ஞாயிறு, 14 ஜூன், 2015

அர­சியலில் விசு­வா­சம் -ஓ. பன்னீர் செல்­வம்

நம்­பிக்கைத் துரோகம், ஏமாற்று, மோசடி என்­பவை இன்­றைய அர­சி­யலில் அடிப்­படை பால­ர்பா­ட­மாகி விட்­டன. நம்­பிக்கை மோச­டியும், ஏமாற்­று­தலும் மனி­த­னோடு பிறந்த இரட்­டைகள் என்று சொல்­லலாம். சரித்­தி­ரத்தின் பக்­கங்­களைப் புரட்­டினால் நம்­பிக்கைத் துரோகம் பற்­றிய சம்­ப­வங்கள் ஏரா­ள­மாகக் குவிந்­து­கி­டக்­கின்­றன.



கைகேயி: அயோத்தி நக­ரமே ராமர் பட்­டா­பி­ஷே­கத்­துக்­காகக் காத்­தி­ருந்­த­போது, கூனியின் சூழ்ச்­சியால் ராமனைக் காட்­டுக்கு அனுப்பித் தன் மகன் பரதன் நாடாள ஏற்­பாடு செய்தாள் கைகேயி. அவள் எண்ணம் போல் பரதன் நாடா­ள­வில்லை. ஆனால், இரா­மா­யணம் என்ற காவி­யத்­துக்கு அவ­ளது சூழ்ச்சி வித்­தா­னது.

புரூட்டஸ்: உல­கத்தின் அழியாப் புகழ் பெற்ற சக்­க­ர­வர்த்­தி­களில் ஒருவர் ஜூலியஸ் சீசர். தாயின் வயிற்றைக் கிழித்து முதலில் பிறந்த மகன் என்­பதால் இன்­றைக்கு அது போன்ற அறுவைச் சிகிச்­சைக்கு சிசே­ரியன் என்று பெயர் வந்­துள்­ளது. தன் வாள் வலி­மையால் கிரேக்கம் தொடங்கி எகிப்து வரை தனது சாம்­ராஜ்­யத்தை விஸ்­த­ரித்து எகிப்து அழகி கிளி­யோ­பாட்­ராவை தன்­வ­ய­மாக்­கி­யவர். சீசரின் வளர்ச்­சியைப் பொறுக்க முடி­யாத செனட்­டர்கள் அவ­ருக்­கெ­தி­ராக ஒன்று திரண்­டனர்.

அவ­ரு­டைய நம்­பிக்­கைக்­கு­ரிய புரூட்­டஸின் மனதைக் கலைத்து, செனட் படி­களில் ஏறிக் கொண்­டி­ருந்த சீசரை கொலை­வெ­றி­யுடன் தாக்­கி­னார்கள். அதிர்ந்த சீசர் திரும்­பும்­போது பின்னால் இருந்த புரூட்டஸ், சீசரின் முதுகில் குத்­தினான். நீயுமா புரூட்டஸ் என்ற வேதனை வார்த்­தை­களை உதிர்த்­த­படி சீசரின் உயிர் பிரிந்­தது. உலகில் கிறிஸ்து பிறப்­ப­தற்கு முன் வர­லாற்றில் பதிவு செய்­யப்­பட்ட முதல் துரோகம் என இதை சொல்­லலாம்.

ஜூதாஸ்: உலகின் தலை­யெ­ழுத்தை மாற்றி எழு­திய ஒருவர் தேவ­கு­மாரன் என்று போற்­றப்­படும் இயேசு. இவரின் முக்­கி­ய­மாக இருந்த 12 சீடர்­களில் ஒரு­வ­ராக இருந்தும் சில வெள்ளிக் காசு­க­ளுக்கு தன்­னு­டைய குரு­வையே யூதர்­க­ளுக்கு காட்டிக் கொடுத்த சீடன் ஜூதாஸின் துரோகம் சிலு­வையில் ரத்­த­மாக வடிந்­தது.

மீர் ஜாபர்: ஹிந்து, முஸ்லிம் ஒற்­று­மையைக் குலைத்துப் பிரித்­தாளும் கொள்­கையை ஆங்­கி­லேயர் வெற்­றி­க­ர­மாக செயல்­ப­டுத்த ஆரம்­பித்த இடம் பிளாசி போராகும். நவாபின் சேனா­தி­பதி மீர் ஜாப­ருக்கு வங்­கா­ளத்தின் ஆட்சி என்ற கனவை விதைத்து 1757இல் பிளாசி போருக்கு அவர் படை­யுடன் வராமல் தடுத்து ஆங்­கி­லேயர் வங்­கா­ளத்தைக் கைப்­பற்றி இந்­தி­யாவில் தங்கள் ஆட்­சியை பல­மாகப் பதித்­தனர்.

நாகம்ம நாயக்கர்: பாண்­டி­யர்­க­ளுக்குள் மது­ரையில் நடந்த சகோ­தர யுத்­தத்­தின்­போது, விஜ­ய­ந­கரப் படை சேனா­தி­பதி நாகம்ம நாயக்கர் தலை­மையில் மதுரை வந்து கல­கத்தை அடக்­கி­யது.

ஒப்­புக்­கொண்­ட­படி பாண்­டி­யர்­க­ளிடம் ஆட்­சியை அளிக்­காமல் தன்­னையே அர­ச­ராக அறி­வித்துக் கொண்டார் நாகம்ம நாயக்கர். இந்தத் துரோ­கத்தை யார் அடக்­கு­வீர்­க­ளென கிருஷ்­ண­தே­வ­ராயர் அர­ச­வையில் கர்­ஜித்­த­போது நாகம்ம நாயக்­கரின் கோபத்­துக்கு பயந்து அனை­வரும் பின் வாங்­கினர்.

நான் சென்று துரோ­கியைக் கைது செய்து வரு­கிறேன் என முழங்­கி­யவர் விஸ்­வ­நாத நாயக்கர். எந்த மக­னுக்­காக ஆட்சி அதி­காரம் விரும்­பி­னாரோ அந்த மகன் விஸ்­வ­நா­த­னி­டமே கைதி­யாகி விஜ­ய­ந­கர அர­ச­வையில் நிறுத்­தப்­பட்டார் நாகம்ம நாயக்கர். என்ன பரிசு வேண்­டு­மென்றார் மன்னர். மன்­னரின் சேவ­க­னாகி தந்­தையைக் கைது செய்த விஸ்­வ­நாதன், மக­னாக தந்­தையின் விடு­த­லையை யாசித்தார். மகிழ்ந்த மன்னன், மது­ரையை ஆளும் உரி­மையை விஸ்­வ­நா­த­னுக்குத் தந்தார். தமிழ்­நாட்டில் தெலுங்கர் ஆட்சி வந்த கதை இது.

பாஸ்­கர ராவ்: எம்.ஜி.ஆரின் வழியில், தெலுங்­கர்­களின் பெரு­மையை மீட்க என்.டி.ராம ராவ் அர­சியல் அவ­தாரம் எடுக்க 1983இல் ஆந்­தி­ரத்தில் ஆட்சி தெலுங்கு தேசம் கட்­சிக்கு கைமா­றி­யது. என்.டி.ஆர். அமைச்­ச­ர­வையில் நிதி அமைச்­ச­ராக இருந்­தவர் பாஸ்­கர ராவ். முதல்வர் என்.டி.ஆர். இதய சிகிச்­சைக்­காக அமெ­ரிக்கா சென்­ற­போது ராவ் கலகக் கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த நம்­பிக்கைத் துரோ­கத்­துக்குப் பரி­சாக ஆந்­தி­ரத்தின் முதல்­வ­ராக அவர் ஆக்கப்பட்டார். வெகுண்­டெ­ழுந்த ராம ராவ் தர்ம யுத்தம் என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மக்­களைத் திரட்டிப் போரா­டி­யதில் 31 நாட்­களில் பத­வியை இழந்தார் பாஸ்­கர ராவ்.

மாஞ்சி: ஜிதன்ராம் மாஞ்சி நம்­பிக்கைத் துரோ­கத்தின் சமீ­பத்­திய வரவு. மக்­க­ளவைத் தேர்­தலில் மோடி அலையில் பிகாரில் தோல்­வியைச் சந்­தித்­தது ஐக்­கிய ஜனதா தளம். உணர்ச்­சி­வ­சப்­பட்ட நிதீஷ் குமார் முதல்வர் பத­வியை இராஜி­னாமா செய்து, தன் கைப்­பா­வை­யாக இருப்பார் என்ற நம்­பிக்­கையில் ஜிதன்ராம் மாஞ்­சியை முதல்­வ­ராக்­கினார்.

தீட்­டிய மரத்தை பதம் பார்ப்­பதும், வளர்த்த கடா மார்பில் பாய்­வதும் அர­சி­யலில் சக­ஜம்­தானே. பாஸ்­கர ராவின் கதையை மறந்த மாஞ்சி தன் கொடியை உயர்த்திப் பிடித்தார். வெகுண்­டெ­ழுந்த நிதீஷ் குமார் கனலில் மாஞ்சி சாம்­ப­லானார். பதவி இழந்தார்.

அதெல்லாம் சரி, இதற்கும் தலைப்­புக்கும் என்ன தொடர்பு என யோசிக்­கி­றீர்­களா? இங்­குதான் பன்­னீர்­செல்வம் தனித்து நிற்­கிறார். பெரி­ய­கு­ளத்தில் பன்­னீர்­செல்வம் ஒரு டீக்­கடை உரி­மை­யா­ள­ரா­கவும், அ.தி.மு.க.வின் உறுப்­பி­ன­ரா­கவும் தனது வாழ்க்­கையை ஆரம்­பித்தார். நக­ராட்சி வார்டு உறுப்­பினர், நகர்­மன்றத் தலைவர், சட்­டப்­பே­ரவை உறுப்­பினர், அமைச்சர் என வாழ்க்­கையில் ஏறு­மு­கம்தான்.

அ.தி.மு.க.வுக்கும், ஜெய­ல­லி­தா­வுக்கும் 2001இல் டான்சி வழக்கில் சோதனை வந்­தது. தேர்­தலில் நிற்க தடைபோட்­டது சட்டம். ஜெய­ல­லிதா தேர்­தலைச் சந்­திக்­கா­த­போதும் அவ­ரது கட்சி ஆட்­சியைப் பிடித்­தது. அமைச்சர் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ராக இருக்க வேண்­டி­ய­தில்லை என்ற அடிப்­ப­டையில் சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ராக இல்­லா­விட்­டாலும் பெரும்­பான்மை அடிப்­ப­டையில் ஜெய­ல­லிதா முதல்வர் உரி­மையைக் கோரினார்.

உச்­ச­நீ­தி­மன்ற முன்னாள் நீதி­ப­தி­யாக இருந்த ஆளுநர் பாத்­திமா பீவி, ஜெய­ல­லி­தா­வுக்குப் பதவிப் பிர­மாணம் செய்து வைத்தார். சட்­டப்­பே­ரவை உறுப்­பி­ன­ரா­கவே தகு­தி­யில்­லாத ஒருவர் முதல்­வ­ராக முடி­யுமா என தி.மு.க. நீதி­மன்­றத்­துக்குப் போனது. நீதி­மன்ற உத்­த­ர­வின்­படி ஜெய­ல­லிதா பத­வியை இழந்தார்.

இந்­திரா காந்­தியின் தேர்தல் செல்­லாது என அலா­காபாத் நீதி­மன்றம் தீர்ப்­ப­ளித்­தது. உட­ன­டி­யாக இந்­திரா காந்தி உச்­ச­நீ­தி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீடு செய்து தீர்ப்­புக்குத் தடை வாங்­கினார். உச்­ச­நீ­தி­மன்ற விடு­முறைக் கால நீதி­ப­தி­யாக இருந்த வி.ஆர். கிருஷ்ண ஐயர், இந்­திரா காந்­திக்கு ஒரு நிபந்­த­னை­யுடன் அலா­காபாத் நீதி­மன்­றத்தின் தீர்ப்­புக்கு இடைக்­காலத் தடை விதித்தார். அதன்­படி, பிர­தமர் என்ற முறையில் அவர் பாராளு­மன்றக் கூட்­டத்தில் கலந்து கொள்­ளலாம், பேசலாம். ஆனால், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் என்ற முறையில் தீர்­மா­னங்­களில் வாக்­க­ளிக்க முடி­யாது. ஊதியம் பெற முடி­யாது. அப்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இல்­லாத நபர் பிர­த­ம­ராக இருக்க முடி­யுமா என ஒரு­வரும் கேள்வி எழுப்­ப­வில்லை. இந்­திரா காந்தி பிர­தமர் பத­வியை வேறு யாருக்கும் வழங்­க­வில்லை.

அந்தக் கால­கட்­டத்தில் மக்கள் தொகை நிபு­ண­ரான டாக்டர் சந்­தி­ர­சேகர் மாநி­லங்­க­ளவை உறுப்­பினர் பதவி முடிந்த பின்பும் கூட 6 மாத காலத்­துக்கு அமைச்­ச­ராக நீடித்தார்.

ஜெய­ல­லி­தாவின் அர­சியல் எதி­ரிகள் கூட அவ­ரது தைரி­யத்தைப் பாராட்டத் தவ­று­வ­தில்லை. சட்­டப்­பே­ர­வையில் பெரும்­பான்மை இருந்தும், பத­வி­யி­ழந்த ஜெய­ல­லிதா கலங்­க­வில்லை. தனக்குப் பதி­லாக சட்­டப்­பே­ரவைக் கட்சித் தலை­வ­ராக ஒரு­வரைத் தேர்ந்­தெ­டுக்க வேண்­டு­மென்ற நிலை ஏற்­பட்­ட­போது அவர் தேர்ந்­தெ­டுத்த நபர் ஓ.பன்­னீர்­செல்வம்.

அமைச்சர் பன்­னீர்­செல்வம், முதல்வர் பன்­னீர்­செல்­வ­மாக மாறினார். பின்­னாளில் டான்சி வழக்கில் நிலத்தை அர­சுக்கு ஜெய­ல­லிதா திரும்பக் கொடுத்­து­விட்டால் அவரை விடு­தலை செய்­கிறோம் என உச்­ச­நீ­தி­மன்றம் சொல்ல, சொத்தை இழந்து மீண்டும் முதல்வர் ஆனார்

ஜெய­ல­லிதா. மறு பேச்­சில்­லாமல் பதவி வில­கினார் ஓ.பன்­னீர்­செல்வம்.

வர­லாற்றைப் பற்றி அடிக்­கடி சொல்­லப்­படும் ஒரு வாசகம் வர­லாறு திரும்பும்.  ஜெய­ல­லி­தாவின் வாழ்க்­கையில் வர­லாறு திரும்­பி­யது. நீதி­பதி குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெய­ல­லிதா சட்­டப்­பே­ரவை உறுப்­பினர் பத­வியை மட்டும் இழக்­க­வில்லை, முதல்வர் பத­வி­யையும் சேர்த்து இழந்தார். தமி­ழக முதல்­வ­ராக இரண்டாம் முறை பத­வி­யேற்றார் ஓ.பன்­னீர்­செல்வம்.

பத­வி­யேற்ற முதல்வர் பன்­னீர்­செல்வம் முதல்வர் அறைக்குப் போக­வில்லை, முதல்வர் நாற்­கா­லியில் உட்­கா­ர­வில்லை. வன­வாசம் போன ராமனின் பாது­கையை வைத்து அர­சாண்ட பர­தனைப் போல் அம்­மாவின் பெயரில் ஆட்சி நடத்­தினார். அடக்கி வாசித்தார்.

பந்தா இல்­லாத ஆட்சி, பேனர் இல்­லாத ஆட்சி. ஆட்சி எப்­படி நடந்­தது என்­பது பிரச்சி­னை­யில்லை. ஆட்சி நடந்­தது என்­ப­துதான் நிஜம். சட்­டப்­பே­ரவை இரு­முறை கூடி­யது. முதல்­வ­ராக இருந்த பன்­னீர்­செல்­வத்தைப் பதற வைத்த ரத்­தத்தின் ரத்­தங்கள் இருந்­தனர். ஆனால், பன்­னீர்­செல்வம் தனது தலை­மையைப் பதற வைக்­க­வில்லை என்­பது நிஜம்.

வந்­தது நீதி­ய­ரசர் குமா­ர­சா­மியின் தீர்ப்பு, காட்சி மாறி­யது. ஆட்சி மாறி­யது. மீண்டும் முதல்வர் ஆனார் ஜெய­ல­லிதா. பத­வி­யேற்­கும்­போது அழு­து­கொண்டே பத­வி­யேற்ற முதல்­வரும், சிரித்துக் கொண்டே பதவி வில­கிய முதல்­வரும் பன்­னீர்­செல்­வம்தான் என்று படத்­துடன் கட்­செவி அஞ்­சலில் செய்தி வந்து விழுந்தது.

அர­சி­யலில் விசு­வாசம் மட்­டுமே அள­வு­கோ­லாக ஆகி­விட்­டது. அதில் உச்­சத்தைத் தொட்­டவர் பன்­னீர்­செல்வம். பன்­னீர்­செல்­வத்தைப் பற்றி கருத்து சொல்ல ஜெய­ல­லிதா தவிர யாருக்கு அதி­காரம் உண்டு? டான்சி வழக்­குக்குப் பிறகு பத­வி­யேற்ற ஜெய­ல­லிதா அ.தி.மு.க. கூட்­டத்தில் சொன்னார்: பன்­னீர்­செல்­வத்தைப் போன்ற தொண்­டரை நான் பெற்­றது என் பாக்­கியம் என்று. அது தமிழ்­நாட்டின் பாக்­கி­யமா என்­பது அவரவர் பார்வையைப் பொருத்தது.

துரோ­கத்­துக்குப் பல நபர்­களைப் பட்­டி­ய­லி­டலாம். ஆனால், அர­சி­யலில் விசு­வாசம் என்­ப­தற்குப் பட்­டி­ய­லிட்டால் முதல் பெயர் பன்­னீர்­செல்­வ­மா­கத்தான் இருக்கும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல