மிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும்.
ஆனால், இப்போது வரும் சில மவுஸ் சாதனங்களில், இந்த வீல் இருப்பதில்லை. இருப்பினும் இந்த வசதியைப் பெறுவதற்கு சில செட்டிங்ஸ் அமைப்புகள் உள்ளன. அவற்றைப் பார்க்கலாம்.
1. Tools மெனுவிலிருந்து Customize என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Customize டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இதில் Commands என்ற டேப்பில் கிளிக் செய்திடவும். வேர்ட் கட்டளைகள் சில வரிசையாகத் தரப்படும்.
3. இந்த பட்டியலின் இட்து பக்கம் All Commands என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. வலது பக்கம் உள்ள பிரிவில் AutoScroll என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. இந்த AutoScroll ஆப்ஷனை உங்கள் டூல்பார்கள் உள்ள இடத்திற்கு இழுத்துச் செல்லவும். மவுஸ் பட்டனை விட்டுவிட்டால், AutoScroll என்னும் பெயருடன் ஒரு பட்டன் டூல்பார்களில் தோன்றுவதைப் பார்க்கலாம்.
6. தொடர்ந்து Close என்பதில் கிளிக் செய்து Customize டயலாக் பாக்ஸை மூடவும்.
இந்த புதிய கட்டளையைப் பயன்படுத்த, புதிய டூல் பார் பட்டனில் கிளிக் செய்திடவும். அவ்வாறு செய்திடுகையில், வலது பக்கம் உள்ள நெட்டு வாக்கில் உள்ள பார் மாறும். புதிய இரட்டை அம்புக் குறி ஒன்று தோன்றும். இந்த அம்புக்குறியினை மேலாகவும் கீழாகவும் ஸ்குரோல் பாரில் நகர்த்துவதன் மூலம், டாகுமென்ட் எவ்வளவு வேகமாக நகர்த்தப்பட வேண்டும் என்பதனை முடிவு செய்து செட் செய்திடலாம். இந்த வேகமாக நகர்த்தும் செயல்பாட்டிலிருந்து விடுபட எஸ்கேப் கீயை அழுத்துங்கள். அல்லது மவுஸ் பட்டனை அழுத்துங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக