புதன், 18 பிப்ரவரி, 2015

ப்ளக் இன் புரோகிராம்களை நீக்கி பிரவுசரைப் பாதுகாக்க

பிரவுசர்கள் திறன் குறைவாக வடிவமைக்கப்பட்ட காலத்தில், அதன் கூடுதல் செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், காலப் போக்கில், வைரஸ் மற்றும் மால்வேர் அனுப்புபவர்கள், இந்த ப்ளக் இன் புரோகிராம்களில் உள்ள பிழைக் குறியீடுகளை இலக்காகக் கொண்டே செயல்பட்டனர். எனவே தான், பல பிரவுசர்கள், ப்ளக் இன் புரோகிராம்கள் மேற்கொள்ளும் செயல்பாடுகளை, பிரவுசர்களே மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டன. ப்ளக் இன் புரோகிராம்களை அவையே நீக்கி வைத்தன. எடுத்துக் காட்டாக, யு ட்யூப், ப்ளாஷ் புரோகிராமினை அறவே தன்னிடமிருந்து நீக்கியது. வேறு சில பிரவுசர்களும் இதே போல சிலவற்றைத் தள்ளி வைத்தன.



ப்ளக் இன் புரோகிராம்கள் மோசமானவையா? ஆம், மோசமானவையே. இப்போது பிரவுசர்கள் அனைத்து வகையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் திறனுடன் கிடைக்கின்றன. முன்பு பலவகை விடியோ பைல்களை இயக்க, விடியோ சேட்டிங் வசதியைத் தர, அனிமேஷன்களை இயக்க, பிரவுசர்களுக்குள்ளாக கேம்ஸ் விளையாட எனப் பல செயல்பாடுகளுக்கு ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்பட்டன. ஆனால், இவை அனைத்தும் தற்போது பிரவுசர்களே இயக்கும் வகையில் உள்ளன. இணைய தளங்கள், இப்போது, பிரவுசர் தரும் இந்த டூல்களைப் பயன்படுத்துகின்றன. எனவே, ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படுவதில்லை.

மேலும் ப்ளக் இன் புரோகிராம்கள் அனைத்தும் மிகப் பழசாக உள்ளன. பயர்பாக்ஸ் NPAPI எனப்படும் ப்ளக் இன் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகிறது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் ஆக்டிவ் எக்ஸ் புரோகிராமினைப் பயன்படுத்துகிறது. இந்த ஆக்டிவ் எக்ஸ், பல வகை வைரஸ்களுக்கு வழி தருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. குரோம் பிரவுசர் PPAPI, என்ற வகை ப்ளக் இன் சிஸ்டத்தைப் பயன்படுத்துகிறது. ஆனால், இதுவும் சரியல்ல. ஹேக்கர் ஒருவர் இதில் பிழையான குறியீடுகளைக் கண்டறிந்தால், அதன் வழி மிகப் பெரிய சேதம் விளைவிக்கக் கூடிய வைரஸ் அல்லது மால்வேர் தொகுப்புகளை அனுப்ப முடியும்.

பிரவுசருக்கான ப்ளக் இன் புரோகிராம்கள், ஆட் ஆன் தொகுப்புகளிடமிருந்து மாறுபட்டவை. எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களிடமிருந்தும் மாறுபட்டவை. இவை, நாம் பயன்படுத்தும் பிரவுசருக்குக் கூடுதலாக ஒரு பயன்பாட்டினைத் தருகின்றன. அந்தப் பயன்பாட்டினை நாம் மேற்கொண்டு செயல்படுத்தலாம். ஆனால், ப்ளக் இன் என்பது, இணையதளங்கள் செயல்படத் தேவையான புரோகிராம்களாகும். பிரவுசர்கள் வேகமாகச் செயல்பட முடியாத காலத்தில் (எடுத்துக் காட்டாக, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 6) இவை தேவைப்பட்டன. இப்போது இவற்றிற்கான தேவை இல்லை.

தேவைப்படாத ப்ளக் இன்: இணையத்திலிருந்து ப்ளக் இன் புரோகிராம்கள் முழுமையாக மறையாது. இப்போது கூட, நாம் சில இணைய தளங்களைக் காண்கையில், அவற்றில் உள்ள பழைய விடியோ புரோகிராம்களைக் காண, ரியல் பிளேயர் போன்ற ப்ளக் இன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திடுமாறு கேட்கும்.
பெரும்பாலான ப்ளக் இன் புரோகிராம்கள், இன்றைய பிரவுசர்களில் ஒருங்கிணைக்கப்பட்டு கிடைக்கின்றன. எடுத்துக் காட்டாக, ஆடியோ மற்றும் விடியோ பெற, கூகுள் தந்த கூகுள் டாக் ப்ளக் இன் புரோகிராம் இப்போது தேவைப்படுவதில்லை. அதே போல, கூகுள் மேப்ஸ் புரோகிராமில், கூகுள் எர்த் ப்ளக் இன் புரோகிராம் தேவைப்படுவதில்லை.

மைக்ரோசாப்ட் நிறுவனம், ஸ்கைப் புரோகிராமின் புதிய பதிப்பு ஒன்றை உருவாக்கி வருகிறது. இதில், ஸ்கைப் பிரவுசர் ப்ளக் இன் தேவைப்படாது. இப்போதெல்லாம் QuickTime, RealPlayer, Windows Media Player, and the VLC Web Plugin போன்ற ப்ளக் இன் புரோகிராம்கள் தேவைப்படுவது இல்லை. பிரவுசர்கள் அல்லது தனியான புரோகிராம்கள் இவற்றின் தேவைகளை நிறைவேற்றுகின்றன.

ப்ளக் இன் புரோகிராம்களைக் கண்டறிதல்: நம் பிரவுசரில் பல ப்ளக் இன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்திருப்போம். சிலவற்றை அறிந்து செய்திருப்போம். சில, நாம் அறியாமலேயே, சிஸ்டத்தில் பிரவுசருக்குள் வந்திருக்கும். எவை எவை உள்ளன என்று எப்படி அறிவது? இங்கு சில பிரவுசர்களில் அவற்றைக் கண்டறியும் வழிகள் தரப்பட்டுள்ளன.

குரோம்: குரோம் பிரவுசரின் முகவரிக் கட்டத்தில் “chrome://plugins/” என டைப் செய்திடவும். உடன் உங்கள் பிரவுசரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள ப்ளக் இன் புரோகிராம்கள் பட்டியல் கிடைக்கும். இதில் தேவைப்படாதவை இருப்பின் நீக்கலாம். இன்னொரு வழியும் உள்ளது. Settings>Show advanced settings>Content settings>Disable individual plugins எனச் சென்று கண்டறியலாம்.

பயர்பாக்ஸ்: மெனு பட்டனில் கிளிக் செய்து Manage add-ons என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் Plug-ins ஐகானில் கிளிக் செய்திடவும்.
இன்டர்நெட் எக்ஸ்புளோரர்: டூல் பாரில் உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். இங்கு Add-ons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். “Toolbars and extensions” என்பது தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். தொடர்ந்து Show பாக்ஸில் கிளிக் செய்திடவும். அடுத்து All add-ons என்பதில் கிளிக் செய்திடவும்.

சபாரி: மெனுவில் கிளிக் செய்திடவும். Preferences என்பதனைத் தேர்ந்தெடுத்து, Security ஐகானில் கிளிக் செய்திடவும். “Internet plug-ins.” என்பதற்கு வலது பக்கமாக இருக்கும் Website Settings பட்டனில் கிளிக் செய்திடவும்.

ஆப்பரா: ஆப்பரா மெனுவில் கிளிக் செய்திடவும். Settings என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். Websites category தேர்ந்தெடுத்து, அதன் பின்னர், “Disable individual plugins.” என்பதில் கிளிக் செய்திடவும். அல்லது பிரவுசர் முகவரிக் கட்டத்தில் “opera://plugins” என டைப் செய்து என்டர்
தட்டவும்.

நமக்கு ஏதேனும் ஒரு ப்ளக் இன் புரோகிராம் தேவைப்படவில்லை என்று உணர்ந்தால், குறிப்பாக பழைய ப்ளக் இன் புரோகிராம்கள் தேவை இல்லை என உணர்ந்தால், அவற்றை நீக்க வேண்டும். இவற்றை நீக்க கண்ட்ரோல் பேனல் சென்றுதான் நீக்க முடியும். அது அமைக்கப்பட்டுள்ள பிரவுசரில் இருந்து கொண்டு நீக்க முடியாது.

ஒரு ப்ளக் இன் புரோகிராம் உங்களுக்குத் தேவைப்படுமா என்ற சந்தேகம் உள்ளது என்றால், அதன் இயக்கத்தினைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து, அது தேவைப்படுகிறதா எனக் கண்காணிக்கலாம். இதற்கு, பிரவுசரின் ப்ளக் இன் மேனேஜர் பக்கம் செல்ல வேண்டும். அங்கு காணப்படும் Disable பட்டனில் கிளீக் செய்திட வேண்டும். செயல் முடக்கப்பட்ட பின்னும், உங்கள் பிரவுசர் வழக்கம் போல இயங்கி, அனைத்து இணைய தளங்களைக் காட்டுகிறது என்றால், அந்த ப்ளக் இன் புரோகிராம் தேவை இல்லை என்றாகிறது. உடன் கண்ட்ரோல் பேனல் சென்று, இதனை அன் இன்ஸ்டால் செய்துவிடலாம்.
நாம், நம் வசதிக்கேற்ப, ஒன்றுக்கு மேற்பட்ட பிரவுசர்களின் வகை அமைப்பினை (Profile) அமைக்கலாம். ஒன்றில் முடக்கப்பட்ட ப்ளக் இன் புரோகிராம், இன்னொன்றில் செயல்படும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல