மக்கள் அக்கறையின்றி செங்கற்களை திருடிக் கொண்டு போவதால் சீன பெருஞ்சுவரின் 30 சதவீத பகுதி சேதமடைந்து விட்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட சீனப் பெருஞ்சுவர், உலகின் ஏழு அதிசயங்களுள் முதன்மையானது. இடைவெளி இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட சீன பெருஞ்வர், சான்காய்குவானில் இருந்து ஜியாயூகுவான் வரை இருக்கிறது. இயந்திரங்கள் பயன்பாடு அறவே இல்லாத அந்த காலக்கட்டத்தில் முற்றிலும் மனிதர்கள் உழைப்பை பயன்படுத்தி கட்டப்பட்டது.
இந்த சுவரின் கட்டுமானப்பணிகள் கி.மு. 3ஆ-ம் நூற்றாண்டில் தொடங்கப்பட்டது. 21 ஆயிரம் கிலோ மீட்டருக்கு மேல் உள்ள இந்த சுவரில், மிங் வம்சத்தினர் கி.பி. 1368 முதல் 1644ஆம் ஆண்டு வரை சுமார் 6 ஆயிரத்து 300 கிலோ மீட்டர்கள் கட்டினர். இதில், 1,962 கிலோ மீட்டர்கள் நீளம் காற்று, மழை போன்ற இயற்கை தாக்குதல்களால் சேதமடைந்துள்ளது. தற்போது மக்களும் சுற்றுலாப்பயணிகளும் பொறுப்பின்றி செங்கற்களை உருவிக் கொண்டு போவதால், பழைமை வாய்ந்த சீன பெருஞ்சுவரின் 30 சதவீத பகுதிகள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து 'பெய்ஜிங் டைம்ஸ்' பத்திரிகை வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில், "சுற்றுலா மற்றும் உள்ளூர்வாசிகளின் அக்கறையற்ற செயல்களால் சீனப் பெருஞ்சுவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பழங்கால கற்கள் மற்றும் செங்கற்களால் ஆன கோபுரங்கள் உடைந்தும், தகர்ந்தும் போய் கிடக்கின்றன. பலத்த மழை அடித்தால் அவைகள் தகர்ந்து விடும்.
வடக்கு மாகாணமான லுலாங்கில் வசிப்பவர்கள், வீடு கட்டுவதற்காக சீனப் பெருஞ்சுவரில் இருந்து செங்கற்களை திருடிச் செல்கின்றனர். சீன எழுத்துக்குறிகள் இருக்கும் இந்த கற்களை சுற்றுலாப்பயணிகளும் திருடி, நினைவுக்காக எடுத்து செல்கின்றனர்.
சில சமயங்களில் சீன மக்களே, சீன பெருஞ்சுவரின் செங்கற்களை திருடி, சுற்றுலாப் பயணிகளுக்கு 30 யுவான்களுக்கு விற்பனை செய்கின்றனர். அண்மை காலமாக சீன பெருஞ்சுவரை காண வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அப்படி வருபவர்களும் பொறுப்பற்றத் தன்மையாக இருக்கின்றனர்'' என்று கூறியுள்ளது.
தறபோது சீன பெருஞ்சுவரில் செங்கற்களை திருடுபவர்களுக்கு 5 ஆயிரம் யுவான் வரை அபராதமாக விதிக்கப்படுகிறது. எனினும் செங்கற்திருட்டு குறைந்த பாடில்லை. நாளாந்தம் எக்கச்சக்கமான கற்கள் திருட்டுப் போகின்றன.
இந்நிலையில் சீன பெருஞ்சுவர் சங்கத்தின் சார்பில் ஆய்வு செய்யப்பட்டதில் 8 முதல் 10 சதவீம் வரை சுவர் இடிந்தும் சேதமடைந்துள்ளது தெரியவந்தது.
இது குறித்து சங்கத்தின் இணை இயக்குநர் டோங் யாஹீ கூறுகையில், 2012-ஆம் ஆண்டு சீன பெருஞ்சுவரை ஆய்வு செய்தபோதே 30 மீட்டர் தொலைவிற்கு சேதம் ஏற்பட்டிருந்தது. போதிய பராமரிப்பு இல்லாதது, மழை போன்ற இயற்கை பேரிடர் ,சுற்றுலா பயணிகள் சேதப்படுத்துவது போன்ற காரணங்களால் சுவரில் ஓட்டை விழுந்தும் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சுவர் இடிந்து தரைமட்டமாகிப் போனது.
சுவரில் இடிந்து விழுந்த செங்கல் கற்களை அப்பகுதி கிராமவாசிகளே திருடிச் சென்று விற்பனை செய்கின்றனர். இதனால் சீன பெருஞ்சுவரின் 10 சதவீதம் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது என்றார்.
உலக அதிசயமாக கருதப்படும் சீன சுவரினை முறையாக பராமரிப்பு செய்து பாதுகாக்க வேண்டும் என சீனாவின் ஹெப்பீ மாகாணத்தின் சீன பெருஞ்சுவர் பாதுகாப்பு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக