நியூஸிலாந்தில் தஞ்சம் கோரி ஆபத்தான கடற்பயணம் மேற்கொண்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 54 இலங்கையர்கள், தீமோர் தீவில் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாகத் தெரியவருகிறது.
மேலும், இவர்களுடன் பங்களாதேசத்தவர்கள் 10 பேர், மியன்மாரைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 65 பேர் இந்த அவல நிலைக்கு ஆளாகி, தீமோர் தீவின் கப்பாங் என்ற இடத்தில் அந்த நாட்டின் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தீமோர் தீவில் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள இவர்கள், கடந்த மே மாதம் 5 ஆம் திகதி இந்தோனேஷியாவில் இருந்து நியூஸிலாந்தை நோக்கிப் பயணம் செய்தபோது அவுஸ்திரேலிய குடிவரவு, குடியகல்வு அதிகாரிகள் மற்றும் அந்த நாட்டின் கடற்படை இராணுவப் படையினரால் பிடித்து தடுத்து வைக்கப்பட்டிருந்திருக்கின்றார்கள்.
கடந்த மே மாதம் 22 ஆம் திகதி பிடிபட்ட இவர்கள், 31 ஆம் திகதி வரையில் அவர்களால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கின்றார்கள்.
அப்போது தங்களை நியூஸிலாந்து நாட்டிற்குச் செல்லவிட வேண்டும் என்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய இவர்களின் படகுகளை அந்த அதிகாரிகள் பறித்துக் கொண்டு, இவர்களுடன் சென்ற மாலுமிகளை அனுப்பியுள்ளனர்.
இதுபற்றி அவர்களே தமது கைப்பட எழுதியுள்ள கடிதம் ஒன்றில் விபரமாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.
நியூஸிலாந்து அரசாங்கத்திற்கு எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தின் முழு விபரம் வருமாறு:
உங்கள் நாட்டிற்கு அடைக்கலம் தேடி வந்த 54 இலங்கைத்தமிழர்களும், 10 பங்களாதேசிகள், 01 மியன்மார் வாசிகளாகிய நாங்கள் தங்களுடைய கவனத்திற்குத் தெரியப்படுத்திக் கொள்வது யாதெனில்,
எங்கள் நாட்டில் எங்களுக்கு உயிர் உத்தரவாதமின்றி நாட்டை விட்டு வெளியேறி சில மாதங்கள் அகதிகளாக இந்தோனேஷியாவில் வசித்து வந்தோம். எங்களுக்கு அடைக்கலம் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள் நாட்டைத் தேடி 05.05.2015 அன்று அதிகாலை 5 மணிக்கு நாங்கள் 65 பேரும் கடல் வழியாக உங்கள் நாட்டிற்கு படகு மூலம் பயணத்தைத் தொடர்ந்தோம்.
எங்களது பயணம் சுமுகமாக சர்வதேச கடலில் சென்று கொண்டிருந்த போது அவுஸ்திரேலியாவின் சுங்கத் திணைக்களப் படகால் 17.05.2015 மாலைப் பொழுதில் தடுத்து நிறுத்தப்பட்டோம்.
எமது படகில் இருந்த ஆவணங்களாகிய வரைபடம், ஜீ.பி.எஸ், சற்றலைட் போன், திசைகாட்டி ஆகியவற்றினை அதிகாரிகள் பரிசோதனை செய்த போது நாங்கள் நியூஸிலாந்து செல்கின்றோம் என்பதனை அறிந்து கொண்ட அவர்கள், தங்களது கடற்பரப்பிற்கு செல்ல வேண்டாம் என்பதனைத் தெரியப்படுத்தி விட்டு எம்மிடமிருந்து விலகி விட்டனர்.
பின்பு நாங்கள் சர்வதேசக் கடலின் ஊடாக எமது பயணத்தை மீண்டும் உங்கள் நாட்டை நோக்கித் தொடர்ந்து கொண்டிருந்தோம். பின்பு மீண்டும் 6 நாட்கள் கழித்து 22.05.2015 அன்று மாலைப்பொழுதினில் அவுஸ்திரேலியாவின் சுங்கத் திணைக்களப் படகும், கடற்படை இராணுவமும் 2 படகுகளில் வந்து, எங்களது படகினை இடைமறித்து எமது படகு மாலுமியை சிறிய படகில் அவர்களது சுங்கப்படகிற்கு கொண்டு சென்றார்கள்.
கொண்டு சென்றவர்கள் 6 மணி நேரங்களாக மாலுமியுடன் மட்டும் கலந்துரையாடி விட்டு இரவு வேளையானதும் கடற்படையினர் எமது படகிற்குள் நுழைந்தனர். பின்பு எங்கள் அனைவரையும் படகின் வெளிப்பகுதிக்கு அழைத்து அங்கு அமர வைத்தனர்.
இதில் குழந்தைகள், பெண்கள் (கர்ப்பிணிப்பெண்கள்) அனைவரும் அமர்த்தப்பட்ட போது இரவு வேளை மழை பெய்யத் தொடங்கியது. அப்போது பெண்கள், குழந்தைகள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து விட்டு மற்றவர்களை வெளியிலேயே விட்டனர்.
மறுநாள் அதிகாலை நாங்கள் "எங்களை எங்கு கொண்டு செல்கின்றீர்கள்" எனக் கேட்ட போது, எவ்வித பதிலும் சொல்லாமல் எங்களை, எங்களது படகிலேயே அழைத்துச் சென்றனர்.
சில நாட்களின் பின்னர் வடக்கு அவுஸ்திரேலியாவிற்குச் சொந்தமான குடாப் பரப்பில் வைத்து எமது படகிலிருந்து அவர்களின் சுங்க வரிப்படகிற்கு 50 பேரும், இராணுவப் படகிற்கு 15 பேருமாக காலைப் பொழுதில் மாற்றப்பட்டோம்.
அன்றிலிருந்து 31.05.2015 வரை அவர்களுடைய கப்பலில் உள்ள தடுப்பறைக்குள் அடைக்கப்பட்டோம். அதேவேளைகளில் மாற்றுவதற்கு உடைகளின்றி வசதிகள் அற்ற நிலையில் இருந்தோம்.
2 நாட்கள் அவர்கள் எவ்வித பதிலும் எமக்குத் தெரியப்படுத்தாததால் அடுத்த நாள் சுங்க வரிப் படகிலிருந்த 50 பேரும், எமக்கு நல்ல பதில் தருமாறு உணவுகள் ஏதும் உண்ணாமல் உண்ணாவிரதம் இருந்தோம். அதன் பின்பு அவர்கள் தாம் நல்ல முடிவு தருவதாகத் தெரியப்படுத்தினார்கள்.
அவர்களுடைய அந்த உறுதியை நம்பி எதுவித குழப்பங்களும் இன்றி அவர்களின் நல்ல பதிலுக்காக எதிர்பார்த்து இருந்தோம். அவர்கள் எமது சுய விபரங்களையும், புகைப்படங்களையும் எடுத்து எமக்கு ஆதரவான முடிவெடுப்பதாகத் தெரியப்படுத்தினார்கள்.
அதன் பின்பு அகதிகளாகிய எங்களிடம் எந்தவித கருத்துக்களும் கேட்காமல் நாம் கொடுத்த மனுக்களை நிராகரித்து விட்டு எம்மை வலுக்கட்டாயமாக எமது நல்ல நிலையில் இருந்த படகினைத் தம் வசம் வைத்துக் கொண்டு, எந்த வசதியுமற்ற அவர்களின் வேறு 2 சிறிய படகுகளில் எம்மை அவர்களின் பாதுகாப்புடன் தீமோர் கடற்பரப்பிற்கு அண்மையில் கூட்டிச்சென்று அநாதரவாக விட்டு விட்டனர்.
பின்பு மாலுமிகளும் எம்மை இடைநடுவே விட்டு விட்டு தண்ணீரில் குதித்து தப்பி விட்டனர். அதன் பின்னர் எவ்வித வழியும் தெரியாமல் இயந்திரக் கோளாறு காரணமாக படகு இயங்காத போது படகு முருகக்கற்பாறையில் மோதியது.
அதன் பின்னர் ஆபத்தான நிலையில் கடலில் பாய்தோம். இதில் சிறுவர்கள், பெண்கள் (கர்ப்பிணிப்பெண்கள்) அடங்கலாக கடலில் குதித்தோம். அந்த சந்தர்ப்பத்தில் அனைவரும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த வேளையில் கிராமவாசிகள் எம்மை கண்டு இரு சிறு படகில் வந்து குழந்தைகளையும், பெண்களையும் மீட்டனர்.
மற்றையவர்கள் 1.30 மணித்தியாலங்கள் நீந்திக் கரை சேர்ந்தனர். பின்பு அந்தக் கிராமவாசிகள் அங்குள்ள பொலிஸாரிடம் அறிவித்து எம்மை அவர்களிடம் கைய ளித்தனர்.
தற்சமயம் தீமோர் தீவில் உள்ள குப்பாங் என்ற இடத்தில் இருக்கிறோம். இப்போதும் நியூஸிலாந்து அரசாங்கம் எங்களை மீண்டும் தங்கள் நாட்டிற்கு எடுக்கும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக