கடும் காது வலிக்குள் ளாகி துன்பப் பட்ட 14 வயது சிறுவன் ஒருவனது காதிலிருந்து 4 அங்குல நீள மான உயிருள்ள பூரான் ஒன்று அகற்றப்பட்ட சம்பவம் அமெரிக்க அர்கன்ஸாஸ் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
சாலின் பிராந்தியத்தைச் சேர்ந்த கிரான்ட் பொற்றி என்ற சிறுவனின் காதின் செவிப்பறையில் இவ்வாறு உயிருள்ள பூரான் இருந்துள்ளது.
காது வலிக்கு உள்ளான கிரான்ட், வலிக்கு காரணமான பொருளை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டான். இதன் போது அவனால் காதிலிருந்து இழுத்தெடுக்கப்பட்ட பொருள் ஒரு உயிருள்ள பூரான் என்பதைக் கண்டறிந்து அவன் அதிர்ச்சியடைந்துள்ளான்.
இதனையடுத்து அவனது தாயாரான அஞ்ஜெலா பொற்றி, பூரானை பிளாஸ்டிக் பையில் எடுத்துக்கொண்டு சிறுவனை சாலின் ஞாபகார்த்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு கிரான்ட்டிற்கு பூரான் கடிக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. ஒருவரது காதுக்குள் பூரான் பிரவேசித்திருப்பது தொடர்பில் தாம் அறிவது தமது மருத்துவப் பணிக் காலத்தில் இதுவே முதல் தடவையென அந்த சிறுவனுக்கு சிகிச்சையளித்த மருத் துவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக