image source : google
பலவகையான இலத்திரனியல் சாதனங்கள் ஒவ்வொரு காரணத்திற்காகவும் சிற்சில முதல்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியிருக்கின்றது. இச்சாதனங்களின் செயற்பாட்டிற்கு மின்சக்தி அவசியமாகும். எனவே, மின்சக்தியைப் பெறுவதற்காக மின்முதலுடன் கடத்தி வாயிலாக அச்சாதனம் இணைக்கப்படவேண்டி இருக்கின்றது.
கணினியில் இருந்து பதியியில் அச்சுப்பதிக்க வேண்டுமெனில், பதியி கணினியுடன் கடத்தியால் இணைக்கப்பட வேண்டும். தரவுப் பரிமாற்றங்கள் நிகழ வேண்டுமெனில், கணினிக்கும் நினைவகத்திற்கும் இடையே கடத்தியால் இணப்பு நிகழ வேண்டும். சிலவருடங்களுக்கு முன்னர், இணையத்தொடர்பினைப் பெறுவதாயின், அதற்கான முதலுடன் உரிய கடத்தியை உபயோகித்து இணைக்க வேண்டியிருந்தது.
இவ்வாறாக இலத்திரனியல் சாதனங்கள் கடத்தி வழியே இணைக்கப்படுகையில், அக்கருவியின் நடமாடும் சுதந்திரம் மட்டுப்படுத்தப்பட்டதாக அமைவதுடன், வலைப்பின்னலாகத் தோன்றும் கடத்திகளின் இணைப்புக்கள் கண்களுக்கு நேர்த்தியாகத் தோன்றுவதும் இல்லை.
ஆனால், அறிவியல் புரட்சிகள் இந்த இணைப்புக்களிலிருந்து இலத்திரனியல் சாதனங்களுக்குப் படிப்படியாக விடுதலை அளித்து வருகின்றது. அலுவலகங்களில் கணினி மற்றும் பதியி இற்கு இடையிலான இணைப்புக்கள் தற்போது ‘புளுரூத்’ (Blue tooth) என்ற கடத்தியற்ற தொழில்நுட்பத்தினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலத்திரனியல் கருவிகளுக்கிடையேயான தரவுப் பரிமாற்றங்களும் கூட இதே தொழில்நுட்பத்தினூடாக நிறைவேற்றக்கூடியதாகவுள்ளது. இணையத்தொடர்புகளையும் ‘வை-பை’ (Wi-Fi) என்ற அறிவியல் புரட்சி ஊடாகக் கடத்தி இன்றிப் பெறும் யுகம் தற்போது நிலவி வருகின்றது.
எனினும், மின்சக்தியைப் பெறுவதற்காக கடத்தியுடன் இணைக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலை இதுவரை நிலவி வந்தது. சாதனங்களை மின்னேற்றும் அமைப்புக்களைச் சாதனங்களுடன் எடுத்துச் செல்ல மறந்து விடுதல், நாட்டுக்கு நாடு செல்லுகையில், சென்றடையும் நாடுகளில் பின்பற்றப்படும் மின்சாரக் கட்டமைப்புக்கள் எடுத்துச் சென்ற மின்னேற்ற அமைப்புக்களுக்குப் பொருந்தாது இருத்தல் என்பன சாதனப் பயன்பாட்டில் இடர்களை ஏற்படுத்துபவையாக இருந்து வந்தன.
தற்போது, புதிய அறிவியல் ஆய்வின் ஊடாக கடத்தி இன்றி மின்னேற்றும் புதிய வழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.கடத்தி இன்றி மின்சக்தியினைப் பரிமாற்றம் நுட்பங்கள் குறித்து அமெரிக்காவில் Seattle இல் அமைந்துள்ள வொஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் முயன்று கொண்டிருந்தனர்.
தற்போது பிரபலமடைந்திருக்கும் ‘வை-பை’ தொழில்நுட்பமானது, மின்சமிக்ஞைகள் ஊடாக இணையத்தரவுகளைக் கடத்தியின்றி இலத்திரனியல் சாதனங்களுக்கு பரிமாற்றும்போது, அச்சாதனங்களின் உணரிகள் சமிக்ஞைகளின் சக்திப் பகுதியை புறக்கணித்துத் தரவுப் பகுதியைப் பெற்றுக்கொள்கின்றன. இதனை அவதானித்த ஆய்வாளர்கள், அச்சமிக்ஞைகளின் சக்திப் பகுதியைப் பெற்றுக்கொள்ளும் உணரி ஒன்றினை வடிவமைத்தால் தமது ஆய்வின் இலக்கு எய்தப்பெறும் என எண்ணி, அவ்வாறான உணரி ஒன்றினை வடிவமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். ஆய்வின் மூலம் வடிவமைக்கப்பட்ட உணரி ஊடாக கடத்தியின்றி மின்சாதனங்களை மின்னேற்ற முடிவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடிவமைக்கப்பட்டுள்ள கடத்தி இன்றிய மின்னேற்றும் கட்டமைப்பு PoWi-Fi (Power over Wi-Fi) எனப் பெயரிடப்பட்டுள்ளது. கட்டமைக்கப்பட்ட வடிவமைப்பினை ஆய்வாளர்கள் வெப்பநிலை உணரி மற்றும் ஒளிப்படக்கருவி ஆகியவற்றில் இணைத்து, ‘வை-பை’ முதலில் இருந்து சுமார் 6 மீற்றர் தூரத்தில் அக்கருவிகளை நிலைப்படுத்தினர். அக்குறித்த ‘வை-பை’ முதல் இணையத்தொடர்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கையில், இவ்விரு கருவிகளும் ‘வை-பை’ முதலிருந்து பெறப்படும் சமிக்கைகளிலிருந்து சக்திப் பகுதியைப் பெற்று இயங்கிக் கொண்டிருந்தமையை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். இதுதவிர, விளையாட்டில் பயன்படுத்தப்படும் Jawbone UP24 என்னும் அவதானிப்புக் கருவியினையும் இக்கட்டமைப்பினூடாக மின்னேற்றினர். இதன்போது, அக்கருவியின் மின்கலக் கொள்ளளவின் 41 சதவீதம் 2.5 மணித்தியாலங்களில் மின்னேற்றப்பட்டமை நோக்கப்பட்டுள்ளது.
மேலும், 24 மணித்தியாலமும் ‘வை-பை’ இயங்கும் 6 வீடுகளில் நாணய வடிவிலான மின்கலங்களை மின்னேற்றும் கட்டமைப்பினை நிறுவி ஆய்வாளர்கள் அவதானித்தனர். இந்த ‘வை-பை’ முதலில் இருந்தான மின்னேற்றும் நிகழ்வுகளால், இணையத்தொடர்பில் தடங்கல்களை உணரவில்லை என அவ்வீடுகளின் பாவனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, இதுவரை தீராத சாபமாக இருந்து வந்த கடத்தி வழியேயான இலத்திரனியல் சாதனங்களின் மின்னேற்றல் செயற்பாடு, PoWi-Fi கண்டுபிடிப்பினால் விமோசனம் பெற்றுவிட்டது எனக் கருதலாம். எனவே, எதிர்காலத்தில், மின்னேற்றல் அமைப்புக்கள் இல்லாது, சுதந்திரமாக இலத்திரனியல் கருவிகளை எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்த இப்புதிய கண்டுபிடிப்பு வழிவகுக்க இருக்கின்றது.
சில்லையூர்
றெ.அலெக்ஸ், யாழ்ப்பாணம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக