உங்களுடைய சிடியில் உள்ள படங்களை, அந்த பைல்கள் சிறிதளவு கெட்டுப் போயிருந்தாலும், மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளும் அதற்கான அப்ளிகேஷன்களும் உள்ளன. அதற்கு முன் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
முதலில், குறிப்பிட்ட சி.டி.யை மெல்லிதான துணி ஒன்றினால், சுத்தம் செய்திடவும். சி.டி.யில் பதிந்த தூசியினால், இந்தப் பிரச்னை ஏற்பட்டிருந்தால், சுத்தம் செய்த பின்னர், ஒருவேளை பைல்கள் படிக்கப்படும் வாய்ப்பு உண்டு. மேலும், இப்போது வேறொரு கம்ப்யூட்டரின் சி.டி. ட்ரைவில் போட்டு இயக்கிப் பார்க்கவும்.
அடுத்து இதற்கெனக் கிடைக்கும் அப்ளிகேஷன் சாப்ட்வேர்களைப் பார்க்கலாம். இதில் மிகவும் பயனுள்ளதாக, நான் கருதுவது CD Recovery Toolbox. இந்த அப்ளிகேஷனை http://www.oemailrecovery.com/cd_recovery.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து பெறலாம்.
இதனை இன்ஸ்டால் செய்து இயக்கிப் பார்க்கலாம். ஆனால், நிச்சயம் உங்கள் பைல்கள் கிடைக்கும் என்று உறுதியளிக்க முடியாது. உங்கள் சி.டி. எந்த அளவிற்குக் கெட்டுப் போயுள்ளது என்பதைப் பொறுத்தது.
இன்ஸ்டால் செய்த பின்னர், சி.டி.யை அதன் ட்ரைவில் செலுத்தவும். பின்னர், சி.டி. ரெகவரி பாக்ஸ் அப்ளிகேஷனை இயக்கவும்.
இந்த அப்ளிகேஷன் இயங்கி, உங்கள் சி.டி.யில் உள்ள பைல்களில், எந்த எந்த பைல்களை மீட்கலாம் என்று பட்டியலிடும்.
பின், அவற்றை எந்த டைரக்டரியில், போல்டரில் சேவ் செய்திட வேண்டும் எனக் கேட்கும்.
அதனைச் சுட்டிக் காட்டிய பின்னர், மீட்கப்படக் கூடிய பைல்கள் அதில் சேவ் ஆகும்.
எப்போதும் மிக அரிய பைல்களுக்கு பேக் அப் காப்பி ஒன்று அல்லது இரண்டாக எடுத்து வைக்கவும். அதுதான் நம் பைல்களைப் பாதுகாக்கும் வழி.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக