இந்தி மொழி வளர்ச்சி, ஆராய்ச்சி மற்றும் ஊக்குவிப்பு தொடர்பான விருதுகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்திரா, ராஜிவ் பெயர்களில் வழங்கப்பட்டு வந்த விருதுகள் வேறு பெயர்களில் வழங்கப்பட உள்ளன.
இந்த விஷயம் தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் யாரும் எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பது சற்று வியப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய உள் துறை அமைச்சகம் சார்பில் இந்திராகாந்தி ராஜ்பச்சா புரஸ்கார், ராஜிவ்காந்தி ராஷ்ட்டிரிய ஞான விஞ்ஞான் மாலிக் புஷ்டக் லெக்கான் புரஷ்கார் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன. 1986 முதல் இந்த பெயரில் விருதுகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது.
மோடி தலைமையிலான அரசு பல்வேறு மாற்றங்கள் செய்து வருகிறது. இதில் ஒன்றாக, இந்த விருதுகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்திராகாந்தி ராஜ்பச்சா புரஸ்கார், ராஜிவ்காந்தி ராஷ்ட்டிரிய ஞான விஞ்ஞான் மாலிக் புஷ்டக் லெக்கான் புரஷ்கார் விருதுகள் முறையாக இனி ராஜ்பச்சா கீர்த்தி புரஷ்கார் என்றும், ராஜ்பச்சா கவுரவ் புரஷ்கார் என்றும் இனி வழங்கப்படும்.
இந்த உத்தரவில் அரசியல் நோக்கம் இல்லை என்றும், நிர்வாக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக