'பேஸ்புக் நண்பர்கள் தினம்' கொண்டாடப்பட்ட போது, மார்க், பேஸ்புக் நிறுவனத்தின் ஆள் இல்லா சிறிய விமானம் ஒன்றைக் காட்டினார். Aquila என அழைக்கப்படும் இந்த ஆளில்லா விமானம், சூரிய ஒளி வழி மின் சக்தியில் செயல்படும்.
இதனைப் பயன்படுத்தி இணைய சேவை வழங்க மார்க் திட்டமிட்டுள்ளார். இந்த ஆளில்லா விமானத்தின் இறக்கை அளவு, ஒரு போயிங் விமானத்தின் அளவு இருக்கும். ஆனால், எடை ஒரு காரின் எடையைக் காட்டிலும் குறைவாகவே உள்ளது.
எடை குறைவாக இருந்தால் தான், சோலார் பேனல்கள் தரும் மின் சக்தியில் விண்ணில் பறக்க மற்றும் நிலை கொள்ள இயலும். மூன்று மாதம் இது பறந்தபடியே இருக்கும் திறன் கொண்டது.
இந்த நிகழ்ச்சியில், மார்க் தன் Free Basics திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசினார். மற்ற நாடுகளின் அரசு அனுமதியுடன், அங்கு செயல்படும் தொலை தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு இந்த திட்டத்தினைச் செயல்படுத்துவதை விரிவு படுத்த இருப்பதாகவும், இதன் மூலம் உலக மக்கள் அனைவருக்கும் இணைய சேவையினை வழங்கும் இலக்கு நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.
(ஆனால், இந்தியாவில் இந்த திட்டத்தினைச் செயல்படுத்த அரசு தடைவிதித்துள்ளது.)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக