சனி, 3 ஜனவரி, 2015

யார் கைகொடுப்பார்?

கல்­வியைத் தொடர காத்­தி­ருக்கும் ஒரு யுவதி

யாருக்­காக இரவு பக­லாக கஷ்டப்­பட்­டேனோ அந்­தப்­பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகி­விட்டா. இது எல்­லாத்­தையும் பார்க்கும் போது ஆண்­ட­வனால் கொடுக்­கப்­பட்ட சித்து விளை­யாட்டா? இல்லை. கட­வு­ளுக்கு பிடிக்­கா­த­வர்­க­ளுக்கு கட­வுளால் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­ட­னையா?"




இள­மையில் கல்வி சிலையில் எழுத்து என்­பது முது­மொழி. அந்­த­வ­கையில் எமது நாடு எழுத்­த­றிவு வீதத்தில் ஆசி­யாவில் முன்­னி­லையில் திகழும் நாடாக விளங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றது. இருப்­பினும் தமது இள­மைக்­கா­லத்தில் முழு­மை­யான கல்­வியைப் பெற­மு­டி­யாத நிலை­மையும் காணப்­ப­டு­கின்­றமை துர­திர்ஷ்­ட­வ­ச­மா­னது. கடந்த காலங்­களில் காணப்­பட்ட அசா­தா­ர­ணச்­ சூழலால் அனைத்­தையும் இழந்து வறு­மையில் வாடு­ப­வர்­க­ளாக உரு­மாற்­றப்­பட்­டி­ருக்கும் பல குடும்­பங்­களில் இந்த நிலைமை தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

ஆம், நிறை­வான சாத­ரண வாழ்வை தொடர்ந்­து­கொண்­டி­ருந்த சிவ­பா­த­சுந்­தரம் சிவ­கு­மாரின் குடும்­பத்தில் பெண்­பிள்ளை மலர்ந்­தது. சிறு­வ­யது முதல் கல்­வியில் ஆர்­வத்­துடன் திற­மையை வெளிப்­ப­டுத்தி வந்த அப்­பிள்ளை அசா­தா­ரண சூழலில் ஏற்­பட்ட இடப்­பெ­யர்வால் நோயா­ளி­யாக்­கி­விட்­டது. இருப்­பினும் சுய­மாக தனியார் வகுப்­புக்­களை வழங்கி கல்விச் செல்­வத்தை நிறை­வாகப் பெற்­று­வி­ட­வேண்டும் எனத் துடித்த அந்த யுவ­திக்கு நோயாளிப் பட்டம் கிடைத்­தது. மறு­பு­றுத்தில் பெற்­றோரின் இய­லாமை அதனால் ஏற்­பட்ட குடும்ப வறுமை இவை அனைத்­துமே வாழ்க்கைக் கடலில் துடுப்­பில்­லாத ஓட­மாக மாற்­றி­விட்­டது.

அந்த யுவ­தியின் நிலை­மையை அவ­ரு­டைய தந்­தையார் சிவ­பா­த­சுந்­தரம் சிவ­குமார் இவ்­வாறு விவ­ரித்தார்.

பிரச்­சினை வலு­வ­டை­கி­றது. குமர்ப்­பிள்­ளை­யோட இருக்­கிற நாங்கள் பாது­காப்பை தேடி முன்­னுக்கே பாது­காப்பு வல­யத்­துக்குப் போவம் என்று லான்­மாஸ்­ட­ரில போகும் போது எங்­கி­ருந்தோ வந்த ஷெல் மரத்­தில பட்டு வெடிச்சு மரக்­கிளை முறிந்து விழுந்து என்ர இரண்டு கண்ணின் நரம்பையும் பாதிச்­ச­துடன் முகம் முழுக்க சிராம்பு காயம் ஏற்­பட்டு விட்­டது. நான் காயப்­பட்டு ஹொஸ்­பிட்­ட­லுக்கு போட்டன். மகளும் மனி­சியும் முகா­முக்குப் போட்­டினம். முகா­மில இருக்கும் போது என்ர பிள்ளை நான் இருக்­கி­றனோ இல்­லையோ என்று தகவல் ஏதும் இல்­லாமல் மாதக்­க­ணக்கில் யோசித்து வலிப்பு நோயாளி ஆகி விட்டா. இப்ப 20 வயது குமர்ப்­பிள்­ளையை நம்பி நானும் தொய்­வுக்­கார மனு­சியும் வீட்­டுக்­குள்­ளேயே முடங்கிக் கிடக்­கிறம்

எனது சொந்த இடம் யாழ்ப்­பாணம். ஆனால் கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்­டனான் 1983இல் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரத்­துடன் வன்­னிக்குப் போனேன். அங்கு ஆனை­யி­றவு உப்புக் கூட்­டுத்­தா­ப­னத்தில் வேலை கிடைத்­தது. சரி அடி­பட்டு வந்­தாலும் நல்ல வேலை கிடைத்து விட்­டது என எண்ணி வன்னி மண்­ணி­லேயே திரு­மணம் செய்து என் வாழ்வை ஆரம்­பித்தேன். துரத்­திய காலம் விட­வில்லை. 7 வரு­டங்கள் சந்­தோ­ஷ­மாக கழிந்த என் வாழ்வில் மீண்­டு­மொரு பேரிடி விழுந்­தது. அது தான் ஆனை­யி­றவு பிரச்­சினை ஆரம்­ப­மா­னது. இதை­ய­டுத்து உப்புக் கூட்­டுத்­தா­பனம் மூடப்­பட்­டது.

7 வருடம் வேலை செய்து கொஞ்சக் காசு கிடைத்­தது. அதோட வள­வில தோட்டம் செய்து வாழப் பழகிக் கொண்ட எனக்கு வாழ்க்கை சவா­லாக அமைந்­தாலும் பல சந்­தர்ப்­பங்­களில் தடை தாண்டல் பரீட்­சையில் வெற்றி பெற்­ற­வ­னா­கவே என் வாழ்வை நகர்த்­தினேன்.

ஒரே ஒரு மகள். அவளை நன்­றாக படிப்­பிச்சு அரச உத்­தி­யோகம் பார்க்கச் செய்­வதே என் குறிக்­கோ­ளாக இருந்­தது. அதற்­காக இரவும் பகலும் பாடு­பட்டேன். பலா பலனை எதிர்­பார்த்­தி­ருக்கும் போது என்ர இரண்டு கண்ணும் போட்­டுது. மனி­சியும் நிரந்­தர நோயா­ளி­யாகி விட்டா. ஆனால் யாருக்­காக இரவு பக­லாக கஷ்­டப்­பட்­டேனோ அந்­தப்­பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகி­விட்டா. இது எல்­லாத்­தையும் பார்க்கும் போது ஆண்­ட­வனால் கொடுக்­கப்­பட்ட சித்து விளை­யாட்டா? இல்லை. கட­வு­ளுக்கு பிடிக்­கா­த­வர்­க­ளுக்கு கட­வுளால் வழங்­கப்­ப­டு­கின்ற தண்­ட­னையா? என எனக்கு தெரி­ய­வில்லை.

சரி அது தான் போகட்டும் 1983இல் இடம்­பெ­யர்ந்து உடுத்த உடுப்­போட வரும் போது வன்னி மண் எங்­களை வர­வேற்று வாழ வைச்­சது. ஆனால் 2009 இல் இருந்து பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்கள் தம் இஷ்ட தெய்­வங்­களை தியா­னித்து கொண்டு இடம்­பெ­யர்ந்த போது கடவுள் மௌன­மாக இருக்க காரணம் தான் என்ன?

இடம்­பெ­யர்ந்து வீடு வாசல் சொத்து சுகம் ஏன் அவை­ய­வத்­தையே இழந்த எமக்கு 6 மாத நிவா­ர­ணமும் (P.M.P.) காசு 350 ரூ­பாவும் மஹிந்த சிந்­தனை திட்­டத்தால் 3000 ரூபாவும் சமுர்த்­தி­யால வரும் 590ரூபாவும் தான் கிடைக்­கி­றது.

4940 ரூபா­வில மூன்று பேர் 1 மாதத்­திற்கு சாப்­பி­டு­வது என்றால் என்ன செய்ய முடியும்? இதனால் கயில கழுத்­தில இருந்­த­தெல்லாம் அடவு வைச்சு மாரிக்கும் கோடைக்கும் பயந்து வீட்­டைத்­தி­ருத்­தினேன். திருத்தும் போது இந்­திய வீட்­டுத்­திட்டம் கிடைக்கும். கிடைத்தால் திருத்­தின காசை வாங்கி அடவு எடுப்பம் என்று நினைச்சு பதிஞ்ச நாளில இருந்து மாதம் மாதம் போய் வீட்­டைப்­பற்றி கேட்பேன். உங்­கட பெய­ருக்கு கட்­டாயம் வரு­மய்யா. நீங்கள் போங்கோ என்­பார்கள். நான் வீணாக பஸ் காசைக் கொடுத்துப் போய் ஏமாந்து வந்த சந்­தர்ப்பம் தான் அதிகம். இதற்கு அப்­பால பரந்தன் விழிப்­பு­ல­னற்றோர் சங்கம் எனது கஷ்­டங்­களை பார்த்து மாதா மாதம் நிவா­ரணம் தாரவை. இப்ப 2, 3 மாத­மாக அங்கு மீளாய்வு நடப்­ப­தால எங்­க­ளுக்கு எந்­த­வொரு சாமானும் இல்லை.

உயர்­தரப் பரீட்சை எழு­தி­விட்டு என்ர மகள் கணினி வகுப்­புக்கு போறவா. எங்­கட இடத்­தில இருந்து வகுப்­புக்கு போற­தென்றால் 15 கிலோ மீற்றர் தூரம் போக வேணும். வலிப்பு வார­தால அவா­வுக்கு சைக்கிள் ஓட ஏலாது. இதனால் பஸ்­ஸி­லதான் போறது. கடந்த 3 மாத­மாக பஸ்­ஸில போற­துக்கு கூட காசில்­லா­த­தால போக­வில்லை. ஆக கடவுள் புண்­ணி­யத்­தில தரு­ம­புரம் AGA office ஆல மனைவி கிளினிக் போர­துக்கு மாதா மாதம் 100 ரூபா தாரவை. அதால அவா ஒழுங்கா கிளினிக் போறா. 14 வய­சில இருந்து என்ர மகள் ரியுஷன் கொடுத்து தான் படிச்­ச­துடன் வீட்­டையும் பார்த்துக் கொண்டா. ஆனால் இனி என்ன செய்யப் போகிறோம் என்றே எனக்கு தெரி­யாது.

இப்­ப­டியே நாளுக்கு நாள் எங்­கட கஷ்டம் அதி­க­ரிக்­குதே தவிர குறைந்த பாடு இல்லை. எனவே எங்­கட கஷ்­டத்தை கருத்­தில கொண்டு யாரா­வது எமக்கு உதவி செய்ய முன்­வ­ரு­வீர்­க­ளானால் கால­முள்­ள­வரை நாம் மகிழ்­வோடு இருப்போம். இன்­றைக்கு அனைத்­தையும் இழந்தும் நான் வாழ வேண்டும் என நினைப்­ப­தற்கு பிர­தான காரணம் என்ர மகள்தான். கண் தெரியா விட்­டாலும் கிணத்­தில தண்ணி அள்­ளி­ற­துல இருந்து சகல வேலை­க­ளையும் நானே செய்து வரு­கிறேன். என்ர பிள்­ளை­ய­ளுக்கு நல்ல ஒரு உத்­தி­யோ­கத்தை பெற்றுக் கொடுத்து விட்டா அவா தன்ர வாழ்க்­கை­யில இனி­யா­வது நிறை­வாக வாழுவா. 14 வய­சில இருந்து ரியுஷன் கொடுத்து தன்­னையும் பார்த்து எங்­க­ளையும் பார்த்த பிள்­ளையை கட­னா­ளி­யாக இல்­லாது தொழி­லாளி ஆக்க வேண்டும் என்­ப­துதான் என் விருப்பம்.

எனவே நாங்கள் 4 ஆயிரம் ரூபா­வோடும் ஒரு நேரச் சாப்­பா­டோடும் வாழப்­ப­ழகி விட்டோம். இனி எங்­க­ளுக்கு பட்­டுப்­பு­டவை கட்ட வேண்­டு­மென்றோ நகை போட வேண்­டு­மென்றோ ஆசை­யில்லை. யாரா­வது என்ர பிள்­ளையை மேற்­ப­டிப்பு படிப்­பிக்க உதவி செய்தால் போதும். அவாக்கு கம்பியூட்டர் படிக்க வேண்டும். அதே போல் வெளிவா­ரி­யாக பட்­டப்­ப­டிப்பு படிக்க விருப்பம். அதற்கு பஸ்­ஸில போர­துக்கே எங்­க­ளிட்ட காசு இல்லை. இதால பட்­டத்­தையோ பத­வி­யையோ நினைக்­க­லாமே தவிர பெற முடியாது.

நான் அங்கவீனமாக்கப்பட்டு விட்டேன். மனைவியும் நிரந்தர வருத்தக்காரி ஆகி விட்டா. உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அவர்களுக்கு எம்மிடம் உறவாட பயம் .காரணம் தாம் எம்முடன் சேர்ந்தால் நாம் அவர்களிடம் பல உதவிகளை எதிர்பார்ப்போம் என்று. இதனால் நான் இன்றுவரை உறவுகள் எவரிடமும் உதவி கேட்டதில்லை. ஆனால் இன்று பகிரங்கமாக என் பிள்ளையை வாழ வைக்க கல்விக்கு உதவி செய்யுங்கோ எனக் கேட்கிறேன்.

கல்வியை தொடர்ந்து தனது சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சி செய்யும் யுவதிக்கும் துணையாக இருக்கும் பெற்றோருக்கும் எம்மாலான உதவிகளை வழங்க முன்வருவோமாக.

சிந்துஜா பிரசாத்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல