செவ்வாய், 27 ஜனவரி, 2015

கர்ப்­பப்பை மற்றும் சூல­கக்­கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்சை அவ­சியம் தானா?

பெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைப்­பு­ரோயிட் கட்­டி­களும் சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய லுவ­ரியன் சிஸ்ற் எனப்­படும் சூலகக் கட்­டி­களும் இன்று நாம் அடிக்­கடி கேள்­விப்­படும் விட­ய­மாக உள்­ளது. இதற்கு பெண்­க­ளது வய­தா­னது பரு­வ­ம­டைந்த வயதில் இருந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்று போகும் வய­து­வரை அதா­வது மெனோபோஸ் பருவம் வரை இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றியும் கால­மாக உள்­ளது. இதன் போது பலரும் இவ்­வா­றான கட்­டிகள் ஏன் வந்­தன என்று கேட்­பதும் இதனை கரைக்க மருந்­துகள் இல்­லையா என்­பதும் இவற்றால் பயம் இல்­லையா என்­பதும் பொது­வான கேள்­வி­க­ளாக நேயர்­க­ளிடம் இருந்து வரு­கின்­றது. இதற்கு விடை­காண பலரும் ஆவ­லாக இருப்­பார்கள்.



கர்ப்­பப்­பை­யிலோ சூல­கத்­திலோ கட்­டிகள் ஏன் வந்­தன என்று கேட்டால் சரி­யான விடை காண முடி­யாது. அதா­வது இவ்­வா­றான கட்­டிகள் பெண்­க­ளது தனிப்­பட்ட இயல்­புகள் கார­ண­மாக அதா­வது அவர்­க­ளுக்கே உரிய பரம்­பரை இயல்­புகள் கார­ண­மாக ஏற்­ப­டு­கின்­றன. இவை நீங்கள் உட்­கொண்ட உணவு வகை­களால் அல்­லது மருந்து வகை­களால் ஏற்­பட்­டது என நினைக்க வேண்டாம். ஆனால் பைப்­பு­ரோயிட் கட்­டிகள் என்­பது கூடு­த­லாக மணம் முடிக்க தாம­த­மாக இருந்து வரும் 40 வயது பெண்­க­ளிலும் மணம் முடித்தும் 40 வயதை தாண்­டியும் குழந்தைப் பாக்­கியம் இல்­லாத பெண்­க­ளிலும் கூடு­த­லாக காண முடி­கின்­றது. இதி­லி­ருந்து பார்த்தால் தொடர்ச்­சி­யாக ஹோர்­மோன்­களின் தூண்­டு­தலும் இவை ஏற்­பட கார­ண­மாக இருக்க முடியும். அப்­ப­டியே பார்த்­தாலும் பைப்­பு­ரோயிட் கட்­டிகள் ஏற்­ப­டு­வ­தையோ சூலகக் கட்­டிகள் ஏற்­ப­டு­வ­தையோ பெண்­களோ மருத்­து­வர்­களோ தடுக்க முடி­யாது. ஆனால் ஒழுங்­கான ஆரம்ப பரி­சோ­த­னைகள் மூலம் அவற்றை ஆரம்­பத்தில் கண்­ட­றிந்து சரி­யான சிகிச்­சைகள் எடுப்­பதே சிறந்த வழி முறை­யாகும்.

கர்ப்­பப்பை மற்றும் சூலகக் கட்­டி­களை கண்­ட­றிய சிறந்த பரி­சோ­தனை என்ன?

நோய் அறி­கு­றிகள் மாத­விடாய் கோளா­றுகள் அடி வயிற்று வலி என்­ப­வற்­றையும் வயிற்றை அமத்திப் பார்த்து கட்­டித்­தன்­மை­யையும் வைத்து ஓர­ள­வுக்கு எம்மால் கட்­டிகள் இருக்க வாய்ப்­புள்­ள­தாகக் கூறி­னாலும் ஸ்கான் பரி­சோ­தனை மூலம்தான் உறு­திப்­ப­டுத்த முடியும். ஸ்கான் பரி­சோ­தனை என்றால் பல வகைகள் உண்டு. அவற்றில் US (ULTRA SOUND ) ஸ்கான் CT MRT ஸ்கான் என பல வகைகள் உண்டு. இதில் மிகவும் எளி­மை­யான இலா­ப­க­ர­மான US ஸ்கான் மூலம் இவ்­வா­றான கட்­டி­களை கண்­ட­றிய முடியும். அதிலும் சில சந்­தர்ப்­பங்­களில் CT ஸ்கான் MRT ஸ்கான் உத­விகள் தேவைப்­படும். ஸ்கான் பரி­சோ­த­னைகள் மூலம் கட்­டியை உறு­திப்­ப­டுத்­திய பின்னர் அவை எந்த அள­வுக்கு ஆபத்­தா­னது என அறிய இரத்த பரி­சோ­த­னைகள் சில செய்ய வேண்டும். இதனை CA 125 என்ற இரத்த பரி­சோ­தனை பெறு­பே­று­களை வைத்து கட்­டியின் வகை­யையும் அதன் தீவிர தன்­மை­யையும் அறிந்து கொள்ள முடியும்.

கர்ப்­பப்பை கட்­டி­களை கண்­ட­றிந்தால் கரைக்க மருந்­துகள் உண்டா ?

கர்ப்­பப்­பை­யிலோ சூல­கத்­திலோ கட்­டிகள் இருப்­பது அறி­விக்­கப்­பட்­டதும் பெண்கள் கேட்கும் கேள்வி இவற்றை கரைக்க மருந்­துகள் உண்டா? என்­ப­தாகும். பைப்­பு­ரோயிட் கட்­டிகள் மருந்­துகள் மூலம் கரைக்க முடி­யாது.என்ற ஊசி மூலம் இக்­கட்­டிகள் தற்­கா­லி­க­மாக கருக்­க­லைக்­கப்­பட்­டாலும் சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் பழைய பரு­ம­னுக்கு வளரக் கூடும். ஆகையால் ஊசி மூலம் கட்­டி­க­ளுக்கு வழங்­கப்­படும் சிகிச்­சைகள் பெரிய அளவில் வெற்­றி­ய­ளிக்கும் எனக் கூற முடி­யாது. அது போலவே சூல­கக்­கட்­டி­க­ளுக்­கு­மான சிகிச்­சைகள் மருந்­துகள் ஊசிகள் மூலம் வெற்­றி­க­ர­மாக வழங்க முடி­யாது. தற்­கா­லிக பல­னைத்தான் இந்த சிகிச்­சைகள் தரு­கின்­றது.

கர்ப்­பப்பை கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்­சைகள் அவ­சியம் தானா?

கர்ப்­பப்­பையில் பைப்­பு­ரோயிட் கட்­டிகள் கண்­ட­றிந்­தாலோ சூல­கத்தில் சூல­கக்­கட்­டிகள் கண்­ட­றிந்­தாலோ அடுத்து சத்­திர சிகிச்சை தான் என நினைக்க வேண்டாம். சத்­திர சிகிச்சை எடுத்த எடுப்­பி­லேயே கட்­டிகள் உள்ள எல்­லோ­ருக்கும் செய்ய வேண்டும் என்­ப­தில்லை. அதா­வது கட்­டிகள் பருமன் அதன் நோய் அறி­கு­றி­களின் தீவிரம் மற்றும் இரத்த பரி­சோ­த­னை­களின் பெறு­பே­று­களின் அள­வுகள் குழந்தைப் பாக்­கி­யத்தின் தேவை பெண்­களின் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புகள் என பல விட­யங்­களை கருத்தில் கொண்டே சத்­திர சிகிச்சை ஒன்று உடன் அவ­சியம் அல்­லது சில காலம் பொறுத்­தி­ருந்து பார்க்­கலாம் என முடிவு செய்­யப்­ப­டு­கின்­றது. ஆகையால் பெண்­களில் கர்ப்­பப்­பை­யிலும் சூல­கத்­திலும் கட்­டிகள் வரு­வது ஒரு சக­ஜ­மான நிகழ்­வா­கவே காணப்படுகின்றது.

இதற்கு கரைக்க மருந்துகள் உள்ளன என சொல்ல முடியாது.

அதற்காக கட்டிகளுக்கு எல்லாம் சத்திர சிகிச்சை தேவை என்றும் கூற முடியாது. கட்டிகள் எல்லாம் புற்று நோய் தொடர்புகள் உள்ளவை என்றும் நினைக்க வேண்டாம். பல காரணிகள் கலந்தாலோசித்து விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல