­கை­களின் அடித்­த­ளத்தில் தமது அர­சியல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கிறார். அடுத்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அவ­ரது பிர­சாரத் தொனிப்­பொருள் சார்ளி ஹெப்டோ ப்டோ தாக்குதல் என்ற விடயத்தை மையப்படுத்தியதாகத் தான் அமையும்.

இத்­த­கைய அர­சியல் மாற்­றங்கள் ஐரோப்­பிய சமூ­கத்­திற்கு மாத்­தி­ர­மல்ல, ஒட்­டு­மொத்த உல­கிற்கும் பாத­க­மா­ன­தா­கவே அமையும். இந்த விட­யத்தை ஜனா­தி­பதி பிரான்­ஸூவா ஹொல்­லந்தே மாத்­தி­ர­மன்றி, பிரான்ஸில் வாழும் ஒவ்­வொரு இஸ்­லா­மி­யனும் புரிந்து கொள்­வது அவ­சியம். சமூ­கத்தை முனை­வாக்­கப்­ப­டுத்­து­வதில் தான் அல்­கொய்­தாவின் நலனும், மாரி லா பென்னின் அர­சியல் நலனும் அடங்­கி­யி­ருக்­கி­றது என்­பதை புரிந்து கொள்ளும் பட்­சத்தில், அத்­த­கைய முனைவாக்க முயற்சிகள் சாத்தி யப்படாமல் போகலாம்.

சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல