ஞாயிறு, 14 ஜூன், 2015

பச்சை குத்திக் கொள்­வதில் காட்டும் ஆர்வம் புற்­றுநோய், எயிட்­ஸூக்கு வழி­வ­குத்து ­வி­டக்­கூ­டாது

எப்­பொ­ழுது மனிதன் நாக­ரி­கத்­தின்பால் தன்­னு­டைய நாட்­டத்­தினைக் காண்­பிக்க ஆரம்­பித்­தானோ அக்­க­ணமே பச்சை குத்­துதல் என்னும் கலையும் வளர ஆரம்­பித்­து­விட்­ட­தாக வர­லாற்று ஆராய்ச்­சி­யா­ளர்கள் சான்று பகர்­கின்­றனர். பண்­டைய காலத்தில், இறந்­த­வர்­களின் தோல், மம்­மி­களின் உத­டுகள் போன்­றவை பச்சை குத்­தப்­பட்டு பாது­காக்­கப்­ப­டு­கின்ற வர­லாறு எண்­ணற்றுக் கிடக்­கின்­றது. அந்த வகையில் பச்சை குத்­து­த­லா­னது, உடலில் பச்சை வண்­ணத்தில் ஊசி கொண்டு குத்தி பல்­வேறு வடி­வங்­களை வரைந்து அழ­கு­ப­டுத்திக் கொள்­வது என சொல்­லலாம். ஆனால், நவீன காலத்தில் உடலில் தோலின் கீழாக அழி­யாத மையினை உட்­செ­லுத்­து­வதன் மூலம் அல்­லது தோலின் நிறக்­கா­ர­ணி­களை மாற்­றக்­கூ­டிய பதார்த்­தங்­களால் எழுத்­துக்­க­ளையும் உரு­வங்­க­ளையும் வரைந்து கொள்­வது என கூறப்­ப­டு­கின்­றது.



ஆரம்­ப­கா­லத்தில் பாரம்­ப­ரியம் சார்ந்­த­தாக காணப்­பட்ட இந்த பச்சை குத்தும் சம்­பி­ர­தாயம் தற்­போது நாக­ரி­கத்­திற்­கா­கவும், அழ­கிற்­கா­கவும் குத்­தப்­ப­டு­கின்­றது. மேலும், பண்­டைய காலத்தில் விலங்­கு­களை இனங்­கா­ணவும் மனித அடி­மை­களை இனங்­கா­ணவும் பச்சை குத்­தப்­பட்­டுள்­ள­துடன் இந்­தியா, இலங்கை, "ஐனு" எனப்­படும் ஜப்பான் மக்­க­ளி­டை­யேயும் இவ்­வ­ழக்கம் காணப்­பட்­டது.

பச்சை குத்­து­த­லா­னது அமெ­ரிக்க தோலியல் அக்­க­ட­மியால் ஐந்து வகை­க­ளாக பிரித்­த­றி­யப்­பட்­டுள்­ளது. அதா­வது, இயற்­கை­யி­லான முறையில் பச்சை குத்­துதல், தொழில் முறை சார்­பி­லான பச்சை குத்­துதல்(குலம், கூட்டம், சமூ­க­நிலை, சமயம், நம்­பிக்கை, வீரம், காதல் வெளிப்­பாடு, தண்­ட­னை­களை குறித்தல், பாது­காப்பு), அலங்­காரம் அல்­லது அழ­கியல் ரீதி­யி­லான பச்சை குத்­துதல், மருத்­துவ நோக்­கி­லான முறையில் பச்சை குத்­துதல், அடை­யா­ளப்­ப­டுத்­து­வ­தற்­காக பச்சை குத்­துதல் போன்ற ஐந்து முறை­களே அவை­யாகும்.

பச்சை குத்­து­த­லா­னது பெரும்­பாலும் அழகு சம்­பந்­தப்­பட்­ட­தா­கவே காணப்­ப­டு­கின்­றது, அதா­வது, மச்சம் உள்ள இடங்­களை மறைத்தல், உதடு, மார்­பகம், கண் இமை போன்ற இடங்­களில் பெண்கள் பெரும்­பாலும் விரும்பி போட்­டுக்­கொள்­கி­றார்கள். மேலும் மத­கு­ரு­மார்கள் மற்றும் வைத்­திய சிகிச்சை தொடர்­பான பச்­சையும் குத்­தப்­ப­டு­வ­துண்டு. ஆரம்ப காலங்­களில் மார்பு, கை, கால், முன்­னங்கை, புயம் போன்ற இடங்­களில் மட்டும் தான் குரவர் இனத்­த­வரால் இப்­பச்சை குத்­தப்­பட்­டது. இப்­பச்சை மஞ்­சள்­பொடி, அகத்­திக்­கீரை ஆகி­ய­வற்றை தீயி­லிட்டு எரித்து கறி­யாக்கி நீர் சேர்த்து பசை­யாக்கி கூர்­மை­யான ஊசி­யினால் தொட்டு தோலில் குத்தி தேவை­யான உரு­வங்­களை வரைந்­தனர். ஆனால் தற்­போது இர­சா­ய­னங்கள் கொண்டு தான் பச்சை குத்­தப்­ப­டு­கின்­றது.

இப்­பச்சை குத்தும் முறைகள் தொடர்பில் தேசிய புற்­றுநோய் கட்­டுப்­பாடு நிகழ்ச்­சித்­திட்­டத்தின் வைத்­திய கலா­நிதி சிவப்­பி­ர­காசம் அனுஷ்­யந்­த­னிடம் வின­விய போது அவர் கூறு­கையில்,

பச்சை குத்­திக்­கொள்­ள­வேண்டும் என்ற ஆசை கொண்­ட­வ­ராயின், நீங்கள் ஒரு­மணி நேரத்தில் அழ­கான பச்­சையை குத்­திக்­கொள்­ளலாம். நீங்கள் பச்சை குத்­திக்­கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுப்­ப­தற்கு முன்னர், ஒரு முறைக்கு இரு தட­வைகள் யோசி­யுங்கள். இவ்­வி­ட­யத்தில் உங்­களை யாரும் கட்­டுப்­ப­டுத்­தவோ கட்­டா­யப்­ப­டுத்­தவோ அனு­ம­திக்­கா­தீர்கள். மதுவின் ஆளு­கையில் உள்ள போது ஒரு­போதும் பச்சை குத்திக் கொள்­ளாதீர். உடலில் வெளிப்­ப­டை­யாக தெரி­யக்­கூ­டிய இடத்­திலா அல்­லது ஆடை­க­ளினுள் மறையக் கூடி­ய­தா­கவா பச்சை குத்த விரும்­பு­கி­றீர்கள் என்­ப­தையும் தீர்­மா­னி­யுங்கள். கருத்­த­ரித்தல் மற்றும் பிற கார­ணங்­களால் உங்கள் உடல் நிறை அதி­க­ரிக்­கும்­போது, வரைந்த உரு­வங்கள் மாறு­பாடு அடை­வ­தோடு சிதை­வ­டை­யலாம் என்­ப­தையும் கவ­னத்தில் கொள்­ளுங்கள்.

பச்சை குத்தும் செயல்­மு­றை­யா­னது எளி­தா­ன­தாக அமை­யா­த­தோடு, உடலின் நிரந்­த­ர­மான தோற்­றத்தைப் பற்­றியும் சிந்­திக்க மறக்க வேண்டாம். நீங்கள், பச்சை குத்­திக்­கொள்ளும் முன்னர் இது எவ்­வாறு நடை­பெ­று­கின்­றது, யார் தொடர்­பு­பட்­டுள்ளார், அபா­யங்­களைக் குறைக்க எவ்­வா­றான பாது­காப்­பு­மு­றைகள் பின்­பற்­றப்­ப­டு­கின்­றன என்­ப­தையும் உறுதி செய்­துக்­கொள்­ளுங்கள்.

பச்சை குத்­தும்­போது நடை­பெறும் பொறி­மு­றை­யா­னது, மனித உடலை மூடி­யுள்ள தோலின், மேல் அடுக்­கினுள் பச்சை நிற­மிகள் உள் நுழைக்­கப்­ப­டு­கின்­றன. பொது­வாக நீங்கள் வரைய விரும்பும் தோற்­றத்தை இக்­க­லை­ஞர்கள் முதலில் உங்கள் உடலில் வரை­வார்கள். அதன்­பின்னர், பச்சை குத்தும் கலைஞர், வரைந்த உரு­வத்­தின்மேல், ஒன்று அல்­லது அதற்கு மேற்­பட்ட ஊசி­களைக் கொண்டு, மீண்டும் மீண்டும் உங்கள் தோலினுள் பச்சை நிற­மி­களை உட்­செ­லுத்திக் கொண்­டி­ருப்­பார்கள். இது ஒரு கைத்­தையல் இயந்­திரம் போல செயல்­ப­டு­கி­றது. பச்சை குத்தும் இயந்­திரம், ஒரு கையின் கட்­டுப்­பாட்டில் இயக்கிப் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றது. ஒவ்­வொரு முறையும் ஊசி தோலினுள் உட்­செ­லுத்­தப்­ப­டு­கின்ற போது, துளை மூலம், ஊசிகள் சிறிய மைத் துளி­களை நுழைத்­து­வி­டு­கின்­றன.

பச்சை குத்­துதல் என்­பது, மயக்­க­ம­ருந்து கொடுக்­கப்­ப­டா­மலே செய்­யப்­ப­டு­கி­றது. அத்­தோடு, இது நடை­பெ­றும்­போது, குறிப்­பி­டத்­தக்க வலி உண­ரப்­ப­டு­வ­தோடு, ஒரு சிறிய இரத்­தப்­போக்கும் ஏற்­ப­டலாம். பச்சை குத்­து­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய மருத்­துவ ரீதி­யான பாதிப்­புக்கள் என்று பார்த்­தோ­மே­யானால், மனிதத் தோலினுள் பல­வி­த­மான நிற­மிகள் உட்­செ­லுத்­தப்­ப­டு­வதால், தோல் நோய், தோல் அழற்சி மற்றும் பிற சிக்­கல்கள் தோன்­று­கின்­றன.

ஒவ்­வாமை–- பச்சை சாயங்கள், குறிப்­பாக சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் நீல நிற­மான சாயங்­களை தோலினுள் செலுத்­தும்­போது, பச்சை நிற­மிகள் குவிக்­கப்­பட்ட தளத்தில் அரிப்­புக்கள், தடிப்­புகள் அல்­லது தோல் தடிப்­ப­டைதல் போன்ற ஒவ்­வாமை விளை­வுகள், தோலில் எதிர்­வி­ளை­வு­களை ஏற்­ப­டுத்­தலாம். இது, நீங்கள் பச்சை குத்­திக்­கொண்­ட­வு­டனும் அல்­லது பல ஆண்­டுகள் கழித்­தும்­கூட ஏற்­ப­டலாம்.

தோல் நோய்கள்–- சில­வகை தோல் நோய்கள், பச்சை குத்­திய பிறகு தோன்றும் சாத்­தி­யக்­கூ­றுகள் காணப்­ப­டு­கின்­றன. அதா­வது பூஞ்சை தொற்று, புற்­றுநோய் போன்­ற­வையும் ஏற்­ப­டலாம்.

பிற தோல் பிரச்­சி­னைகள் - சில நேரங்­களில் Granulomas என்று அழைக்­கப்­படும் புடைப்­புகள் அல்­லது வீக்­கங்கள், பச்சை மையைச் சுற்றி அமைந்து காணப்­ப­டலாம். பச்சை குத்­திய இடங்­க­ளைச்­சூழ மேலும் keloids எனப்­படும் நார் இழையப் புடைப்­புக்­களும் ஏற்­ப­டலாம்.

இரத்த மாதிரி அல்­லது ஊசி மூலம் பர­வக்­கூ­டிய நோய்கள் - உங்­க­ளுக்கு பச்சை குத்தப் பயன்­படும் ஊசிகள், மற்­றைய உப­க­ர­ணங்கள் பாதிக்­கப்­பட்ட இரத்­தத்தால் கிருமித் தொற்­றா­தவை என்றால், உங்­க­ளுக்கு இரத்­தத்தால் பர­வக்­கூ­டிய பல்­வேறு நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்­ளது. குறிப்­பாக, எயிட்ஸ், காசநோய், கல்­லீரல் அழற்சி, ஏற்­பு­வலி, மஞ்­சள்­கா­மாலை B and C போன்ற நோய்கள் ஏற்­பட வாய்ப்­புக்கள் உள்­ளன.

MRI Scan சிக்­கல்கள்– - பச்சை குத்­து­வதால் ஏற்­படும் நிரந்­தர அலங்­காரம் அல்­லது வீக்­கங்கள் போன்­றன, காந்த ஒத்­த­திர்வு பட­மெ­டுக்கும் போது (MRI Scanning) பச்சை குத்­து­வதால் பாதிக்­கப்­பட்ட பகு­திகள், சில­வே­ளை­களில் எரியும் உணர்வு ஏற்­ப­டலாம். சில சந்­தர்ப்­பங்­களில், உட­லி­லுள்ள, பச்சை நிற­மிகள் MRI Scanning பிம்­பத்தின் தரத்தைக் குறைக்­கலாம். நீங்கள் பச்சை குத்­திய இடத்தில், மை ஒவ்­வா­மையை அனு­ப­விக்க நேர்ந்தால் அல்­லது நீங்கள் ஒரு பச்சை குத்­திய இடத்­திற்கு அருகே, ஒரு வகை­யான தொற்­று­நோய்கள் அல்­லது இதர தோல் பிரச்­சினை உரு­வா­கு­கின்­றது என்றால், மருந்து வகைகள் அல்­லது மற்ற சிகிச்சை ஆலோ­ச­னைகள் என்­பன உடனே உங்­க­ளுக்குத் தேவை என்­பதை மற­வா­தீர்கள்.

பச்சை குத்தும் போது, பல விட­யங்­களை கவ­னிக்க வேண்டும். அதா­வது,

யார் இந்த பச்சை குத்தும் செயன்­மு­றையைச் செய்­கின்­றார்கள் என்­பது கட்­டாயம் அவ­தா­னிக்­கப்­ப­ட­வேண்டும். அது மட்­டு­மல்ல, ஒழுங்­காக பயிற்சி கொடுக்­கப்­பட்ட ஊழி­யர்கள் வேலைக்கு அமர்த்­தப்­பட்டு இருக்­கின்­றார்­களா என்­பதை, பச்சைக் குத்தும் ஸ்டூடி­யோக்­க­ளுக்குச் சென்று அர­சாங்க தரக்­கட்­டுப்­பாட்டு தேவைகள் மற்றும் உரிமம் என்­ப­ன­வற்றின் தரத்தை பாசோ­தித்து அறிதல் வேண்டும். உள்ளூர் சேவை வழங்­கு­நர்­களின் உரிமம் மற்றும் கட்­டுப்­பா­டுகள் போன்ற தக­வ­லுக்கு, உங்கள் நகரம், மாவட்டம் அல்­லது மாநில சுகா­தாரத் துறை­யி­ன­ரிடம் கேட்டு சரி­பார்க்­கவும்.

பச்சை குத்தும் கலை­ஞர்கள், கையு­றைகள் அணி­கின்­றார்­களா என்­பதை உறு­திப்­ப­டுத்­துங்கள். பச்சை குத்தும் கலைஞர் தனது கைகளை நன்­றாக சவர்க்­கா­ர­மிட்டு கழு­வு­வ­தோடு, ஒவ்­வொரு புதுச் செயல்­மு­றைக்கும், ஒரு சோடி புதிய பாது­காப்பு கையு­றை­களை அணிந்­துள்ளார் என்­பதை உறு­திப்­ப­டுத்­துங்கள். பச்சை குத்தும் கலைஞர் சரி­யான உப­க­ர­ணங்­களைப் பயன்­ப­டுத்­து­கின்றார் என்­பதை உறு­திப்­ப­டுத்­துங்கள். ஒவ்­வொரு புதிய நடை­முறை தொடங்கும் முன்­னரும், பச்சை குத்தும் கலைஞர், சீல் வைக்­கப்­பட்ட தொகுப்­புக்­க­ளினுள் இருந்து ஊசி மற்றும் குழாய்கள், மை போன்­ற­வற்றைப் பெற்­றுக்­கொள்­கின்றார் என்­பதை உறுதி செய்து கொள்­ளுங்கள். ஒவ்­வொரு தட­வையும், மை வகைகள், நிற­மிகள், தட்­டுக்கள் மற்றும் கொள்­க­லன்கள் என்­பன பயன்­ப­டுத்­தப்­ப­டா­த­தாக இருக்க வேண்டும்.

புதி­தாக குத்­திய பச்­சையை எவ்­வாறு பரா­ம­ரிப்­பது என்று பல­ருக்கு தெரி­வ­தில்லை அத­னா­லேயே பலர் கிருமி தொற்­றுக்கும் நோய் தொற்­றுக்கும் ஆளா­கு­கின்­றனர். புதி­தாக குத்­திய பச்­சையின் தர­மா­னது, உங்கள் புதிய பச்சை குத்­திய விதம், கலைஞர் செய்த வேலையின் தரம் மற்றும் வகை போன்­ற­வற்றில் சார்ந்­தி­ருக்­கின்­றது. இருப்­பினும், பொது­வாக நீங்கள் பின்­வரும் பரா­ம­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும். 24 மணி நேரம் கழித்தே பச்சை குத்­தும்­போது அணி­விக்­கப்­பட்ட கட்­டுக்­களை நீக்­க­வேண்டும். புதிய பச்சை குத்­தல்­களைக் குணப்படுத்தும் நோக்கில், தோலுக்குத் தேவையான கிருமி கொல்லி மருந்துகளை தடவலாம். பச்சை குத்திய தோலை தூய்மையாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். மென்மையான சோப்பு நீர் மற்றும் ஒரு மென்மையான தொடுகை மூலம் தூய்மைப்படுத்தவும். நீச்சலடிப்ப தைத் தவிர்க்கவும்.

உங்கள் ஆடை­களைக் கவ­ன­மாகத் தேர்வு செய்­யுங்கள். புதி­தாக குத்­திய பச்­சையில் ஒட்­டிக்­கொள்ளும் வகையில் ஆடைகள் எதுவும் அணிய வேண்டாம். எப்­போதும் தளர்­வான ஆடை­க­ளையே அணி­யுங்கள். பச்சை குத்­திய இடங்கள் ஆறி வரு­வ­தற்கு, 2 வாரங்கள் வரை அனு­ம­திக்­கலாம். காயத்தின் மேலுள்ள வடுக்­களை சுரண்டி அகற்­ற­முற்­ப­டு­கின்­ற­போது, கிருமித் தொற்று ஏற்­படும் ஆபத்தும் அதி­க­ரிக்­கின்­றது. 2 வாரங்­க­ளுக்குள் காயங்கள் பூர­ண­மாகக் காயா­விட்டால், வைத்­திய ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­வது சாலச் சிறந்­தது. நீங்கள், உங்­க­ளுக்கு குத்­திய பச்­சையை அகற்­று­வதில் ஆர்வம் கொண்­டி­ருந்தால், லேசர் சிகிச்சை அல்­லது விசேட பச்சை அகற்றும் தொழில்­நுட்பம் பற்றிய அறிவையும் பெற்றுக்கொள்ளுங்கள்.







Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல