இந்தோனேசியாவில் போதைவஸ்து கடத்தல் குற்றச்சாட்டில் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளான 8 கைதிகளில் ஒருவரான அன்ட்றூ சானை மேற்படி தண்டனை நிறைவேற்றத்திற்கு முன் சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்ததன் மூலம் பரபரப்பாக பேசப்பட்ட பெப்யன்தி ஹெரவிலா என்ற பெண் இந்தோனேசிய ஜாவா பிராந்திய இளவரசிகளில் ஒருவர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பெபி என அழைக்கப்படும் அவர் கடந்த திங்கட்கிழமை அன்ட்றூ சானை சிறைச்சாலையில் வைத்து திருமணம் செய்திருந்தார்.
மத்திய ஜாவாவிலுள்ள யொக்யகர்த்தாவைச் சேர்ந்த அவர் அரச குடும்பத்தைச் சேர்ந்த தாயொருவருக்கு பிறந்தவராவார்.
சுமார் 5 வருட காலம் மதபோதகர் ஒருவராக சிங்கப்பூரில் சேவையாற்றிய அவர் பின்னர் தாய்நாடு திரு ம்பி மேலும் 5வருடங்க ளுக்கு தனது சேவையைத் தொடர்ந்துள் ளார்.
அவர் பாலி மற்றும் ஜகர்த்தாவில் கிறிஸ்தவ அமைப்பொன் றின் உறுப்பின ராக சேவையாற்றினார்.
இந்நிலையில் அவர் 2012 ஆம் ஆண்டு பாலியிலுள்ள கெரோபோகன் சிறைச்சாலையில் மத போதனைகளை மேற்கொண்ட போது அன்ட்றூ சானை முதன்முதலாக சந்தித்தார்.
இதன் போது அன்ட்றூ சான், “நீ உனது ஆத்ம நண்பரைத் தேடி இங்கே வந்தாயா?” என வேடிக்கையாக பெபியி டம் வினவியதாக அன்ட்றூ சானுடன் சிறைவாசம் அனுபவித்த பிறிதொரு சிறைக்கைதியான மத்தியுஸ் ஆரிப் மர்ட்ஜஜயா தெரிவித்தார்.
அந்த சிறைச்சாலையிலிருந்த அனைத்து சிறைக்கைதிகளிடமும் பரிவு காட்டும் ஒருவராக விளங்கிய பெபி, அன்ட்றூ சானிடம் தனி அக்கறையை காண்பித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் அன்ட்றூ சான் பெபியை திருமணம் செய்வதற்கான தனது விருப்பத்தை அவரிடம் வெளியிட்டுள்ளார்.
அன்ட்றூ சான் எந்நேரமும் மரணதண்டனை நிறைவேற்றத்துக்குள்ளாகக் கூடிய கைதி என்பதை தெளிவாக அறிந்திருந்த போதும் பெபி உடனடியாக அவரது காதலை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தொடர்ந்து அந்த சிறைச்சாலைக்கு முறையாக விஜயம் செய்த பெபியின் மத போதனைகளை ஆர்வத்துடன் செவிமடுப்பதில் அன்ட்றூ சான் ஈடுபட்டு வந்துள்ளார்.
அன்ட்றூ சான் விடுதலையாவாரானால் இருவரும் இணைந்து குடும்ப வாழ்க்கையை ஆரம்பித்து பிள்ளை களை பெற்றுக்கொள்ள அவர் திட்டமிட்டிருந்ததாக மத்தியுஸ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக