image from google
அன்றாடம் வெளிவரும் அச்சு, இலத்திரனியல் ஊடகங்களின் செய்தி உள்ளடக்கங்களில் வீதி விபத்துக்கள் குறித்த செய்திகளைத் தினமும் அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இவ்விபத்துக்கள், மனித உயிர்கள் பலவற்றினைக் காவு கொள்வதுடன், உடல் ஊனமடைதல், சொத்துக்களுக்கு அழிவு ஏற்படுதல் எனப் பல அனர்த்தங்களையும் ஏற்படுத்துகின்றன.
போக்குவரத்துக் காவல்துறையின் கண்டிப்பான நடவடிக்கைகள், பல்வேறு ஊடகங்கள் வாயிலான விழிப்பூட்டும் நடவடிக்கைகள், வீதிவிபத்து குறித்த செய்திகள் தரும் அழிவு குறித்த தகவல்கள் என வாகன சாரதிகளை பல்வேறு வழிகளில் எச்சரித்தபோதும் வீதி விபத்துக்கள் தொடர்ந்தவாறேயுள்ளன.
வீதி ஒழுங்கினைப் பின்பற்றாமை, பொதுமக்கள் போக்குவரத்துச் சேவையை வழங்கும் பேரூந்துகளுக்கிடையேயான ஏற்படும் போட்டித்தன்மைகள், சாரதிகள் தொடர்ச்சியாகப் பணியில் ஈடுபடுத்தப்படல், அதீத வேகம் போன்றவைகள் வீதி விபத்துக்களுக்குக் காரணமாகின்றன.
விளைவுகளைத் தெரிந்துகொண்டும், அவ்வாறான நடவடிக்கைகளில் வாகனச் சாரதிகள் ஈடுபடுவதற்கு என்ன காரணம் என்பதை ஆராய்கையில், சாரதிகள் அநேகர் மதுபோதையில் நிதானமின்றி வாகனம் செலுத்துவதனாலேயே அதிக எண்ணிக்கையிலான வீதி விபத்துக்கள் நிகழ்கின்றன என்ற பின்னணி தெரியவருகின்றது. மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துவதை முற்றாகத் தடுப்பது என்பது, காவல் துறையினரால் இயலாத காரியமாகும். இந்நிலையில், மதுபோதையில் வாகனம் செலுத்தப்படுவதைத் தடுக்க புதிய தொழில்நுட்பம் ஒன்று உதவவுள்ளதான செய்தியொன்று கடந்த 6 ஆந் திகதி வெளியாகியுள்ளது.
சாரதிகள் எந்த வகையிலும் ஏமாற்றாத வகையில் மதுபோதையில் செலுத்துனர் இருப்பதைக் கண்டறிய புதிய தொழில்நுட்பம், Driver Alcohol Detection System for Safety (DADSS) வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்நுட்பமானது, சுவாசம் மற்றும் தொடுகை என்ற இருவழிகளால் சாரதியின் நிலைமையினைக் கண்டறிகின்றது. அனுமதிக்கப்பட்ட அளவைப் பார்க்கிலும் அதிகமான அற்ககோல் உடலில் உள்ளமை உணரப்பட்டால், தொழில்நுட்பம் வாகனத்தினை இயங்க அனுமதிக்காது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
சுவாசத்தின் வழியேயான சாரதியை அவதானிக்கும் உணரியானது வாகனத்தின் திருப்புச் சக்கரத்தின் (steering wheel) மையத்தில் பொருத்தப்பட்டுள்ள அதேவேளை, மற்றைய தொடுகை வழியே மதுபோதையை மட்டிடும் உணரி, வாகனத்தினை இயக்க ஆரம்பிக்கும் ஆளியின் மேற்பரப்பில் இணைக்கப்பட்டுள்ளது. முதலாவது உணரி, செலுத்துனரில் இருந்து வரும் வெளிச்சுவாசக் காற்றில் காணப்படும் அற்ககோலின் அளவினை அவதானிக்கும். தொடுகை உணரி, உடலின் குருதியில் காணப்படும் அற்ககோலின் செறிவினைக் கணிக்கும் எனத் தெரியவருகின்றது.
சுவாசம் வழியே அவதானிக்கும் தொகுதியானது சுவீடன் நாட்டின் நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டதாகும். இத்தொகுதியிலிருந்து வெளிவரும் அகச்சிவப்புக் கதிர்ப்பின் வெவ்வேறு குறிப்பிட்ட அலைநீளங்களை வெளிச்சுவாசக் காற்றில் காணப்படும் காபனீரொட்சைட் மூலக்கூறு மற்றும் அற்ககோல் மூலக்கூறுகள் தனித்தனியே உறிஞ்சும். தனித்தனியே உறிஞ்சப்பட்ட வேறுபட்ட குறிப்பிட்ட அலைநீளக் கதிர்ப்புக்களின் அளவிலிருந்து அற்ககோலின் அளவு கணிக்கப்படுகின்றது.
தொடுகையால் உடலில் உள்ளே உள்ள குருதியின் அற்ககோலின் அளவினை அளவிடும் தொகுதி Takata மற்றும் TruTouch என்ற நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டதாகும். இத்தொகுதி, அகச்சிவப்புக் கதிரினை விரல் நுனிக்கு செலுத்தி குருதியில் காணப்படும் அற்ககோல் மூலக்கூறுகளின் செறிவினை கணிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்பட்ட பின்னர் செலுத்தியவருக்கு தண்டனை வழங்குவது என்பது, இழந்த உயிர்களையோ அல்லாவிடின் அழிவடைந்த சொத்துக்களையோ திரும்பித் தரப்போவதில்லை என்பது தெளிவு. எனவே, புதிய தொழில்நுட்பம் மதுவருந்திய சாரதிகளை அடையாளம் கண்டு, அவர்கள் வாகனம் செலுத்துவதைத் தடுப்பது என்பது, வீதிவிபத்துக்கள் “வருமுன் காக்கும்” பயனுள்ள நடவடிக்கையாகும். இப்புதிய தொழில்நுட்பம் எதிர்வரும் ஐந்து வருடங்களில் உபயோகத்திற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.ஹரின் சுலக்ஸ்ஸி
யாழ். நகர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக