ஞாயிறு, 15 நவம்பர், 2015

யாழ்.கொடி­கா­மத்தில் சம்­பவம்

"பிள்­ளையை அர­சாங்­கத்­தி­லேயே வைச்சு அவங்­களே படிப்­பிச்சு பாத்­துக்­கி­னமாம், அதுக்கு நாங்க மாசம் மாசம் கொஞ்ச காசு கட்­டினா சரியாம், இது எங்­க­ளுக்கும் கஷ்­ட­மில்­லாத வேலை தானே" என்றார் சிறு­மியின் தந்தை.

கடந்த முதலாம் திகதி காண­ாம­லாக்­கப்­பட்டு பின்னர் பொலி­ஸாரால் மீட்­கப்­பட்டு தற்­போது அரச பொறுப்பில் இருக்கும் சிறுமி நிரஞ்­சி­னியின் (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தந்­தையின் கருத்தே இது.



 டி.எம்.சிந்தக என்.பண்டார
தாய் தந்­தைக்கு இடை­யி­லான பிரச்­சினை கார­ண­மாக பிரிந்து வாழும் குடும்­பத்தில் இச் சிறுமி பரு­வ­மெய்­திய வயதில் தனக்கு கிடைக்­க­வேண்­டிய அன்பும் பாசமும் பாது­காப்பும் கிடைக்­காத விரக்­தி­யினால் செய்­வ­த­றி­யாது இருந்த சந்­தர்ப்­பத்தில், ,வஞ்­ச­கனின் பிடியில் சிக்கி தன் எதிர்­கா­லத்­தையே தொலைக்­கப்­பார்த்த சம்­பவம் ஒன்று அண்­மையில் கொடி­காமம் பகு­தியில் இடம்­பெற்­றுள்­ளது. அந்த வகையில் அச் சம்­பவம் தொடர்­பாகத் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கடந்த முதலாம் திகதி கொடி­காமம் பாலாவி வடக்கு வாகை­ய­டியைச் சேர்ந்த மகேஸ்­வரன் நிரஞ்­சினி என்ற 15வயது சிறுமி ஆல­யத்­திற்கு சென்ற வேளை காணாமல் போயுள்­ள­தாக சிறு­மியின் தந்­தையால் கொடி­காமம் பொலிஸில் இரவு 7.30 மணிக்கு முறைப்­பாடு மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தது.

முறைப்­பாடு பதிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, நிகழ்­கால நிலை­மை­களை உணர்ந்த பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி டி.எம்.சிந்­தக என். பண்­டார த.ைல­மை­யி­லான குழு­வினர் விரைந்து செயற்­பட்­டனர்.

குறித்த சம்­பவம் தொடர்­பாக சிறு­மியின் தந்­தை­யிடம் பெற்­றுக்­கொண்ட தக­வல்­களின் படி சிறு­மியின் தாயும் தந்­தையும் குடும்பப் பிரச்சினை கார­ண­மாக நீண்­ட­கா­ல­மாக பிரிந்து வாழ்ந்து வரு­கின்­றமை தெரி­ய­வந்­தது.

இந்­நி­லையில், அவர்­க­ளது இரண்டு பிள்­ளை­க­ளான 15 வய­தான மகள் மற்றும் 11 வய­தான மகன் ஆகி­யோரை தந்­தையே வளர்த்து வந்­துள்ளார். தற்­போது சிறு­மியின் தாய் மன்னார் சிலாபம் மீன்­வா­டியில் வேலை செய்து வரு­கின்றார். இந்நிலையில் கொடி­காமம் பொலிஸார் சிறுமி தனது தாயா­ரிடம் சென்­றி­ருக்­கலாம் என்ற கோணத்­திலும் சகல பொலிஸ் நிலை­யங்­க­ளுக்கும் இச் சிறுமி தொடர்­பாக அறி­வித்­தி­ருந்தார்.

இவ்­வாறு இருக்­கையில், மறுநாள் 2ஆம் திகதி மாலை 3.30 மணிக்கு காணாமல் போன சிறுமி திரு­கோ­ண­ம­லையில் இளம் தம்­ப­தி­களால் காப்­பாற்­றப்­பட்­டுள்­ள­தாக திரு­கோ­ண­மலை பொலிஸ் நிலைய பெண் பொலிஸ் பரி­சோ­தகர் ஜஸ்மின் காணி என்­ப­வ­ருக்கு தகவல் ஒன்று கிடைத்­தி­ருந்­த­துடன், குறித்த தம்­ப­தி­களால் சிறு­மியின் தந்­தைக்கும் தகவல் வழங்­கப்­பட்­டி­ருந்து. இத­னை­ய­டுத்து, அச் சிறுமி திரு­கோ­ண­மலைப் பொலி­ஸாரின் உத­வி­யுடன் சிறு­மியின் தாயார் சென்று பாது­காப்­பாக மீட்டு யாழ்ப்­பாணம் அழைத்து வந்­தி­ருந்தார்.

அத்­துடன், திரு­கோ­ண­மலைப் பொலிஸில் குறித்த சிறு­மியை ஒப்­ப­டைத்த தம்­ப­தி­யினர் இச் சிறுமி திரு­கோ­ண­மலை மத்­திய பேரூந்து நிலை­யத்தில் இட­ம­றி­யாது தனித்து நின்ற போது தாம் அழைத்து சென்­ற­தா­கவும் பின்னர் சிறு­மி­யிடம் அவ­ரது தந்­தையின் தொலை­பேசி இலக்­கத்தை பெற்று அவ­ருக்கு தொடர்பு கொண்டு இவ் விட­யத்தை தெரி­வித்­த­தா­கவும் தெரி­வித்­தி­ருந்­தனர். அச் சிறு­மியும் இவ்­வாறே தெரி­வித்­தி­ருந்தார்.

இருந்த போதிலும் தம்­ப­தி­களின் வாக்­கு­ மூ­லத்­திலும் சிறு­மியின் பேச்­சிலும் சந்­தேகம் கொண்ட கொடி­காமம் பொலிஸ் பொறுப்­ப­தி­காரி சிந்­தக சிறு­மி­யிடம் உண்­மை­களை கண்­ட­றி­யு­மு­க­மாக விசா­ர­ணையை மேற்­கொண்டார்.

இவ் விசா­ர­ணையின் போதே பல அதிர்ச்சி தக­வல்­களையும் சம்­ப­வத்தின் உண்­மை­யையும் அச் சிறுமி தெரி­யப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

இதன் படி..

சிறு­மியின் தாயும் தந்­தையும் குடும்பச் சண்டை கார­ண­மாக பிரிந்­தி­ருந்த நிலையில் இச்­சி­றுமி மன­த­ளவில் பாதிக்­கப்­பட்­டி­ருந்­துள்­ளதுடன் தான் தற்­கொலை செய்து கொள்­ளப்­போ­வ­தா­கவும் தனது நண்­பி­க­ளிடம் தெரி­வித்­தி­ருந்தார். இதேவேளை "நீ தற்­கொலை செய்ய வேண்டாம் உனது அம்­மா­விடம் செல்" என நண்­பிகள் ஆலோ­சனை கூறி­யுள்­ளனர்.

இந்­நி­லையில், சம்­பவ தினத்­தன்று காலை, ஏதோ­வொரு சந்­தர்ப்­பத்தில் தந்தை மகளை பார்த்து" நீ எங்­கை­யா­வது போய் தொலை என கடு­மை­யாக திட்­டி­யுள்ளார். இதனால் ஏற்­க­னவே மன­த­ளவில் விரக்­தி­யுற்­றி­ருந்த சிறுமி நண்­பி­களின் ஆலோ­ச­னையின் பிர­காரம் தாயிடம் செல்­லத்­ திட்­ட­மிட்டு ஆல­யத்­திற்கு செல்­வ­தாக தந்­தை­யிடம் பொய் கூறி­விட்டு துவிச்­சக்­கர வண்­டியில் வீட்டை விட்டு வெளியே சென்­றுள்ளாள்.

வீட்டை விட்டு சென்ற சிறுமி மிரு­சுவில் பகு­தி­யி­லுள்ள தனது நண்பி ஒரு­வ­ரது வீட்டில் துவிச்­சக்­கர வண்­டியை விட்­டு­விட்டு தாயிடம் செல்லும் சிந்­த­னையில் வவு­னியா செல்லும் பேரூந்தில் ஏறி­யுள்ளாள்.

பேரூந்தில் சிறுமி இருந்த இருக்­கைக்கு அருகில் இளைஞன் ஒரு­வனும் இருந்து பயணம் செய்­துள்ளான். இதன் போது இளைஞன் சிறு­மி­யுடன் உரை­யா­டி­ய­போது, சிறுமி தனது குடும்ப நிலை­யையும் அதனால் தனக்­கேற்­பட்ட மனப் பாதிப்­புக்­க­ளையும் தெரி­வித்­துள்ளாள். இந் நிலை­மையை தனக்கு சாத­க­மாக பயன்­ப­டுத்த நினைத்த இளைஞன், சிறு­மிக்கு ஆசை வார்த்­தைகள் பலதைக் கூறி அம்­மா­விடம் செல்ல வேண்டாம் என்றும் தன்­னோடு வரும்­ப­டியும் அழைத்­துள்ளான்.

தாய் தந்­தை­ய­ரு­டைய சண்­டையால் இரு­வ­ரையும் பிரிந்து இரு­வ­ரதும் போதிய அர­வ­ணைப்பும் பாசமும் பாது­காப்பும் இல்­லாது மன விரக்­தி­யி­லி­ருந்த சிறுமி அந்த வஞ்­ச­க­னு­டைய ஆசை வார்த்­தை­களில் ஈர்க்­கப்­பட்டு அவ­னோடு செல்ல சம்­ம­தித்­தி­ருந்தாள். அத்­துடன், சிறு­மியின் கைக­ளிலும் கழுத்­திலும் அணிந்­தி­ருந்த மாலை­க­ளையும் நூல்­க­ளையும் கழற்றி வீசு­மாறு தெரித்­துள்ளான். அவனின் சூழ்ச்­சியை அறிந்­தி­ராத சிறுமி அவன் சொன்­னதை அவ்­வாறே பின்­பற்­றி­யுள்ளாள்.

சிறுமி மீது வேறொ­ரு­வ­ருக்கும் சந்­தேகம் ஏற்­ப­டா­த­வாறு சிறு­மியை இரண்டாம் திகதி அதி­காலை 3 மணி­ய­ளவில் மட்­டக்­க­ளப்­பி­லுள்ள தாய் வீட்­டிற்கு கூட்டிச் சென்­றுள்ளான். அங்கு அவ் இளை­ஞனின் தாய், சிறு­மியை பதி­னெட்டு வய­திற்கு பின்பே திரு­மணம் செய்து கொள்ள முடியும் என்றும் அது வரை தமது மதம் தொடர்­பாக இவ­ளுக்கு கற்­பிக்க வேண்டும் என்றும் கூறி­யுள்ளார். ஆனால், தான் குறித்த மதத்தை கற்க மாட்டேன் என சிறுமி நிரஞ்­சினி மறுத்­துள்ளார்.

இதனால் ஆத்­தி­ர­ம­டைந்த இளை­ஞனின் தாய் அப்­ப­டி­யாயின் இவளை இங்கே வைத்­தி­ருக்க வேண்டாம் எனவும் எங்­கா­வது கூட்டிச் செல்­லு­மாறும் தன் மக­னுக்கு தெரி­வித்­துள்ளார்.மேலும் அவன் திரு­ம­ண­மான விட­யத்தை குறித்த சிறுமி அறிந்­தி­ருக்­க­வில்லை.

இந்நிலையில், இளை­ஞனும் வேறு வழி­யின்றி திரு­கோ­ண­ம­லை­யி­லுள்ள தனது மனைவி வீட்­டுக்கு அழைத்து சென்­றுள்ளான். இங்கு தான் இறைவன் சிறு­மியின் பக்­க­மி­ருந்­துள்ளான். ஏனெனில் அவ் இளைஞன் சிறு­மியை தனது மனைவி வீட்­டுக்கு அழைத்து சென்­றதன் காரணம் அவ­னது மனைவி வெளி­நாடு ஒன்­றிற்கு பணிப்­பெண்­ணாக செல்ல கொழும்பு சென்­றி­ருந்­த­மை­யினால் வீட்­டிலே யாரும் இருக்­க­மாட்­டார்கள். ஆகவே தான் நினைத்­ததைப் போன்று சிறு­மியை என்ன வேண்­டு­மென்­றாலும் செய்­யலாம் என்ற தீய நோக்­கத்­து­ட­னேயே கூட்டிச் சென்­றுள்ளான். ஆனால் சிறு­மியின் நல்ல நேரம் அவ் இளை­ஞனின் மனைவி வெளி­நாடு செல்லவிருந்த திட்டம் எதோ கார­ணத்தால் தடைப்­ப­டவே அவள் வீடு திரும்­பி­யுள்ளாள்.

இதன் போது வீட்டில் தன் கணவன் வேறொரு சிறு­மியை அழைத்து வந்­தி­ருப்­பது தொடர்­பாக அதிர்ச்­சி­யுற்ற அவள், கண­வ­னிடம் வினா­வி­ய­போது அவன் மனை­விக்கு உண்­மையை கூறி­யுள்ளான்.

எனவே, தனது கண­வனை குற்­றத்­தி­லி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக சிறு­மியே வழி­த­வறி திரு­கோ­ண­மலை வந்­த­தா­கவும், அதன் போதே தாம் சிறு­மியை காப்­பாற்­றி­ய­தா­கவும் பொலிஸில் வாக்குமூலம் அளித்­தி­ருந்­த­துடன் அவ்­வாறே சிறு­மி­யையும் கூறு­மாறு கட்­டா­யப்­ப­டுத்தி மிரட்­டியும் உள்­ளனர்.

இத் தக­வல்கள் அனைத்­தையும் சிறு­மி­யி­ட­மி­ருந்து பெற்­றுக்­கொண்ட கொடி­காமம் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி குறித்த இளை­ஞனை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டி­ருந்தார்.

அத்­துடன், சிறுமி நிரஞ்­சி­னியை சாவ­கச்­சேரி நீதி­மன்றில் முன்­னி­லைப்­ப­டுத்­தி­ய­போது தான் தனது தாய் தந்தை யாரு­டனும் இருக்க மாட்டேன் என அச் சிறுமி தெரி­வித்­தி­ருந்தாள். இதன் அடிப்­ப­டையில் நீதிவான் ஸ்ரீநிதி நந்­த­சே­கரன் சிறுமி நிரஞ்­சி­னியை அரச பொறுப்பில் வைத்து கற்­பிக்­கவும் பரா­ம­ரிக்­கவும் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இச் சம்­ப­வத்­துடன் தொடர்­பு­பட்­டி­ருந்த 25 வய­தான இளைஞன் என்­ப­துடன் வவு­னி­யாவில் தனியார் நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரிந்து வந்­துள்ளார். அத்­துடன் குறித்த இளைஞன் மற்றும் அவ­ரது மனைவி ஆகிய இரு­வரும் கடந்த 7ஆம் திகதி மதியம் திரு­கோ­ண­மலைப் பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்டு யாழ்.கொடி­காமம் பொலி­ஸா­ரிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளனர்.

இச் சம்­பவம் தொடர்­பாக கொடி­காமம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதி­காரி டி.எம்.சிந்­தக என்.பண்­டார தெரி­வித்­துள்­ள­தா­வது,

சிறு­மியின் தந்தை முறைப்­பாட்டை மேற்­கொண்ட 24 மணி நேரத்­துக்குள் சிறு­மியை எங்­களால் மீட்க முடிந்­ததால் அச் சிறு­மியின் எதிர்­கா­லமும் உயிரும் காப்­பாற்­றப்­பட்­டது. ஏனெனில் சிறு­மியும் இளை­ஞனும் நீண்ட நேரத்தை பேரூந்து பய­ணத்­தி­லேயே கழித்­தி­ருந்­தனர். இதனால் அந் நபரால் சிறு­மியை எதுவும் செய்ய முடி­ய­வில்லை. இல்­லை­யெனில் அண்மைக் கால­மாக நாட்டில் நடப்­பதை போன்று சிறு­மியை என்ன வேண்­டு­மா­னாலும் செய்து விட்டு எங்­கா­வது கொலை செய்தும் எறிந்­தி­ருக்­கலாம். எனவே பெற்­றோர்கள் தமது பிள்ளைகள் விடயத்தில் குறிப்பாக பெண் பிள்ளைகள் விடயத்தில் மிகுந்த கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுகொண்டுள்ளார்.

இச் சம்­ப­வத்தில் அச் சிறுமி வஞ்­ச­கனின் பிடியில் சிக்­கு­வ­தற்கு பிர­தான காரணம் தனக்கு நியா­ய­மாக கிடைக்க வேண்­டிய தாயி­னதும் தந்­தை­யி­னதும் அர­வ­ணைப்பு கிடைக்­கா­மையே ஆகும். குறிப்­பாக இச் சிறுமி பரு­வ­மெய்­திய கட்­டி­ளமை பருவப் பெண். இவ்­வா­றான நிலையில் தாயி­னு­டைய கரி­ச­னை­யென்­பது பிள்­ளைக்கு எவ்­வ­ளவு முக்­கி­ய­மென்­பதை அத் தாய் கூட உணர்ந்­தி­ருக்­காத நிலை­யி­லேயே இச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.

பெற்­றோ­ரது பூரண ஒத்­து­ழைப்பும் பாது­காப்பும் அறி­வு­ரையும் அவ­சி­ய­மான இக்­கா­லப்­ப­ரப்பில் பெற்­றோரால் கைவி­டப்­பட்­டுள்ளாள்.

ஏதோ பிள்­ளையை பெற்றோம் வளர்த்தோம் என்­ப­தற்கு அப்பால் அப் பிள்­ளையை சரி­யாக வளர்த்­தோமா? தாய் என்ற ரீதி­யிலும் தந்­தை­யென்ற ரீதியிலும் சரியாக எமது கடமையை செய்தோமா? என்பதே முக்கியமானதாகும்.

ரி.விரூஷன்
வீரகேசரி

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல