ஞாயிறு, 5 ஜூலை, 2015

பரீட்சையில் வெற்றிபெற மூச்சுப் பிடித்து படிப்பது எப்படி?

ஒருவர் உயி­ருடன் இருக்­கிறார் என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வது அவ­ரது சுவாச ஓட்­ட­மாகும். “மூச்­சுப்­போனால் எல்லாம் போச்சு" என்­பார்கள். “இறுதி மூச்­சு­வரை இதை நான் மறக்­க­மாட்டேன்" என்றும் சொல்­வார்கள். மூச்சை அடக்­கியும் கட்­டுப்­டுத்­தி­யுமே பெரிய முனி­வர்கள், யோகிகள் செயற்­கரும் செயல்­களைச் செய்­துள்­ளார்கள். நீண்­ட­காலம் வாழ்ந்­துள்­ளார்கள். எமது மூச்­சுக்­காற்று நாம் உறங்­கும்­போதும் இயங்­கிக்­கொண்டே இருக்­கின்­றது.



ஆரோக்­கி­ய­மாக வாழ்­வ­தற்கு "சுத்­தக்­காற்றை நித்­தமும் சவாசி" என்­பது சுகா­தாரப் பழ­மொழி. காற்றை முறைப்­படி மூக்குத் துவா­ரங்­களால் உள்­ளுக்கு இழுத்து வெளியே விடு­வதை "பிரா­ணா­யாமம்" என்பர். உள்ளே இழுக்கும் போது "பூரகம்", வெளி­விடும் போது "ரேசகம்", அடக்­கி­வைக்கும் போது "கும்­பகம்", காற்றை சிறி­து­நேரம் உள்ளே அடக்கி வைப்­பதால் இது உடல் எங்கும் ஓடி இரத் தம் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது.

நாம் தூங்­குதல், உணர்ச்­சி­வ­யப்­ப­டுதல், கோபப்­ப­டுதல், வேலை செய்தல் போன்ற நேரங்­களில் சுவாசம் பெரு­மூச்­சாக வெளி­வ­ரு­கி­றது. சுவாசம் எவ்­வ­ளவு குறை­வாக வெளி­வ­ரு­கின்­றதோ அந்­த­ள­விற்கு ஆயுளும் கூடு­கி­றது என்று யோக­சாத்­திரம் சொல்லும். திரு­மூலர் மூவா­யிரம் வரு­டங்கள் இருந்து வரு­டத்­திற்­கொரு திரு­மந்­தி­ர­மாகப் பாடினார் என்றும் சொல்­லப்­ப­டு­கின்­றது.

மூச்சை வல­து­பக்க நாசி­யினால் இழுத்து இடது

பக்க நாசி­யினால் பொது­வாக வெளி­வி­ட­வேண்டும். திரும்­பவும் இட­து­பக்க நாசி­யினால் இழுத்து வல­து­பக்க நாசி­யினால் மெது­வாக வெளி­வி­ட­வேண்டும். வல­து­பக்கம் "சூரி­ய­கலை" என்றும் இட­து­பக்கம் "சந்­தி­ரக்­கலை" என்றும் பெயர். சூரி­ய­நாடி, சந்­தி­ர­நாடி என்றும் பெயர் சொல்வர். இரண்­டிற்கும் இடையில் உளள் நாடி "சுழு­முனை நாடி" என்றும் பயிற்­சியின் மூலம் அது திறந்தால் மெய்­ஞானம் உண்­டாகும் என்பர்.

கலை­வா­ணியின் அம்­ச­மாகக் கரு­தப்­படும் ஔவையார் "ஔவைக்­குறள்" என்னும் நூலிலே அதி­காலை 4.00 மணி­முதல் 6.00 மணி வரை­யுள்ள காலத்துள் மூச்சை பின்­வ­ரு­மாறு சிறிது நேரம் பயிற்சி கொள்ளவேண்டும் என்று கூறி­யி­ருக்­கின்றார்.

வெள்ளி, புதன், திங்கள் –- இட­து­பக்கம்

செவ்வாய், சனி, ஞாயிறு -– வல­து­பக்கம்

வளர்­பிறை வியாழன் -– இட­து­பக்கம்

தேய்­பிறை வியாழன் –- வல­து­பக்கம்

அதி­க­மாக சுவா­சத்தை வெளி­விட வேண்டும்.

வலது பக்க நாசி­யினால் அதி­க­மா­கசக் காற்று வெளியே போக­வேண்­டு­மானால் "காந்­திஜி" உட்­கா­ரு­வது போல ஒருக்­க­ளித்து இருக்­க­வேண்டும். அதா­வது, இடது கையை நிலத்தில் ஊன்றி ஒரு பக்­க­மாகச் சாய்ந்­தி­ருந்து இடது காலின் மேல் வலது காலை வைத்து வலது கையை வலது கால் கணுக்­காலில் வைத்­தி­ருந்தால் சுவாசம் மாறும். இட­து­பக்கம் மாற­வேண்­டு­மானால் வலது கையை நிலத்தில் ஊன்றி முன்பு சொன்­னது போல் இருந்தால் சுவாசம் மாறும்.

நாம் ஒரு­வரைச் சந்­திக்க செல்லும் போதும் சுவாசம் வலது பக்­க­மாக அதிகம் செல்லும்படி­யாகச் செய்து செல்ல வேண்டும். இதற்கு இட­து­பக்க அக்­குளில் ஒரு குடை அல்­லது ஒரு புத்­தகம் போன்ற ஏதா­வது பொருளை வைத்துச் சென்றால் வலது பக்கம் சுவாசம் அதி­க­மாகச் செல்லும். பரீட்சை எழுதும் நேரமும் இடது முழங்­கையை மேசையில் ஊன்றிக் கொண்டு எழு­தினால் படித்­த­தெல்லாம் ஞாபகம் வந்து நன்­றாக எழுதி வெற்றி பெற முடியும்.

இடது கையால் எழு­து­கின்­ற­வர்­க­ளுக்கு இது சிர­ம­மாக இருக்கும். பரீட்­சைக்கு நன்­றாக படிப்­ப­தோடு இப்­ப­யிற்­சியை செய்து வந்தால் நிச்­சயம் வெற்­றிதான். பலர் இதைக் கடைப்­பி­டித்து வெற்றி பெற்­றி­ருக்­கின்­றார்கள்.

“அவன் மூச்­சுப்­பி­டித்துப் படிக்­கிறான் இம்­முறை வெற்­றிதான்" என்று பலர் சொல்லக் கேட்டிருக் கின்றோம். “மூச்சுப்பிடித்தல்" என்பது இடைவி டாது என்று பொருள் தந்தாலும் இந்த நாடி ஓட்ட முறையைத்தான் என்றும் கருதலாம். மாணவர்க ளும் கருமங்களைச் சாதிக்க நினைக்கின்றவர்க ளும் இதை முயன்று பார்க்கலாமே.

 கலாபூஷணம் சிவஸ்ரீ.க.லோகநாத குருக்கள்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல