அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
பாரா பார்டர் நீக்க: சிலவேளைகளில், நாம் தயாரிக்கும் டாகுமெண்ட்களில், சில பாராக்களில் படிப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, அதற்கு மட்டும் சுற்றி கட்டம் கட்டி இருப்போம். பின் நாளில் அதனை நீக்க விரும்புவோம். பல வேளைகளில் இதனை எப்படி நீக்குவது எனத் தெரியாமல் விழிப்போம். இதோ, அதற்கான வழி:
1. எந்த பாராவிலிருந்து பார்டரை நீக்க வேண்டுமோ, அதில் கர்சரைக் கொண்டு நிறுத்தவும்.
2. ரிப்பனில், ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. பாரா குரூப்பில் உள்ள பார்டர்ஸ் டூலில் (Borders tool), வலதுபுறம் கீழாக நோக்கும் அம்புக் குறியினை கிளிக் செய்திடவும். வேர்ட், இப்போது பல ஆப்ஷன்களைக் காட்டும்.
4. இதில் No Border என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் பாராவினைச் சுற்றி உள்ள பார்டரை நீக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக