ஞாயிறு, 7 ஜூன், 2015

லிபியாவிலும் கால் வைத்துள்ள ஐ.எஸ்.அமைப்பு

 image source: google
ஈராக்­கிலும் லிபி­யா­விலும் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­றி­யுள்ள ஐ.எஸ். அமைப்­பினர் தற்­போது லிபி­யாவில் பெரு நிலப்­ப­ரப்பைக் கைப்­பற்­று­வதில் அதிக அக்­கறை காட்­டு­கின்­றனர். இந்த அக்­க­றைக்கு மூன்று கார­ணங்கள் உண்டு.

முத­லா­வது முஅம்மர் காடாஃ­பியின் கொலைக்குப் பின்னர் பல கூறு­க­ளாகப் பிள­வு­பட்­டி­ருக்கும் லிபி­யாவை கைப்­பற்­று­வது இலகு.



இரண்­டா­வது லிபி­யாவின் எரி­பொருள் வளம். மூன்­றா­வது லிபி­யாவைக் கைப்­பற்­றினால் ஐ.எஸ். அமைப்­பி­னரால் இல­கு­வாகத் தமது போரா­ளி­களை ஐரோப்­பா­விற்கு நகர்த்த முடியும்.

கடாஃ­பியின் கோட்­டையில் ஐ.எஸ்.

முன்னாள் அதிபர் முஅம்மர் கடாஃ­பி யின் கோட்­டை­யாகக் கரு­தப்­பட்ட சேர்ட் நகரின் விமான நிலை­யத்தை ஐ.எஸ். என அழைக்­கப்­படும் இஸ்­லா­மிய அரசு அமைப்­பினர் மே மாதம் 29ஆம் திகதி வெள்ளிக் கிழமை கைப்­பற்­றினர்.

தலை­நகர் திரிப்­போ­லியில் ஆட்­சி­யி­லி­ருக்கும் பன்­னாட்டு சமூ­கத்தால் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத மொஹமட் அல் ஷமியின் ஃபஜிர் லிபியாப் படை­யினர் ஐ.எஸ். படை­யி­னரின் தக்­கு­த­லுக்கு ஈடுகொடுக்க முடி­யா மல் ஓடினர்.

திரிப்­போ­லியில் இருந்து 450 கிலோ மீற்றர் (280 மைல்கள்) தொலைவில் உள்ள சேர்ட் விமான நிலை­யத்­துடன் ஒரு ஃபஜிர் லிபியப் படை­யினர் முகாமும் இருந்­தது. படை­யினர் விமான நிலை­யத்­தி­லி­ருந்து எல்லா உப­க­ர­ணங்­க­ளையும் தம்­முடன் கொண்டு சென்று விட்­டனர்.

பாவ­னைக்கு உத­வாத ஒரு விமா­னத்தை மட்டும் விட்­டு­விட்டுச் சென்­றனர். சேர்ட் நகரைக் கைப்­பற்­றிய ஐ.எஸ். அமைப்­பி னர், லிபி­யாவின் கேந்­திர முக்­கி­யத்­துவம் வாய்ந்த மிசு­ரட்டா நகரின் மீது தமது தாக்­கு­தலைத் தீவி­ரப்­ப­டுத்­தினர்.

லிபிய விடிவும் பெருமை நட­வ­டிக்­கையும்

கேர்ணல் முஅம்மர் கடாஃபி கொலை செய்யப் பட்ட பின்னர் லிபி­யாவில் உள்ள இனக் குழு­மங்­க­ளி­டையே மோதல்கள் தீவி­ர­மா­கின. தற்­போது இரு பிரி­வினர் லிபி­யாவின் எண்ணெய் வளங்­க­ளையும் மற்றும் கேந்­திர முக்­கி­யத்­துவம் மிக்க இடங்­க­ளையும் கைப்­பற்­று­வதில் போட்டி போடு­கின்­றனர்.

ஒரு பிரி­வினர் திரிப்­போ­லி­யி­லி­ருந்து ஓர் அர­சையும் மற்­றப்­ பி­ரி­வினர், டொப்ரக் நகரில் இருந்து ஓர் அர­சையும் நடத்­து­கின்­றனர். திரிப்­போ­லியில் இருப்­ப­வர்கள் தம்மை "லிபிய விடிவு" என அழைக்­கின்­றனர்.

இவர்­களின் படையே ஃபஜிர் லிபியாப் படை. டொப்­ராக்கில் இருப்­ப­வர்கள் தம்மை "பெருமை நட­வ­டிக்கை" என அழைக்­கின் ­றனர். லிபிய விடி­வினர் பெருமை நட­வ ­டிக்­கை­யி­னரை கடாஃபி ஆத­ர­வா­ளர்கள் என்றும், பெருமை நட­வ­டிக்­கை­யினர் லிபிய விடி­வி­னரை இஸ்­லா­மியப் பயங்கர­வா­திகள் என்றும் அழைக்­கின்­றனர்.

கடாஃ­பியின் வீழ்ச்­சிக்குப் பின்னர் தெரிவு செய்யப் பட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் இப்­போது நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்­ளனர்.

மீண்டும் கடாஃபி ஆத­ர­வா­ளர்கள்

டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நட­வ­டிக்கை" அர­சினர் முஅம்மர் கடாஃ­பியின் ஆட்­சியில் உயர் பத­வி­களில் இருந்­த­வர்­களை மீண்டும் பத­வியில் அமர்­வ­தற்­கான தடை­களை நீக்க வேண்டும் என்ற கொள்கை உடை­ய­வர்கள் எனக் குற்றம் சாட்­டப்­ப­டு­கின்­றது.

திரிப்­போ­லியில் இருக்கும் அரசு இஸ்­லா­மிய சகோ­த­ரத்­துவ அமைப்­பிற்குச் சார்­பா­னது. இந்த அர­சுக்கு துருக்­கியும் கட்­டாரும் ஆத­ரவு வழங்­கு­கின்­றன.

சவூதி அரே­பியா, ஐக்­கிய அமீ­ரகம், எகிப்து ஆகிய நாடுகள் டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நட­வ­டிக்கை" அர­சுக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றன. சிரி­யாவின் அதிபர் பஷார் அல் அசாத்தைப் பத­வி­யி­லி­ருந்து அகற்ற வேண்டும் என்­பதில் துருக்­கியும் சவூதி அரே­பி­யாவும் ஒரே கருத்தைக் கொண்­டி­ருக்­கின்ற போதிலும், துருக்­கியும் கட்­டாரும் சிரி­யாவில் அல் அசாத்­திற்குப் பின்னர் யார் அர­சாள வேண்டும் என்­பதில் சவூதி அரே­பி­யாவின் கொள்­கை­யுடன் முரண்­ப­டு­கின்­றன.

லிபிய அரபு வசந்­தத்தின் போது கிளர்ந்து எழுந்த இளை­ஞர்கள் இப்­போது யாருக்­கு ஆதரவாகப் போரா­டு­கிறோம், யாருக்கு எதிராகப் போரா­டு­கின்றோம் என்­பது தொடர்­பாகக் குழப்ப நிலையில் உள்­ளனர். முன்னாள் லிபிய அதிபர் கடாஃ­பியின் படை­யினர் அவ­ரது மறை­விற்குப் பின்னர் லிபி­யா­விலும் எகிப்து போன்ற அயல் நாடு­க­ளிலும் பதுங்­கி­யி­ருந்­தனர். அவர்கள் இப்­போது ஐ.எஸ். அமைப்­பி­ன­ருடன் இணைந்து போரா­டு­கின்­றனர்.

சேர்ட் நகர் இப்­போது கடாஃ­பியின் ஆட்­களின் கட்­டுப்­பாட்டில் உள்­ளது என மிஸ்ராட் நக­ர­வா­சிகள் நம்­பு­கின்­றனர்.

மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை பிரிகேட் -166 இன் படை­யினர் சேர்ட் நகரத்தின் மேற்குப் புற­மாக உள்ள ஐ.எஸ். நிலைகள் மீது தாக்­குதல் நடத்தினர். ஞாயிறு காலை­வரை சண்டை தொடர்ந்­தது. ஐ.எஸ். போரா­ளிகள்கார் வெடிகுண்டு மூலம் தற்­கொலைத்தாக்­குதல் நடத்­தினர்.

பலப்­பல இனக் குழு­மங்கள் கொண்ட லிபியா

லிபியா ஆறரை மில்­லியன் மக்­களைக் கொண்­டது. இதில் ஒன்­றரை மில்­லியன் பேர் வெளி­நாட்­டி­லி­ருந்து வந்து குடி­யே­றி­ய­வர்கள். லிபி­யாவில் 140 இனக் குழு­மங்கள் இருக்­கின்­றன.

இந்த இனக் குழு­மங்­களின் அடை­யா­ளங்கள் லிபிய மக்­களின் கலா­சார அடை­யா­ளத்தின் முக்­கிய அம்­ச­மாகும். இனக்­கு­ழு­மங்­களின் பெயர்­க­ளையே தமது குடும்பப் பெயர்­க­ளாக லிபிய மக்கள் கொண்­டுள்­ளனர். மேற்கு லிபி­யாவில் ஒரு மில்­லியன் பேரைக் கொண்ட வார்ஃ­பல்லா என்ற இனக்­கு­ழுமம் முக்­கி­ய­மா­னது. இந்த இனக் குழு­மத்தில் 52 உட்­பி­ரி­வுகள் இருக்­கின்­றன.

மத்­திய லிபி­யாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்­கி­ய­மா­னது. முஅம்மர் கடாஃபி இந்த இனக் குழு­மத்தைச் சேர்ந்­தவர். இந்த இனக் குழு­மத்தின் கையில் லிபியா இருந்­தது என்று சொல்­லலாம். அல் மாஹார்கா என்ற இன்­னொரு இனக் குழுமம் மத்­திய லிபி­யாவில் உள்­ளது. இது கடாஃபி இனக் குழு­மத்­துக்கு நெருக்­க­மா­னது.

கிழக்கு லிபி­யாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்­ரத்தா, அல்வாஹீர் ஆகிய இனக்குழு­மங்கள் முக்­கி­ய­மா­னவை. கடாஃபி யின் மனைவி வார்ஃல்லா என்னும் இனக்­கு­ழு­மத்தைச் சேர்ந்­தவர். இதுதான் லிபி­யாவின் மிகப்­பெ­ரிய இனக்­கு­ழுமம். இதற்கு 54 உட்­பி­ரி­வுகள் இருக்­கின்­றன.

கடாஃ­பிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி

கடாஃ­பிக்குப் பின்­ன­ரான ஆட்சிப் போட்­டியில் மேற்கு நாடு­க­ளுக்கு ஆத­ர­வா­ன­வர்­களும் இஸ்­­லா­மிய மத­வா­தி­களும் கடு­மை­யாக முரண்­பட்­டனர். ஈரான், மத­வா­தி­க­ளிற்கு உத­வி­யது. ஈரானின் நீண்­ட­காலக் கனவில் முக்­கி­ய­மா­னது லிபியா, எகிப்து ஆகிய நாடு­களை தனது ஆதிக்­கத்தில் கீழ் கொண்­டு­வ­ரு­வதே. சவூதி அரே­பி­யாவின் சில பிர­தே­சங்­களை கைப்­பற்றி தனது பொரு­ளா­தார வலி­மை­யையும் மேம்­ப­டுத்த ஈரான் திட்­ட­மிட்­டுள்­ளது.

ஈரான், ஹிஸ்­புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்­லா­மிய விடு­தலைப் போராளி அமைப்­புக்­க­ளுடன் நெருங்­கிய தொடர் பைப் பேணி­வ­ரு­கி­றது. அவர்­க­ளுக்­கான நிதி மற்றும் படைக்­க­லன்கள் உத­வி­களை வழங்கி வரு­கி­றது. இவை இரண்டும் ஷியா முஸ்­லிம்­களின் அமைப்­பாகும்.

ஆனால், அல்­கைதா ஒரு ஸுன்னி முஸ்­லிம்­களின் அமைப்­பாகும். அல்­கை­தா­விற் கும் ஈரா­னுக்கும் பகைமை எனக் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் அல்­கை­தா­விற்குத் தேவை­யான நிதி கட்­டா­ரி­லி­ருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரா­னு­டா­கவே வரு­கிறது. இதற்­காக அல்­கைதா ஈரானில் எந்தவித தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களும் எடுப்­ப­தில்லை என்ற உடன்­பாடு இருக்­கி­றது. ஈரா­னுக்கும் அல்கைதா­விற்கும் பொது­வான எதிரி அமெ­ரிக்கா.

இரண்டும் இணைந்து செயற்­ப­டு­வ­தற்­கான ஆதா­ரங்கள் தற்­போது சிறிது சிறி­தாக வெளி­வ­ரு­கின்­றன. ஈரான் இப்­போது எகிப்தில் தனது கைவ­ரி­சையைக் காட்டத் தொடங்­கி­விட்­டது. மொஹமட் முர்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு ஈரான் உத­வு­வ­தாக நம்­பப்­ப­டு­கி­றது. அத்­துடன் அல்­கை­தாவும் எகிப்தில் ஊடு­ருவி உள்­ளது. லிபி­யா­விலும் இதே நிலை­மைதான். ஈரானும் அல்கை­தாவும் அங்கு தங்கள் கைவ­ரி­சை­களைக் காட்டி வரு­கின்­றன.

சிரி­யாவில் அல்­கை­தாவும் ஈரானும் எதிர் எதிர் அணி­களில் நின்று மோது­வது உண்­மைதான். ஈரான் – லிபியா, எகிப்து, எதி­யோப்­பியா ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்­டுப்­பாட்­டின்கீழ் இருக்கவேண் டும் எனத் திட்­ட­மிட்டுச் செயற்­ப­டு­கி­றது. ஈரானில் பயிற்சி பெற்ற அல்­கை­தா­வி­னரே எகிப்தில் ஊடு­ருவியிருப்­ப­தாக எகிப்­தியக் காவற்­றுறை கண்­ட­றிந்­துள்­ளது.

2011ஆம் ஆண்டு செப்­டம்பர் மாதம் நைஜீ­ரி­யாவில் ஈரானில் தயா­ரான படைக்­க­லன்­களை அல்­கை­தா­வினர் கடத்திச் செல்­வது கண்டு பிடிக்­கப்­பட்­டது. யேம­னிலும் ஈரானில் தயா­ரிக்­கப்­பட்ட ஏவு­கணைச் செலுத்­தி­களை அல்­கைதா பாவிப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது. இவை யாவும் ஈரா­னிற்கும் அல்­கை­தா­விற்கும் இடையில் இருக்கும் ஒத்­து­ழைப்பை உறுதி செய்­கின்­றன.

பிராந்­திய முரண்­பாடு

லிபி­யாவின் கிழக்குப் பிராந்­தி­யத்தில் உள்ள சைரெ­னைக்கா (Cyrenaica), லிபி­யா வில் இருந்து தன்­னாட்சி பெற முயல்­கின்­றது. லிபி­யாவின் உயர்­தர எண்ணெய் வளத்தில் எண்­பது விழுக்­காடு சைரெ­னைக்கா வில் இருந்து கிடைக்­கின்­றது.

லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்­கினர் தலை­நகர் திரிப்­போ­லி­யிலும் ஃபெசான் மாகா­ணத்­திலும் வசிக்­கின்­றனர். சைரெ­னைக்கா தனி­நா­டாகப் பிரிந்தால் அங்­கி­ருக்கும் உல­கி­லேயே ஐந்­தா­வது பெரிய எண்ணெய் வளம், அதை உலகில் உள்ள மிகவும் செல்­வந்த நாடு­க ளில் ஒன்­றாக ஆக்­கி­வி­டு­வ­துடன், எஞ்­சிய லிபி­யாவை உல­கி­லேயே வறிய நாடாக மாற்­றி­விடும்.

சைரெ­னைக்கா தனக்­கென ஒரு மத்திய வங்­கி­யையும் உரு­வாக்கி உலக நாடுகள் தம்மை அங்­கீ­க­ரிக்கும்படி பரப்­புரை செய்ய ஒரு கன­டிய நிறு­வ­னத்தின் சேவை­யையும் பெற்­றுள்­ளது. சைரெ­னைக்கா எண்­ணெயை ஏற்­று­மதி செய்­வதைத் தடுக்க லிபிய அரசு சைரெ­னைக்­காவின் மீது ஒரு கடல் முற்­று­கையைச் செய்­துள்­ளது.

கடாஃ­பியின் மகன்கள்

கடாஃ­பியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின் னர் கைது செய்­யப்­பட்ட அவ­ரது 40 வய­தான கால்­பந்­தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசா­ர­ணையின் போது அவர்­களை நீதி­மன்­றத்தில் முன்­னிலைப்படுத்­தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதிக டாஃபி உட்பட 39 பேர் முஅம்மர் கடாஃபி யின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந் தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

முஅம்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார் கள் என்பது, புதிய அரசு எப்படி மக்களா ட்சி முறைமையை மதித்து நடக்கும் என்ப தற்கான அளவுகோலாகக் கருதப்படுகின் றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங் கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.

லிபியாவின் படைத்துறைக் காவல் அதி பரும் (head of Libya's military police) சட்டத் துறை தலைமை வழக்குத் தொடுநரும் இந்திய மருத்துவர் ஒருவரும் இப்படிப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்படுகின் றார்கள். கடாஃபிக்குப் பிந்திய லிபியாவில் எவரும் பாதுகாப்பாக இல்லை.

வேல் தர்மா

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல