ஞாயிறு, 14 ஜூன், 2015

சொந்த உறவுகளுக்குள் திருமணங்கள் பிறக்கும் குழந்தைகளைப் பாதிக்குமா? ...

காலங்­கா­ல­மாக பார்த்தால் நம்­ம­வர்கள் பலர் தமது குடும்ப சொந்­தங்­களில் இருக்கும் உற­வி­னர்­களை திரு­மணம் செய்யும் வழமை இருந்து வரு­கின்­றது. இதனை பலரும் சமூக கலா­சார ரீதி­யாக சிறந்­தது என நினைத்து மகிழ்ந்­தாலும் மருத்­துவ ரீதி­யான கண்­ணோட்­டத்தில் பார்த்தால் இதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யா­த­தா­கவே இருந்து வரு­கின்­றது. எனவே, சமூ­கங்கள் குடும்­பங்கள் உற­வி­னர்­க­ளுக்குள் திரு­ம­ணங்­களை காலம் கால­மாக ஏற்­றுக்­கொண்டு அதனை செய்து வரும்­போது, எமது மருத்­துவ ஆலோ­சனை ரீதி­யாக இவ்­வாறு செய்ய வேண்டாம். இதனை சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் ஏற்றுக் கொள்­வார்­களா? நாம் சொல்ல வந்த கருத்­து­களை சரி­யாக விளங்கிக் கொள்­வார்­களா ? என்ற பிரச்­சி­னைகள் இருக்­கத்தான் செய்­கின்­றன. ஆகையால் இந்த விடயம் குறித்து மக்கள் மத்­தியில் சரி­யான கருத்­துக்­களை விளக்க வேண்­டிய அவ­சியம் உள்­ளது.



உற­வி­னர்­க­ளுக்குள் திரு­ம­ணங்கள் சமூ­கத்தில் விரும்­பப்­ப­டு­வது ஏன்?

சொந்­தங்­களில் திரு­மணம் செய்­யும்­போது பலர் நினைப்­பது தமக்கு சிறு வயதில் இருந்து நன்கு தெரிந்­தவர் என்றும் அவ­ரது பெற்­றோர்­களும் தமக்கு தெரிந்­த­வர்­களே என்றும் ஆகும். இதன்­போது சம்­பந்­தப்­பட்­ட­வர்கள் நினைப்­பது எங்கோ இருக்கும் தெரி­யா­த­வரை அல்­லது தெரி­யாத குடும்­பங்­களில் திரு­ம­ணங்கள் செய்­வதை விட தமக்கு தெரிந்த உற­வி­னர்­களும் சொந்­தக்­கா­ரர்­களும் எவ்­வ­ளவோ சிறந்­தது என்­ப­தாகும். அது மட்­டு­மல்ல சில பெற்­றோர்கள் தமது பிள்­ளைகள் சிறு­வ­யதில் இருக்கும் போதே தமது சொந்­தங்­க­ளுக்குள் இருக்கும் ஒரு­வரை உரி­மை­யாக்கி அவ­ரையே இவ­ருக்கு திரு­மணம் செய்­வ­தாக முடி­வாக்கி இருப்­பார்கள். இதன் போது, சொந்­தங்கள் மேலும் வலு­வாக்­கப்­ப­டு­கின்­றது. அது மட்­டு­மல்ல தமது சொத்­துக்­களும் பிரிந்து வேறு குடும்­பங்கள் தெரி­யா­த­வர்கள் என போகாமல் தமது உற­வி­னர்­க­ளி­டமே இணைந்திருக்க வேண்டும் என்ற விருப்­பமும் நிறை­வே­று­கின்­றது. இவ்­வாறு பல­த­ரப்­பட்ட சமூகக் கார­ணங்கள் இருப்­பதால் சொந்­தங்­க­ளுக்குள் திரு­ம­ணங்கள் சமு­தா­யத்தில் நடந்த வண்­ணமே உள்­ளது.

சொந்­தங்­க­ளுக்குள் திரு­ம­ணங்­களை மருத்­துவ ரீதியில் எதிர்ப்­பது ஏன்?

சொந்­தங்கள் என்­கின்ற போது, இங்கே நாம் இரத்த சொந்­தங்கள் அதா­வது, சந்­ததி சந்­த­தி­யாக வந்த உறவு முறை­க­ளையே குறிப்­பி­டு­கின்றோம். இதன்­போது இந்த இரத்த சொந்த சந்­த­தி­களில் ஒரே வகை­யான நிற மூர்த்த பரம்­ப­ரை­ய­ல­குகள் இருக்க வாய்ப்­புள்­ளது. இவ்­வாறு ஒரே வகை­யான பரம்­ப­ரை­ய­லகு தன்மை கொண்ட உற­வி­னர்கள் திரு­ம­ணத்தில் இணையும் போது, உரு­வாகும் பிள்­ளைகள் பற்றி பார்க்க வேண்டும். ஒரே வகை­யான சந்­ததி பரம்­ப­ரை­ய­ல­குகள் இணையும் போது மறைக்­கப்­பட்­டி­ருந்த வேண்­டப்­ப­டாத பின்­ன­டை­வான தன்­­மைகள் வெளிக்­கொண்டு வரக்­கூ­டிய நிலைமை உரு­வாகும். அவ்­வாறு வெளிக்­கொண்டு வரும் வேண்­டப்­ப­டாத தன்­மைகள் இவ்­வா­றான சொந்த திரு­ம­ணங்­களில் பிறக்கும் பிள்­ளை­க­ளுக்கு ஏற்­பட்டு அவர்­களில் வெளிப்­ப­டு­கின்­றன. இதனால் இந்த பிள்­ளை­களில் பல விரும்­பப்­ப­டாத வேண்­டப்­ப­டாத நோய்­க­ளும் குண இயல்­பு­களும் குறை­பா­டு­களும் வந்­து­சேரக் கூடிய வாய்ப்­புள்­ளது.

இதற்­கா­கத்தான் உற­வி­னர்­க­ளுக்குள் செய்­யப்­பட்டு வரும் திரு­ம­ணங்­களை மருத்­துவ கண்­ணோட்­டத்தில் எதிர்க்­கப்­ப­டு­கின்­றது.

சொந்த உற­வு­க­ளுக்குள் செய்­யப்­படும் திரு­ம­ணங்­களில் பிறக்கும் பிள்­ளைகள் எல்­லோரும் பாதிக்­கப்­ப­டு­வார்­களா?

இல்லை, சொந்த அதா­வது, இரத்த சந்­ததி உற­வி­னர்­க­ளுக்குள் செய்து பிறக்கும் பிள்­ளை­களில் பாதிப்­புகள் நோய்கள் வரக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் அதிகம் உள்­ளது. ஆனால், அப்­படி பிறக்கும் பிள்­ளைகள் எல்­லோரும் இவ்­வா­றான பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளா­வார்கள் என்று சொல்ல முடி­யாது. எத்­த­னையோ பிள்­ளைகள் எந்­த­வித பிரச்­சி­னை­களும் இல்­லாமல் ஆரோக்­கி­ய­மா­கவும் பல அறி­வா­ளி­க­ளா­கவும் பிறந்­தி­ருக்­கி­றார்கள். வாழ்ந்­தி­ருக்­கி­றார்கள். ஆனால், பாதிப்­புகள் வரக்­கூ­டிய வாய்ப்­புகள் இருப்­பதால் இவ்­வாறு குடும்­பங்­களில் குறை­யுடன் ஒரு பிள்ளை பிறந்­தாலோ அந்த குடும்­பத்தின் மகிழ்ச்சி போய் பல வித­மான சிர­மங்கள் கவ­லைகள் வந்து விடும் என்­ப­தனை புரிந்துகொள்ள வேண்டும். இதனால் தான் வர முன் தடுக்க வேண்டும் என்ற நோக்கில் இவ்­வா­றான திரு­ம­ணங்கள் தவிர்க்­கப்­பட வேண்டியது அவ­சி­ய­மா­கும்.

சொந்­தங்­களில் திரு­ம­ணங்கள் தவிர்க்க முடி­யாது. நடந்­த­வர்கள் நடக்க இருப்­ப­வர்கள் குறித்து என்ன பரி­காரம் உள்­ளது?

சொந்த உற­வு­களில் திரு­ம­ணங்கள் தவிர்க்­கப்­பட வேண்டும் என நாம் வார்த்­தையில் கூறி­னாலும் சிலர் விரும்­பி­விட்டோம் மனதை பறி கொடுத்­து­விட்டோம் என நினைத்து இணை­ப­வர்கள் உள்­ளனர். இவர்களை எம்மாலோ பெற்றோர்களாலோ பிரித்து வைத்து பார்க்க முடியாது. எனவே, இவ்வாறு திருமணமானவர்கள் கர்ப்பம் தரித்த பின்னர் ஒழுங்கான மருத்துவ பரிசோதனைகள் ஸ்கான் (SCAN) பரிசோதனைகள் மேற் கொண்டு கர்ப்பத்தில் வளரும் சிசுவுக்கு பாதிப்புகள் உள்ளதா என பார்த்து அதற்கான ஆலோ­ச­னை­க­ளை சரியான நிபுணரிடம் கேட்க வேண்டும். எனவே, எதிர்காலத்தில் சந்ததியாக வரும் இரத்த சொந்தங்களுக்குள் செய்யும் திருமணங்கள் தவிர்க்கப்பட வேண்டியது அவசியமாகு­ம்.

டொக்டர்: சுஜாகரன், நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை, பம்பலப்பிட்டி.








Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல