தேசிய புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவை புதிய அரசாங்கம் குறிவைத்திருக்கிறது.
அவரது வங்கிக் கணக்குகள் மற்றும் நிதிக் கொடுக்கல் வாங்கல்கள் குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்கு, பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு, கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திடம் கடந்த வாரம், அனுமதியைப் பெற்றிருக்கிறது.
இதனுடன், யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் தொலைக்காட்சி ஒன்றின் பணிப்பாளரான தமிழர் ஒருவரது வங்கிக் கணக்குகள், கொடுக்கல் வாங்கல்கள் குறித்தும் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்திருக்கிறது.
மேலோட்டமாகப் பார்த்தால், இது ஒரு முன்னைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த முக்கிய அதிகாரிகளின் ஊழல் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் ஒரு நடவடிக்கையாகத் தான் தெரியும்.
ஆனால், இந்த விசாரணை முறைப்படி முன்னெடுக்கப்பட்டால், பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிக்கொண்டு வரக் கூடிய ஒன்றாக அமையலாம்.
மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவின் வங்கிக் கணக்குகளுடன், விசாரணை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், யாழ்ப்பாணத்தில் இருந்தும் ஐரோப்பாவில் இருந்தும் செயற்படும் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளரே, 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் கபில ஹெந்தவிதாரணவினதும் அவருக்கு நெருக்கமானவர்களினதும், சார்பில் லக்சம்பேர்க்கில் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
2009ஆம் ஆண்டு என்பது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட ஆண்டு.
அதற்குப் பின்னரோ அல்லது விடுதலைப் புலிகள் அழிவின் விளிம்பில் இருந்த நிலையிலோ தான், மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவினாலும், அவரது சகாக்களினாலும் லக்சம்பேர்க்கில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கருத வேண்டும்.
அதற்கான கருவியாக, புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஊடகம் ஒன்றின் பணிப்பாளரே பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டு உறுதியானால், நிரூபிக்கப்பட்டால், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில், இலங்கையின் அரச புலனாய்வு அமைப்புகள் எந்தளவுக்கு ஊடுருவியிருந்தன,- செல்வாக்குச் செலுத்தின என்பது வெளிச்சமாகும்.
குறிப்பிட்ட ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் தொடங்கினார்.
அந்த நிறுவனத்தின் செய்திப் பிரிவுக்குப் பொறுப்பாக, விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவில் இருந்தவரும், படையினரிடம் சரணடைந்து விடுவிக்கப்பட்டவருமான ஒருவரே பணியாற்றி வருகிறார்.
மேலும், குறிப்பிட்ட ஊடகம், விடுதலைப் புலிகளையும், விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்களையும் கடுமையாக விமர்சிக்கவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கொச்சைப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில், வாக்களிப்பு நேரம் இரவு 7 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாக பொய்யான செய்தியை ஒளிபரப்பி, வாக்காளர்களைக் குழப்ப முயன்றதான ஒரு வழக்கும், இந்த தொலைக்காட்சிக்கு எதிராக யாழ்ப்பாண நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னைய அரசாங்கத்தினதும், அரச சார்பானவர்களினதும் நலன்களுக்காக செயற்பட்ட குறிப்பிட்ட தொலைக்காட்சியின் பணிப்பாளரே, முன்னைய அரச புலனாய்வுப் பணிப்பாளரினால், ஐரோப்பாவில் பணத்தைப் பதுக்குவதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்.
இதிலிருந்து, குறிப்பிட்ட தொலைக்காட்சி ஐரோப்பாவில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னணியில், அரச புலனாய்வுப் பிரிவு இருக்கிறதா என்று சந்தேகம் எழுவது இயல்பு.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும், ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னரும், அரச புலனாய்வுப் பிரிவின் எல்லா நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக இருந்தவர் தான் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண.
இவர் இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த காலத்தில், இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணிகள் வலுப்படுத்தப்பட்டு, புலிகளுக்கு எதிரான நிழல் யுத்தம் நடத்தப்பட்டது.
போர்க்காலத்தில், விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் படையினரை இரகசியமாக நகர்த்தி அவர்களின் பலவீனங்களை அறிந்து அதற்கேற்ப போரை வெற்றி கொள்ள காரணமாக இருந்தவர் இவர்.
போரில் அரசபடைகள் வெற்றி பெற்ற பின்னர், புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முறிடியடிக்க இவரே மூளையாகச் செயற்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மீள உயிர் கொடுக்க முயன்றதாகக் கூறப்படும் கே.பியை மலேசியாவில் பிடித்துக் கொண்டு வந்தது உள்ளிட்ட பல இரகசிய நடவடிக்கைகளின் சூத்திரதாரியாகவும் இவரே இயங்கியிருந்தார்.
பல்வேறு நாடுகளின் அரச புலனாய்வு அமைப்புகளுடன், அதிகாரபூர்வமாகவும் அதிகாரபூர்வமற்ற வகையிலும் தொடர்புகளை ஏற்படுத்தியதுடன், புலம்பெயர் தமிழர்களை குழப்பி, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்துவதிலும் இவர் முக்கிய பங்காற்றியவர்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக் ஷவின் மிக நெருங்கிய நண்பரான இவர், ஆயுத மோதல் முடிவுக்கு வந்த பின்னர் அவரது இரகசிய நடவடிக்கைகளுக்கும் உதவியாகச் செயற்பட்டவர்.
இவர் ஐரோப்பாவில் தமிழ் ஊடகப் பணிப்பாளர் மூலம் நிதியை முதலீடு செய்தார் என்பது உறுதியானால், அந்த நிதி எவ்வாறு கிடைத்தது என்ற கேள்விகள் எழும்.
போரின் முடிவில் கைப்பற்றப்பட்ட பெருமளவு தங்கம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் எங்கே, என்னவாயிற்று என்ற சரியான பதில்கள் யாரிடமும் இல்லை.
அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் பங்கிடப்பட்டு வெளிநாடுகளில் பதுக்கப்பட்டனவா என்ற சந்தேகங்களும் உள்ளன.
அதைவிட, வெளிநாடுகளில் சிக்கிய விடுதலைப் புலிகளைச் சார்ந்த சிலரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்கள் தொடர்பான விபரங்களும் இல்லை.
அதேவேளை, அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்தும் நடவடிக்கையில் முக்கிய நபராகச் செயற்பட்டவர் இவர் என்று இந்த ஆண்டின் ஆரம்பத்தில் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
முக்கிய அரசியல், இராஜதந்திர நோக்கத்துக்காக முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்று கருதப்பட்ட அந்த ஆட்கடத்தல்களின் மூலமும் பெருமளவு பணம் திரட்டப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளன.
இவை தவிர, புலனாய்வுப் பிரிவினால் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு, கப்பங் கள் பெறப்பட்டதாகவும் கூட தகவல்கள் இருக்கின்றன.
இவ்வாறு திரட்டப்பட்ட பணமே ஐரோப்பாவில் முதலிடப்பட்டுள்ளது என்பது உறுதியானால், அது இன்னும் பல இரகசியங்கள் வெளிவருவதற்கும் காரணமாகலாம்.
அதாவது, புலம்பெயர் தமிழர்கள் மத்தி யில் அரச புலனாய்வுப் பிரிவு எந்தளவு க்கு ஊடுருவியுள்ளது என்பதும் அதில் அடக்கம்.
ஏனென்றால், ஆயுத மோதல்கள் முடிந்த பின்னர், புலம்பெயர் தமிழர்களைக் குறிவைத்து மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம் ஒரு தீவிர நிழல் யுத்தத்தை நடத்தியிருந் தது.
அதில் முக்கியமானது, ஊடகங்களை கைப்பற்றுதல். ஒரு கட்டத்தில் ஏராளமான இணைய ஊடகங்கள் மஹிந்த ராஜபக் ஷ அரசின் கைக்குள் அடங்கிப் போனதாக வும் தகவல்கள் வெளியாகின.
பணம் அல்லது வேறு பலவீனங்களை வைத்து, புலம்பெயர் நாடுகளில் இயங்கிய ஊடகங்கள்கள் முன்னைய அரசினால் விலைக்கு வாங்கப்பட்டு தமிழரின் போராட்டத்துக்கு எதிராக – நாசூக்கான முறையில் திசை திருப்பி விடப்பட்டன.
அதற்கும் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவே மூளையாகச் செயற்பட்டிருந்தாரா என்ற கேள்விகள் இருக்கின்றன.
நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்னெடுக்கும் விசாரணைகள் நீதியாகவும் நியாயமாகவும் நடத்தப்பட்டால் அது, மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரணவினது இரகசியங்கள் மட்டுமன்றி, அரச புலனாய்வு அமைப்பின் பல இரகசிய திட்டங்கள் நடவடிக்கைகளும் வெளிச்சத்துக்கு வரும்.
ஆனால், தேசிய பாதுகாப்பு இரகசியம் என்ற போர்வையில் இதனை மறைக்கும் முயற்சிகளும் முன்னெடுக்கப்படலாம்.
எவ்வாறாயினும், இப்போது தொடங் கப்பட் டுள்ள விசாரணைகள், அரச புலனாய் வுச் சேவையின் வலிமையை ஓரளவுக்கே னும் எடுத்துக் காட்டியிருக்கிறது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.
- சத்ரியன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக