ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு சிரிய செயற்பாட்டாளர் எச்சரிக்கை
கைக்குண்டு, துப்பாக்கி மற்றும் ஐ.எஸ். தீவிரவாதிகளால் வழங்கப்பட்ட பிறப்புச் சான்றிதழ் என்பவற்றுக்கு அருகில் புதிதாக பிறந்த குழந்தையொன்று உறங்குவதை வெளிப்படுத்தும் புகைப்படமொன்றை அந்த தீவிரவாத குழுவிற்கு எதிரான செயற்பாட்டாளர் ஒருவர் இணையத்தளத்தில் ஞாயிற்றுக்கிழமை மீள வெளியிட்டு, "இந்தக் குழந்தை எங்களுக்கு மட்டுமல்லாது உங்களுக்கும் அபாயமிக்கதாகும்" என எச்சரித்துள்ளார்.

அந்த குழந்தையின் பெயர் ஜராஹ் எனவும் அதன் தாய்மார் பெயர் 'ஒம்' எனவும் தந்தையர் பெயர் 'அபு' எனவும் ஐ.எஸ். தீவிரவாதிகள் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் சிரியாவைச் சேர்ந்த அபு வார்ட் அல்–ரக்காவி என்ற மேற்படி தீவிரவாதிகளுக்கு எதிரான செயற்பாட்டாளர் இந்த புகைப்படத்தை மீள வெளியிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக