இரு கைகளும் இல்லாத நிலை யில் பிறந்த பெண்ணொருவர் உலகளாவிய ரீதியில் தனது கணவருடன் பயணம் செய்து விழிப்புணர்வு பிரசாரங்களை செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துள் ளார்.
அமெரிக்க அரிஸோனா மாநிலத்தைச் சேர்ந்த ஜெஸிக்கா கொக்ஸ் (32 வயது) என்ற மேற்படி பெண் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அவர் தனது கால்களைப் பயன்படுத்தி எழுதுதல், பல் விளக்குதல் போன்ற தனது அன்றாட வேலைகளைச் செய்யவும் விமானத்தைச் செலுத்தவும் பியானோ வாத்தியத்தை இசைக்கவும் வல்லமையைப் பெற்றுள்ளதுடன் தற்பாதுகாப்புக் கலையில் இரு கறுப்புப் பட்டிகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனது மூன்றாவது வயது முதல் உடற் பயிற்சிக் கலைகளைப் பயில ஆரம்பித்த அவர், தனது ஆறாவது வயதில் நடன பயிற்சி வகுப்பில் இணைந்தார்.
அவர் 5 வருடங்களுக்கு முன் னர் விமானிக்கான அனுமதிப்பத் திரத்தைப் பெற்ற இரு கைகளுமற்ற முதலாவது பெண் என்ற பெயரைப் பெற்றார்.
அத்துடன் உடல் குறைபாடுகள் காதலுக்கு தடையல்ல என்பதையும் அவர் நிரூபித்துள்ளார்.
அவர் 5 வருடங்களுக்கு முன்னர் பற்றிக் கம்பெர்லெயின் என்பவரை சந்தித்து காதல் கொண்டு 2012 ஆம் ஆண்டில் அவருடன் திருமண பந்தத்தில் இணைந்தார்.
பற்றிக்கும் ஜெஸிக்கா போன்று தற்பாதுகாப்பு கலையில் ஆர்வ முள்ளவர் என்பது குறிப்பிடத்தக் கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக