ஞாயிறு, 7 ஜூன், 2015

தமிழ்ச் சமூகம் விழித்துக் கொள்ளுமா?

புங்­கு­டு­தீவில் வித்­தியா என்ற மாணவி கூட்டு வன்­பு­ணர்­வுக்குப் பலி­யாக்­கப்­பட்ட கோரம், தமிழ்ச் சமூ­கத்தில், பல்­வேறு தாக்­கங்கள்- – விளை­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

இந்தச் சம்­ப­வத்தின் விளை­வாக, மக்­க­ளி­டையே எழுந்த கோபம், ஆற்­றாமை, போராட்டம் போன்­ற­வற்றைப் பற்­றியே இது­வரை வெளிப்­ப­டை­யாகப் பேசப்­பட்டு வரு­கி­றது. ஆனால், இன்­னொரு பக்­கத்தில் இந்தக் கோர நிகழ்வின் விளை­வாக, புங்­கு­டு­தீவில் இருந்து பல குடும்­பங்கள் வெளி­யேறும் நிலை ஒன்று உரு­வா­கி­யுள்­ள­தாக அறி­ய­மு­டி­கி­றது. ஆயு­த­மோ­தல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமூ­கத்­துக்கு இடம்­பெ­யர்வு ஒன்றும் புதிய அனு­ப­வ­மாக இருக்­க­வில்லை.



ஒரு காலத்தில் தாம் பத்து, பதி­னைந்து இடங்­க­ளுக்கு இடம்­பெ­யர்ந்து சென்­ற­தாகப் - பேசிக்­கொள்ளும் வழக்­கமும் இருந்­தது.

பல­ருக்குத் தாம் எங்­கெங்கு இருந்தோம் என்­பது கூட நினை­வில்­லா­த­ள­வுக்கு, இடப்­பெ­யர்வு அவ­லங்­களைச் சந்­திக்க நேரிட்­டது.

தாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக வாழ்ந்த இடத்தை- வீட்டை விட்டு வெளி­யேற்­றப்­படும் போது அல்­லது வெளி­யேற வேண்­டிய நிலை ஏற்­படும் போது, ஏற்­படும் வலி, அதை அனு­ப­வித்த தமிழ்­மக்­க­ளுக்கே தெளி­வாகத் தெரியும்.

ஆனால், ஆயு­த­மோதல், 2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த பின்னர், மீள்­ குடி­யேற்றம் பெரும்­பாலும் முடிந்து விட்­ட­தா­கவே அர­சாங்­கத்­தினால் கூறப்­படும் நிலையில், புங்­கு­டு­தீவை விட்டு சில குடும்­பங்கள் இடம்­பெ­யர்ந்து ஓடும் அவலம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

அச்சம், பழி­வாங்கல் பற்­றிய பீதி, பாது­காப்­பற்ற உணர்வு என்­ப­னவே இத்­த­கைய இடம்­பெ­யர்­வுக்கு கார­ண­மா­கி­யி­ருக்­கி­றது.

ஒரு சம்­ப­வத்தின் பாதிப்பு எந்­த­ள­வுக்கு சமூ­கத்தில் மாற்­றத்தை- தாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது என்­ப­தற்கு இந்த இடப்­பெ­யர்வு ஒரு சிறிய உதா­ரணம். சமூ­கத்­துக்கு விரோ­த­மான - நீதிக்கு முர­ணான ஒரு செயலின் பாதிப்பை ஒரு சமூகம் எவ்­வாறு அனு­ப­விக்க நேரி­டு­கி­றது என்­ப­தற்கு இந்தச் சம்­பவம் ஒரு அத்­தாட்­சி­யாக அமைந்­தி­ருக்­கி­றது.

வித்­தியா என்ற மாண­விக்கு நேர்ந்த கொடூரம் தனியே அந்தக் குடும்­பத்தை மட் டும் துரத்­த­வில்லை- அவர்­களைச் சுற்றி­யுள்ள, சூழ­வுள்ள மக்­க­ளையும் துரத்திக் கொண்­டி­ருக்­கி­றது. ஆயுத மோத­லுக்குப் பின்னர், தறி­கெட்ட ஒரு சமூ­க­மாக தமிழ்ச் சமூகம் மாறி­ய­மைக்கு அல்­லது மாற்­றப்­பட்­ட­மையே, இந்த சமூக அவ­லத்­துக்­கான கார­ண­மாகக் கூறப்­ப­டு­கி­றது.

ஆயு­த­மோதல் தமிழ்ச் சமூ­கத்­துக்கு பல வழி­களை அடைத்து விட்ட அதே­வேளை, சில தேவை­யற்ற வழி­களைத் திறந்தும் விட்­டது. அந்த தேவை­யற்ற வழி­களின் ஊடாக நுழைந்த அல்­லது நுழைக்­கப்­பட்ட விட­யங்கள் தான் இன்­றைய நிலை­மைக்கு கார­ண­மாகக் கூறப்­ப­டு­கி­றது. தமிழ்ச் சமூ­கத்தை வலு­வற்ற சமூ­க­மாக்க வேண்டும் என்று திட்­ட­மிட்டே, போதைப்­பொருள் பழக்­கத்­துக்கு தமிழ் இளை­ஞர்கள் அடி­மை­யாக்­கப்­பட்­ட­தாக அண்­மையில் முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வ­ரனும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

தமிழ்ச் சமூ­கத்தைப் பல­வீ­னப்­ப­டுத்தும் நோக்கில், வெளியிலிருந்து நுழைக்­கப்­பட்ட இந்தக் கார­ணிகள் மட்டும், இன்­றைய நிலை­மைக்குக் காரணம் அல்ல. தமிழ்ச் சமூ­கத்­துக்­குள்­ளேயும் இதற்குச் சாத­க­மாக இருந்த பல கார­ணங்­களும் துணை­போ­யி­ருக்­கின்­றன. ஆயு­த­மோதல் ஒன்­றுக்குப் பின்னர், எந்­த­வொரு சமூ­கத்­திலும், குற்­றச்­செ­யல்­களும், குரூ­ரத்­த­னங்­களும் அதி­க­ரிப்­பது வழமையே.

அது சர்­வ­தேச அளவில் செய்­யப்­பட்ட ஆய்­வு­களின் முடிவு. ஆயு­த­மோ­தல்­களின் போது ஏற்­பட்ட மன வடுக்­களும், ஆற்­றா­மை­களும், கோபங்­களும், அடக்கி வைக்­கப்­பட்ட உணர்ச்­சி­களும், ஆயுத மோதலின் பின்னர் வெடித்துக் கிளம்­பு­வது வழமை.

அதுவும், தமிழ்ச் சமூ­கத்தின் ஆயுதப் போராட்டம், அவ­லங்­க­ளையும் பின்­ன­டை­வு­க­ளையும் கொண்ட ஒன்­றாக முடி­வுற்ற சூழலில், ஆயு­த­மோ­த­லுக்குப் பிந்­திய சமூகத் தாக்­கங்கள் அதி­க­மா­கவே இருக்கும் என்று உண­ரப்­பட்­டது.

2009இல் போர் முடி­வுக்கு வந்த பின்னர், இத்­த­கைய தாக்­கங்கள் குறித்து எதிர்வு கூறப்­பட்ட போதிலும், அவற்றைக் கவ­னத்தில் எடுத்துச் செயற்­ப­டு­கின்ற சூழல் தமிழ்ச் சமூ­கத்­துக்கோ, சமூ­கத்தை வழி நடத்­தி­ய­வர்­க­ளுக்கோ அல்­லது துறைசார் வல்­லு­னர்­க­ளுக்கோ ஏற்­பட்­டி­ருக்­க­வில்லை. மீள்­கு­டி­ய­மர்வு, சிறைக் கைதி­களின் விடு­தலை, காணா­மற்­போ­ன­வர்­களைக் கண்­டு­ பி­டித்தல் போன்­ற­வற்றில் தான் கவனம் செலுத்­தப்­பட்­டதே தவிர, ஆயுத மோத­லுக்குப் பிந்­திய சமூ­கத்தை வழி­ந­டத்தும் பொறுப்பு சரி­யாக கையா­ளப்­ப­ட­வில்லை.

மேற்­படி விட­யங்­களும் முக்­கி­ய­மா­ன­வையே என்­றாலும், சமூக ஒழுக்­கத்தை வழிப்­ப­டுத்­துதல் மிக முக்­கி­ய­மா­ன­தாக இருந்­தது. ஆயுத மோத­லுக்குப் பின்னர், சமூகக் கட்­ட­மைப்பை, குடும்­பங்­களின் கட்­ட­மைப்பை முறை­யாகப் பேணத் தவ­றி­யதும், இளம் சமூ­கத்தை, வெளி­நாட்டுச் சந்­தைக்கு அனுப்­பு­கின்­ற­வர்­க­ளாக வளர்த்து விட்­டதும், கல்வி, ஒழுக்­கத்தின் மீது கவனம் செலுத்தத் தவ­றி­யதும், இத்­த­கைய மோச­மான நிலைக்கு வழி­கோ­லி­யது.

வேலை­யின்மை உள்­ளிட்ட சமூக கார­ணிகள் சமூக கட்­ட­மைப்மைப் பெயர்த்­து­விடக் கூடி­யவை. பல்­க­லைக்­க­ழக கல்­வியை முடித்­த­வர்கள் அனை­வ­ருக்கும் அர­சாங்க வேலை தரப்­பட வேண்டும் என்று உரி­மை­யோடு போராட்டம் நடத்­து­கின்ற அள­வுக்கு, தமிழ்ச் சமூ­கத்தில் முட்­டாள்த்­தனம் ஆழ வேரோ­டி­யி­ருக்­கி­றது.

இத்­த­கைய போராட்­டங்கள் யாழ்ப்­பாண சமூ­கத்தில் காலம் கால­மாக நடந்து வரும் ஒன்­றாக மாறி­யி­ருக்­கி­றது. பல்­க­லைக்­க­ழ­கத்தை ஒரு கல்விக் கூட­மாக பார்க்­கின்ற – அறி­வுசார் சமூ­க­மாக தமிழ்ச் சமூகம் இருக்­க­வில்லை என்­ப­தையே இது காட்­டு­கி­றது.

அரச வேலைக்­கான வேலை­யாட்­களை பயிற்­று­விக்கும் பட்­ட­றை­யா­கவே அதைப் பார்ப்­பதால் தான், ஆயி­ரக்­க­ணக்­கான இளை­ஞர்கள், அரச வேலை கிடைக்கும் வரை ஆண்­டுக்­க­ணக்­காக வீதியில் காத்­தி­ருக்­கின்­றனர். அலை­கின்­றனர்.

பல்­க­லைக்­க­ழ­கத்தில் இருந்து வெளி­யே­று­ப­வர்கள் அனை­வ­ருக்கும் அரச வேலை தரப்­பட வேண்டும் என்ற விசித்­தி­ர­மான போராட்­டங்கள் இலங்­கையைத் தவிர உலகில் வேறெங்கும் நடப்­ப­தாகத் தெரி­ய­வில்லை. தமிழ்­நாட்டைப் பொறுத்­த­வ­ரையில், 546 பொறி­யியல் கல்­லூ­ரி­களில் இருந்து ஆண்­டுக்கு ஒன்­றரை இலட்சம் வரை­யான பொறி­யி­ய­லா­ளர்கள் வெளி­வ­ரு­கின்­றனர்.

அவ்­வ­ளவு பேரும் அரச வேலையை எதிர்­பார்த்தால், தமிழ்­நாட்டின் கதி என்­ன­வாகும்? இளம் சமூகம் அரசின் கையை எதிர்­பார்க்­காத ஒன்­றாக மாறி­யி­ருப்­பதால் தான், அங்கு தொழில்கள், புதிய தொழில் முயற்­சிகள் வளர்ச்சி கண்­டுள்­ளன.

ஆயு­த­மோ­த­லுக்குப் பின்னர் வேலை­யின்மை என்­பது முக்­கிய பிரச்­சி­னை­யா­கவே இருந்­தாலும், மாற்று வேலையை செய்யத் தயா­ராக இல்­லாமல் வளர்க்­கப்­பட்ட இளம் சமூகம், நீண்ட காத்­தி­ருப்­புக்கு உள்­ளாக நேரிட்­டுள்­ளது. படிப்­புக்கும் வேலைக்கும் இடையில் கிடைக்­கின்ற கால இடை­வெளி அவர்­களை இல­குவில் தவ­றான வழியில் கொண்டு செல்­கி­றது.

படிப்பு முடிந்­ததும் வேலைக்குச் செல்லும் இளை­ஞர்­க­ளுக்கு தவ­றான வழியில் செல்­வ­தற்கோ அல்­லது வேறு நபர்­களால் தவ­றாக வழி­ந­டத்திச் செல்­லப்­ப­டு­வ­தற்கோ நேரம் கிடைக்­காது. ஆயுத மோத­லுக்குப் பின்னர், வடக்கு மாகா­ணத்தில் பாட­சா­லை­களில் மாண­வர்­களின் எண்­ணிக்கை குறைந்து வரு­வ­தாக புள்­ளி­வி­ப­ரங்­களில் இருந்து அறிய முடி­கி­றது.

அத்­துடன் மாண­வர்கள் பாட­சா­லை­யி­லி­ருந்து இடை­வி­ல­கு­வதும் அதி­க­ரித்­துள்­ளது.

கிளி­நொச்சி மாவட்­டத்தில் மட்டும், பாட­சா­லையை விட்டு வில­கிய 186 மாண­வர்கள் இருப்­ப­தாக கடந்த ஏப்ரல் மாதம் வெளி­யான அறிக்கை ஒன்றில் கூறப்­பட்­டி­ருந்­தது.

ஓமந்­தையில் 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்­த­வாரம் வீட்டில் சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார். பாட­சாலை செல்ல வேண்­டிய வயதில் அந்தச் சிறுமி, வீட்டில் இருந்து சமையல் உள்­ளிட்ட வேலை­களை செய்­தி­ருப்­ப­தாகத் தகவல்.

அந்தச் சிறுமி பாட­சா­லைக்குச் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தால், அந்தச் சம்­பவம் தடுக்­கப்­பட்­டி­ருக்­கலாம். பரந்தன் பகு­தியில் இரு வாரங்­க­ளுக்கு முன்னர், 7 வயதுச் சிறு­மியை துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாக கைது செய்­யப்­பட்ட 16 வயதுச் சிறுவன், பாட­சா­லையை விட்டு இடை­வி­ல­கிய ஒருவர் என்று தெரி­ய­வந்­தி­ருக்­கி­றது.

அந்தச் சிறுவன் பாட­சா­லையை விட்டு இடை­வி­லகும் சூழல் ஒன்று ஏற்­ப­டா­தி­ருந்தால், இது­போன்ற சம்­ப­வங்­களில் அவன் ஈடு­பட்­டி­ருப்­ப­தற்கு வாய்ப்­புகள் நிச்­சயம் குறைந்­தி­ருக்கும். ஆயுத மோத­லுக்குப் பின்னர், குடும்­பங்­களில் ஏற்­பட்ட இழப்­புகள், பிரி­வுகள் என்­ப­னவும் இளம் சந்­த­தியின் மீது பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

இளம் சந்­ததி வழி­த­வறிப் போய்க் கொண்­டி­ருப்­ப­தாக குற்­றம்­சாட்­டு­ப­வர்கள், அவர்கள் வழி­த­வ­று­வதை தடுப்­ப­தற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் தான், இவை பற்றியெல்லாம் அலச வேண்டும், ஆராய வேண்டும் என்ற எண்ணமே தமிழ்ச் சமூகத்துக்கு தோன்றியிருக்கிறது.

இப்­போ­தா­வது, தமிழ்ச் சமூ­கத்தில் இத்­த­கைய சமூக அவ­லங்கள் பற்­றிய கருத்­தா­டல்கள் இடம்­பெறத் தொடங்­கி­யுள்­ளன என்­பது நல்­ல­தொரு அறி­குறி. ஆனால், இவற்­றினால் மட்டும், இத்­த­கைய சமூக குற்­றங்­களை களைந்துவிட முடி­யாது. கடந்த ஆறு ஆண்­டு­க­ளாக தமிழ்ச் சமூ­கத்­துக்குள் கொஞ்சம் கொஞ்­ச­மாக விஷம் ஏற்­றப்­பட்டு வந்­துள்­ளது.

இந்த விஷத்தை முறிக்க ஒரே­ய­டி­யாக வைத்­தியம் செய்ய முடி­யாது. கொஞ்சம் கொஞ்­ச­மாகத் தான் செய்ய வேண்டும். படிப்­ப­டி­யாகத் தான் நிலை­மை­களை மாற்ற முடியும்.

மீண்டும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்­ட­மைப்பை வலுப்­ப­டுத்திக் கொள்­வ­தற்கு எந்­த­ள­வுக்கு விரை­வாக நட­வ­டிக்கை எடுக்­கி­றதோ, அந்­த­ள­வுக்கு விரை­வாக, இந்த அவலநிலையில் இருந்து வெளிவர முடியும் என்றே தோன்றுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல