4ஜி ப்ளஸ் என்பது, சில நாடுகளில் 4ஜி அலைவரிசையினை அழைக்கும் பெயர் ஆகும். இன்டர்நெட் வேகம் சில ஆண்டுகள் வரை 3ஜி மற்றும் 4ஜி என மட்டுமே இருந்து வந்தது.
ஆனால், இப்போது 4G+, 4GX, XLTE, LTE-A மற்றும் VoLTE என்றெல்லாம் அழைக்கப்படுகிறது. இத்தனை பெயர்கள் இருந்தால், அவை எவற்றைக் குறிக்கின்றன என நினைவில் கொள்வது சற்று சிரமம் தான்.
4ஜி+ மற்றும் LTE-A என்பதுவும் ஒரே அலைவரிசையைக் குறிக்கின்றன.
இதனை 3GPP என்ற வல்லுநர் குழு உருவாக்கியது. இது ஜி.எஸ்.எம். பயன்பாட்டில் தற்போதைய உச்ச நிலை ஆகும்.
எந்த நாட்டில் 4ஜி பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து அதன் பெயர் அமைகிறது. தென் கொரியாவிலும், அமெரிக்காவிலும் இது LTE A என அழைக்கப்படுகிறது. அதாவது LTE- அட்வான்ஸ்டு. LTE என்பதன் விரிவாக்கம் Long Term Evolution என்பதாகும்.
4ஜி வயர்லெஸ் பிராட்பேண்ட் அலைவரிசையினை இது குறிக்கிறது. இதுவே, சிங்கப்பூர், பிரான்ஸ், கத்தார் மற்றும் நெதர்லாந்து நாடுகளில் 4G+ என அழைக்கப்படுகிறது.
இந்த தொழில் நுட்பம் தற்போது, 31 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், இதற்கான சாதனங்கள் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளதால், இணைய இணைப்பு மற்றும் மொபைல் இணைப்பு இந்த அளவில் பெற்றவர்கள் எண்ணிக்கையும் குறைவே.
ஆஸ்திரேலியாவில் Optus' “4G Plus“, என ஒரு அலைவரிசை அழைக்கப்படுகிறது. இதுவும் 4G LTE நெட்வொர்க்கினையே குறிக்கிறது. இந்தியாவில் இதற்கான சாதனங்கள் உள்ளன. ஆனால், அலைவரிசை இணைப்பு வழங்கப்படுவதை உறுதி செய்திட முடியவில்லை.
அமெரிக்காவில் இயங்கும் இரண்டு மொபைல் சர்வீஸ் நிறுவனங்களான AT&T மற்றும் Verizon இப்போதுதான் இதனைச் சோதனை முறையில் வழங்கி வருகின்றன.
LTE-A அலைவரிசையினை சப்போர்ட் செய்திடும் மொபைல் போன்களாகத் தற்சமயம் Huawei Honor 6, Samsung Galaxy Note 4, Galaxy Alpha, மற்றும் Galaxy S5 4G+ (இதனை Galaxy S5 Plus எனவும் அழைக்கின்றனர்) ஆகியவை உள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக