ஞாயிறு, 15 நவம்பர், 2015

கர்ப்ப காலத்தில் தோன்றும் நீரிழிவு

பெண்கள் கர்ப்ப காலத்­தின்­போது இரு வகை­யான நீரி­ழிவு நோயை எதிர்­கொள்­ளக்­கூடும். அதா­வது அப்பெண் கர்ப்­பந்­த­ரிப்­ப­தற்கு முன்­பி­ருந்தே நீரி­ழிவு நோயா­ளி­யாக இருத்தல் அல்­லது சாதா­ரண ஒரு பெண்­ணாக இருப்­ப­வர்க்கு கர்ப்ப காலத்­தின்­போது மட்டும் நீரி­ழிவு நோய் தோன்றி பிர­ச­வத்தின் பின்னர் அது மறைந்து போதல்.



இவ்­வாறு இரு வகை­யான நீரி­ழிவு நோய்கள் இருப்­பதால் கர்ப்ப காலத்தில் நீரி­ழிவு நோய் என்­பது ஆசிய நாட்டுப் பெண்­களை பொறுத்­த­வ­ரையில் இது ஒரு பொது­வான முக்­கிய பிரச்­சி­னை­யாக உள்­ளது. கர்ப்­பந்­த­ரித்த 100 பெண்­களை எடுத்தால் அதில் 10 பெண்கள் ஏதோ ஒரு வகையில் நீரி­ழிவு நோய் உடை­ய­வர்­க­ளாக இருக்­கின்­றனர். இந்த கர்ப்ப காலத்தில் ஏற்­படும் நீரி­ழிவு நோய் தாய்க்கும் சிசு­விற்கும் பல­வித பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. அதிலும் திடீர் சிசு மரணம் முக்­கி­ய­மான விடயம். இவ்­வாறு கர்ப்ப காலத்­தி­லேற்­படும் நீரி­ழிவு நோய் பாரிய தாக்­கங்­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தாக இருப்­பதால் இது பற்றி மக்கள் அறிந்­தி­ருப்­பது அவ­சியம். அப்­போ­துதான் இதனைக் கண்­ட­றி­வ­தி­லி­ருந்து கட்­டுப்­ப­டுத்­து­வது வரை பெண்­களின் பங்­க­ளிப்­பையும் ஒத்­து­ழைப்­பையும் பெற்­றுக்­கொள்ள முடியும்.

நிரந்­த­ர­மான நீரி­ழிவு நோயு­டைய பெண்கள் எவ்­வாறு கருத்­த­ரிப்­பிற்கு தயா­ராக வேண்டும்?

நிரந்­த­ர­மாக நீரி­ழிவு நோயு­டைய பெண்கள் கருத்­த­ரிப்­பிற்கு முன்னர் மாத்­தி­ரை­களை எடுத்துக் கொண்­டி­ருந்தால் அதனை நிறுத்தி இன்­சுலின் ஊசி மருந்­து­களை பாவிக்கத் தொடங்க வேண்டும். பின்னர் குரு­தியில் சீனியின் அளவை உரிய அளவில் கட்­டுப்­பாட்டில் வைத்­த­வாறு போலிக் அசிட் (Folic Acid) விற்­றமின் மாத்­தி­ரை­களை பாவிக்க ஆரம்­பித்து கருக்­கட்ட முயற்­சிகள் எடுக்க வேண்டும். அத்­துடன் அப்­பெண்­ணுக்கு கண் பரி­சோ­தனை, சிறு­நீ­ரக பரி­சோ­தனை என்­பன அவற்­றுக்­கு­ரிய மருத்­துவ நிபு­ணர்கள் மூலம் மேற்­கொண்டு அவற்றின் ஆரோக்­கிய நிலையை உறு­திப்­ப­டுத்திக் கொள்ள வேண்டும். ஏனெனில் நீரி­ழிவு நோயின் தாக்­கத்­தினால் கண் மற்றும் சிறு­நீ­ரகம் போன்­றன ஆரோக்­கி­ய­மற்­ற­தாக இருப்பின் கருத்­த­ரித்­தலை தவிர்த்துக் கொள்ள வேண்­டிய சந்­தர்ப்­பங்­களும் உள்­ளன.

கர்ப்ப காலத்தில் நீரி­ழிவு நோய் தோன்­று­வ­தற்­கான கார­ணங்கள்

கர்ப்ப காலத்தில் 10%-15% பெண்­களை இந்நோய் தாக்­கு­கின்­றது. கர்ப்ப காலத்தில் சரி­வர இன்­சுலின் சுரக்­கா­த­தாலும் உட­லி­லுள்ள கலங்கள் இன்­சுலின் சுரப்­புக்கு ஒத்­து­ழைக்­கா­த­தாலும் இரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவு மாறு­ப­டு­கின்­றது.

கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு வழக்­கத்தை விட அதி­க­ளவு இன்­சுலின் தேவைப்­ப­டு­கின்­றது. எனவே இன்­சுலின் அளவு சரி­வர சுரக்­கப்­ப­டாது போகும் போது கர்ப்­ப­கால நீரி­ழிவு நோய் ஏற்­ப­டு­கின்­றது.

பெரும்­பாலும் இவ்­வ­கை­யான நீரி­ழிவு நோய் கர்ப்ப காலத்தில் மட்­டுமே ஏற்­ப­டு­கின்­றது. குழந்தை பிறப்­பிற்கு பின்னர் அது மறைந்து விடும்.

ஆனால் சில­ருக்கு பிர­ச­வத்தின் பின்­னரும் அவர்­க­ளது வாழ் நாளில் எப்­போது வேண்­டு­மா­னாலும் நீரி­ழிவு நோய் ஏற்­ப­டலாம்.

அத­னைத்­த­டுப்­ப­தற்கு அவர்கள் வைத்­திய ஆலோ­ச­னைப்­படி போது­மான நடைப்­ப­யிற்சி உடல் எடையைக் கட்­டுக்குள் வைத்­தி­ருத்தல் போன்­ற­வற்றைக் கடைப்­பி­டிக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் 4 அல்­லது 5 மாதங்­களின் மேல் தான் நீரி­ழிவு நோய் தாக்க அதிகம் வாய்ப்­புள்­ளது. எனவே அவர்கள் (OGTT) குளுக்கோஸ் குடித்து குறித்த நேரத்தில் இரத்­தத்தில் சீனியின் அளவை அறியும் பரி­சோ­த­னை­களை செய்து நீரி­ழிவு நோய் ஏற்­பட வாய்ப்­புள்­ளதா ? என்­பதை ஆரம்­பத்­தி­லேயே அறிந்து கொள்­ளலாம்.

கர்ப்பக் காலத்தில் ஏற்­படும் நீரி­ழிவு நோயின் தாக்­கங்கள்

கர்ப்பக் காலத்தில் ஏற்­படும் நீரி­ழிவு நோயா­னது தாய்க்கும் சிசு­விற்கும் பல­வித பாதிப்­புக்­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

அவை­யா­வன,

1. சிசு­விற்கு ஏற்­ப­டக்­கூ­டிய அங்­க­வீனக் குறை­பா­டுகள்

உ+ம்.

இத­யத்­தி­லேற்­படும் கோளா­றுகள் முள்­ளந்­தண்டின் குறை­பா­டுகள் மற்றும் மூளை முண்ணான் வளர்ச்­சிக்­கு­றை­பாடு

2. கருத்­த­ரித்த பெண்­ணிற்கு ஏற்­ப­டக்­கூ­டிய இயற்­கை­யான கருக்­க­லையும் நிலை (miscarriage)

3. கர்ப்ப காலத்­திலும் பிர­ச­வத்­திலும் ஏற்­ப­டக்­கூ­டிய சிசு மர­ணங்­களின் எண்­ணிக்கை கூடு­த­லாக இருத்தல்.

4. கர்ப்ப காலத்தின் இறு­திப்­ப­கு­தியில் ஏற்­ப­டக்­கூ­டிய திடீர் சிசு மர­ணங்கள்

5. சிசு­விற்கு ஏற்­ப­டக்­கூ­டிய அதி­கூ­டிய வளர்ச்­சியால் சிசுவின் நிறை அதி­க­ரிக்கும். இதனால் பிர­ச­வத்தின் போது பல­வித சிக்­கல்கள் மற்றும் பிர­ச­வத்தின் போது குழந்­தைக்கு ஏற்­டக்­கூ­டிய காயங்கள் அதி­க­மாக இருக்கும் .இதனால் சிசே­ரியன் மூல­மான பிர­ச­வத்தின் தேவை அதி­க­ரிக்கும்.

6. நீரி­ழிவு நோயு­டைய பெண்­க­ளுக்கு கர்ப்ப காலத்தில் குருதி அமுக்கம் (Blood Pressure) அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது.

7. சிசு­வைச்­சுற்றி கர்ப்­பப்­பையில் உள்ள திர­வத்தின் அளவு அதி­க­ரித்து பெரிய அளவு வயிற்­றை தோற்­று­விக்கும். அத்­துடன் குறை­மாத பிர­சவ வலி ஏற்­பட வாய்ப்­புக்­களும் அதி­க­ரிக்கும்.

8. பிர­ச­வத்தின் பின்னர் சிசுக்­களின் வெல்­லத்தின் அளவு குறை­வ­டை­வ­துடன் குழந்­தைக்கு கண்கள் மஞ்­ச­ளாகும் நிலையும் ஏற்­படும் (Jaundice)

கர்ப்­ப­கா­லத்தில் ஏற்­படும் தற்­கா­லிக நீரி­ழிவு நோயை எவ்­வாறு அறிந்து கொள்­ளலாம்?

கர்ப்ப காலத்தில் 5-6 மாதங்கள் முடி­வ­டையும் போது குரு­தியில் வெல்­லத்தின் அள­வைப்­ப­ரி­சோ­திக்க வேண்டும். இதற்­காக கர்ப்­பிணிப் பெண்­களை 12 மணித்­தி­யா­லங்கள் நீர் ஆகா­ரங்கள் உட்­கொள்­ளாது இருந்து குரு­தியில் வெல்­லத்தின் அளவைப் பார்க்க வேண்டும் (Fasting blood Sugar) பின்னர். 75g குளுக்கோஸ் (Glucose) உட்­கொண்டு 2 மணித்­தி­யா­லத்தில் குரு­தியில் வெல்­லத்தின் அளவைப் பார்க்க வேண்டும்.

இதன்­போது வெல்­லத்தின் அளவு அதி­க­மாக இருப்பின் இந்நோய் உறு­திப்­ப­டுத்­தப்­படும். சில­வே­ளை­களில் இப்­ப­ரி­சோ­த­னையை நேர­டி­யாக மேற்­கொள்­ளாது மதிய போச­னத்தின் (LUNCH) 2 மணித்­தி­யா­லங்­களின் பின் வெல்­லத்தின் அளவைப் பரி­சோ­தித்து குரு­தியில் வெல்­லத்தின் அளவு அதி­க­மாக இருப்பின் அதன் பின்னர் மேற்­கு­றிப்­பிட்ட பரி­சோ­த­னையை மேற்­கொண்டு இந்­நோயை உறு­திப்­ப­டுத்­தலாம்.

தற்­கா­லிக நீரி­ழிவு நோய் கூடு­த­லாக எவ்­வா­றான பெண்­களில் ஏற்­ப­டு­கின்­றது?

கடந்த கர்ப்ப காலங்­களில் இவ்­வாறு தற்­கா­லிக நீரி­ழிவு நோய் ஏற்­பட்­ட­வர்­களில் இது மீண்டும் ஏற்­பட வாய்ப்­புள்­ளது.

* பெண்ணின் வயது 35ற்கு கூடு­த­லாக இருக்­கும்­போதும்

* உடற்­ப­ருமன் அதி­க­மான பெண்­க­ளிலும்

* நெருங்­கிய குடும்ப உற­வி­னர்­களில் நீரி­ழிவு நோய் காணப்­ப­டும்­போதும்

* கடந்த தடவை எடை கூடிய சிசுவைப் பெற்­ற­வர்­களில் இவ்­வாறு தற்­கா­லிக நீரி­ழிவு நோய் ஏற்­பட வாய்ப்­புள்­ளது. இவ்­வா­றான பெண்கள் கண் மற்றும் சிறு­நீ­ர­கங்கள் பரி­சோ­திக்­கப்­பட்டு ஆரோக்கிய நிலைகள் அறியப்படும்.

அத்­துடன் ஒழுங்­காக குருதி அமுக்­கத்தை அளப்­பதன் மூலம் இதில் ஏற்­படும் அதி­க­ரிப்­புக்கள் கண்­ட­றி­யப்­படும். மேலும் தாய்க்கு சிசுவின் அசை­வுகள் குறித்து விழிப்­பாக இருக்க ஆலோ­ச­னைகள் வழங்­கப்­படும். இதன்­மூலம் திடீர் சிசு மர­ணங்கள் தவிர்க்கப்படும்.

ஒழுங்­கான குரு­திப்­ப­ரி­சோ­த­னைகள் உண­வுப்­ப­ழக்­கங்கள் மற்றும் தகுந்த வைத்­திய ஆலோ­ச­னைகள் மூலம் கர்ப்ப காலங்­களில் ஏற்­படும் நீரி­ழிவு நோயை கட்­டுப்­ப­டுத்தி வைத்­தி­யரின் ஆலோ­ச­னைப்­படி பிர­ச­வங்­க­ளுக்கு ஒத்­து­ழைப்­பதன் மூலம் ஆரோக்­கி­ய­மான சிசு­வைப்­பெற்­றெ­டுக்­கலாம். இதன் மூலம் தாயி­னதும் குழந்­தை­யி­னதும் ஆரோக்கியங்கள் உறுதிப்படுத்தப்படும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல