அவளது கழுத்தின் குரல்வளை மிதப்பின் சற்றுக் கீழே ஒரு அடையாளம். பிறப்பு மச்சம் அல்ல. நெற்றியில் பொட்டு இட்ட பெண்ணின் கழுத்திலும் மற்றொரு பொட்டா என மயங்காதீர்கள். பல பெண்களின் வழக்கம்தானே இது என்கிறீர்களா?
இது பொட்டு இல்லைத்தான். ஆனால் பொட்டிட்ட கழுத்தில் அழிக்க முடியாத பொட்டு போலாகிவிட்டது.
ஆம். தினமும் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்த பின்னர் அதே கையால் அதே குங்குமத்தால் கழுத்திலும் ஒரு பொட்டு வைப்பது அவரது வழக்கமும் கூட.
சில காலத்தின் பின்னர் அந்த இடம் சற்றுக் கறுத்துக் கொண்டு வந்தது. சற்று அரிப்பும் இருந்தது.
ஆம் தோலில் அழற்சி ஏற்பட்டது. இதை contact Dermatitis இதை என்பார்கள். ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் எதிர்வினையாக அழற்சி ஏற்படுகிறது.
பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.
அந்நியப் பொருள் சருமத்தில் படும்போது ஏற்படும் அழற்சியை அந்நியப் பொருட் தொடர்பு தோல் அழற்சி எனலாம்.. ஒட்டுக் கிரந்தி என்று பேச்சு வழக்கில் சொல்லலாம்.
சருமத்திற்கு ஒவ்வாத பொருளால், அதாவது அலர்ஜி ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.
Betamethazone போன்ற ஸ்டீரொயிட் கிறீம் மருந்துகளை அவ்விடத்தில் பூசிவர ஒவ்வாமை அழற்சி குணமாகும். ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருள் மீண்டும் சருமத்தில் தொடர்புபடாது வைத்திருப்பதே முக்கியமானது.
"போகுது வருகுது போகுது வருகுது போய்ப் போய் வருகிறது......"
" ...எத்தனை மருந்துகளைப் பூசிவிட்டேன்
மறைவது போல ஏய்ப்புக் காட்டி மீண்டும் மீண்டும் வருகிறது.."
நாற்பதை அண்டிய அவள் தனக்கு சுகர், கொலஸ்ட்ரோல், பிரஸர் ஏதாவது வந்துவிட்டதா எனப் பார்க்க வந்திருந்தாள்
ரிப்போட்டுகளைக் காட்டி முடிந்து எழுந்து போக முயன்றவள் மீண்டும் இருந்தாள்.
“இதையும் காட்ட வேணும் என்று நினைச்சனான் மறந்து போனன்” என்று மூக்கைக் காட்டினாள்
கறுத்து சொரப்பாக மூக்கின் மேற்பாகம் அசிங்கமாகக் கிடந்தது.
"ஒரு வகை எக்ஸிமா ஒட்டுக் கிரந்தி" என்றேன்
ஆனால் "மருந்து பூசியும் மாறுதில்லையே" என்றாள்
"கண்ணாடி போடுறனீங்கள்தானே. இப்ப ஒருக்கா போடுங்க பார்ப்பம்" என்றேன்.
நான் நினைத்தது சரி
மூக்கில் அழுத்திக் கொண்டிருக்கும் நோஸ்பாட் (nose pad)) கண்ணாடியால் ஆனது எனவே அது அடையாளத்திற்குக் காரணமல்ல. கண்ணாடி பிரேமின் ரிம்தான் காரணம். அது மெட்டலால் (metal) ஆனது.அந்த மெட்டலுக்கான ஒவ்வாமையால்தான் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது
அதனால்தான் மீண்டும் மீண்டும் வருகிறது
"கண்ணாடியை மாற்றுங்கள் ஆனால் அது பிளாஸ்டிக் பிரேம் உள்ளதாக இருக்க வேண்டும்" என்றேன். அடுத்த முறை அவளைக் கண்டபோது மூக்கு அழகாக இருந்தது சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஒவ்வாமை ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி ஒட்டுக் கிரந்தி Allergic contact Dermatitis என்பார்கள்.
பல்லி எச்சமிட்ட புண்களா?
"பல்லி எச்சம் இட்டுவிட்டது போலிருக்கிறது. வலிக்கிறது" என்றாள். தனது உதடுகளைச் சுட்டியபடி.அவளது உதட்டிலும் அதை அண்டிய முகத்தின் பகுதியிலும் சிறு சிறு கொப்பளங்கள் காணப்பட்டன
"பல்லி ஏன் உங்களது உதட்டைத் தேடி வந்து எச்சமிட்டது" என நான் கேட்கவில்லை.
ஆனால் "ஏன் எல்லோரது உதட்டை மட்டும்; தேடிப் போய் எச்சமிடுகிறது" என்ற சந்தேகம் மருத்துவம் படிக்கு முன்னர் என்னிடம் இருந்தது என்பதை மறுக்க முடியாது.
உண்மையில் இதற்கும் பல்லி எச்சத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. இது ஒரு தொற்றுநோய். Herpes simplex virus (HSV) என்ற வைரஸ் கிருமியால் ஏற்படுகிறது.
வாயைத் திறந்து நாக்கை நீட்டினார். நாக்கின் ஓரமாக இரு சிறு புண்கள் அவருக்கு இருந்தன. புண்களாக மட்டுமின்றி ஆடை படர்ந்த புள்ளிகள் அல்லது படைகள் போன்ற அடையாளங்களும் இருக்கலாம்.
சூட்டுப் புண்கள் என எண்ணிவிட்டார். மாறி மாறி பார்மசியில் கொடுத்த மருந்துகளைப் பூசிப் பார்த்தார். பயன் இல்லை. வலியும் இல்லை என்பதால் அக்கறை எடுக்கவில்லை.
நாக்கில், வாயின் உட்புறங்களில் ஏற்படும் இத்தகைய புண்கள் அலட்சியப்படுத்தக் கூடியவை அல்ல. அப்பாவி போலக் கிடந்த அந்தப் புண் ஆய்வு கூடப் பரிசோதனையில் புற்று நோய் என்பது நிரூபணமாகி இருக்கிறது.
இது ஒரு மூதாட்டிக்கு நடந்தது.
ஆனால் எவருக்கும் வரக் கூடிய ஆபத்தான நோய். புகைத்தல் வெற்றிலை சப்புதல், அதிகமாக மது அருந்துவது போன்றவற்றால் வருவதற்கான சாத்தியம் மிக மிக அதிகம்.எனவே வாயில் மற்றும் நாக்கில் ஏற்படும் எத்தகைய புண்களையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
எதை எதற்குள் வைப்பது எனத் தெரியாது வைத்துத் திணறுபவர்கள் முதுவயதினர் மாத்திரமல்ல. இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை எந்தப் பருவத்திலும் தொடர்கிறது
இவற்றில் பல ஆபத்திலும் முடிவதுண்டு.இந்தச் சுட்டிப் பையனும் வைத்துவிட்டான்.
எடுத்துவிடுகிறேன் என்று முயன்ற தாயாரால் முடியவில்லை. இன்னும் உள்ளுக்குத் தள்ளியதுதான் மிச்சம்.சும்மா பார்த்தால் தெரிகிறதா. இல்லவே இல்லை.நீண்ட சுரங்கப் பாதை போல இருள் அப்பிக் கிடந்தது.ஒளியைப் பாய்ச்சியபோது ஏதோ வெண்மையாகத் தெரிந்தது. காய்ந்த காதுக் குடுமியா, கல்லா, உருட்டிய பஞ்சா இதை எடுப்பதற்கு பல உபகரணங்கள் இருக்கின்றன.
இதன் நுனியை அந்நியப் பொருளின் பிற்புறமாகக் கொண்டு சென்ற பின் மறுபுறத்தில் உள்ள படியை அழுத்த நுனியில் உள்ள கொழுக்கி விரியும்
மெதுவாக பிற்புறமாக நகர்த்த அந்நியப் பொருளை இழுத்துக் கொண்டு வந்துவிடும்.
காது மென்மையான பகுதி. சிறு காயம் பட்டாலும் வலி ஏற்படும். கிருமி தொற்றலாம்.
தாயின் பொறுமையும் மருத்துவத் தாதிகளின் உதவியும் சேர வெளியே வந்துவிட்டது அந்த அந்நியப் பொருள். வேறொன்றும் இல்லை. மடித்துச் சுருட்டிய பேப்பர் துண்டு..
பெற்றோர்களே..குழந்தையின் காதிற்குள் அந்நியப் பொருள் போய்விட்டால் நீங்களாக எடுக்க முயல வேண்டாம்.
துரதிஸ்டவசமாக பிற்புறம் தள்ளுப்பாட்டால் செவிப்பறை காயமடையலாம். காது கேட்பதே பாதிப்புறலாம்.
***
அவதானமாக இருங்கள் வயதில் மூத்தவர்களே.
அவர் ஒரு மூதாட்டி. பார்க்கின்சன் நோயும் கூட இருக்கிறது. அதனால் கை நடுக்கம் இருக்கிறது. நடக்கும்போது சமநிலை பேணுவதில் சிரமப்படுகிறார். இரவு கழிவறை சென்று திரும்ப முயலும்போது கீழே விழுந்துவிட்டாள். விழும்போது கைகளை ஊன்றியதில் மணிக்கட்டில் கை எலும்பு உடைந்துவிட்டது. வயது ஆகும் போது எலும்புகளின் உறுதி குறைந்துவிடுகிறது. ஓஸ்ரியோபொரோசிஸ் ஏற்படலாம்.
அதனால் சிறு விழுகைகள் கூட எலும்புகளை உடைத்து விடும். மருத்துவப் பரிசோதனைகள் மூலம் தங்கள் எலும்புகள் திடமாக இருக்கிறதா என்பதை முதியவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.அத்துடன் அவதானம் மிக முக்கியம்
நடை தளம்பினால் ஊன்று தடி உபயோகிக்க வேண்டும். எனக்கு ஏன் கைதடி என வீம்பு காட்டாதீர்கள். வெட்கப்படாதீர்கள்.
விழுந்து இடுப்பு எலும்பை உடைத்து விட்டால் படுக்கையாகக் கிடக்கவும் நேரலாம்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன். குடும்ப மருத்துவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக