தனது தந்தையின் ரவைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை எடுத்து விளையாடிய 3 வயது சிறுவன் ஒருவன் தனது தலையில் தானே சுட்டு உயிரிழந்த விபரீத சம்பவம் அமெரிக்க மிக்சிக்கன் மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஜொனாதன் கோப்மான் என்ற மேற்படி சிறுவன் வீட்டின் அறையொன்றிலிருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடிய போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தால் சிறுவ னது பெற்றோரான டெறிக் மற் றும் மிசெல் உட்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிறுவனை வீட்டில் தனியே விட்டுவிட்டு அவனது தந்தையும் மூத்த சகோதரனும் வெளியில் சென்றிருந்த வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பிராந்திய பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெ டுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக