பேஸ்ட் ஆப்ஷன் நீக்க: எக்ஸெல் புரோகிராமில் தரப்படும் ஒரு டூல், சிலருக்கு எரிச்சலைத் தரும் வகையில் செயல்படுவதாகப் பலர் கூறியுள்ளனர். இதனை நிறுத்தத் தெரியாமல், எரிச்சலுடன் பொறுத்துக் கொள்வோரும் உண்டு. அது என்ன என்று இங்கு பார்க்கலாம்.
அந்த டூலுக் குப் பெயர் Paste Options. நாம் ஏதாவது ஒரு தகவலை, ஒர்க் ஷீட்டுடன் ஒட்டுகையில், ஒட்டப்பட்ட அந்த தகவலுக்கு அருகே எக்ஸெல், மிதக்கும் பட்டன் ஒன்றை வலது பக்கம் காட்டுகிறது.
இது டூல் பாரில் உள்ள Paste tool போலக் காட்சி அளிக்கிறது. சின்ன கிளிப் போர்டில், ஒரு சிறிய பேப்பருடன் இந்த டூல் காட்சி தரும். இது தான் Paste Options பட்டன். நம்முடைய மவுஸ் பாய்ண்ட்டரை இதன் மீது சுழற்றினால், அங்கு கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே, நீங்கள் ஒட்டிய தகவலை என்னவெல்லாம் செய்திடலாம் என்று சில ஆப்ஷன்கள் தரப்படும். இதில் ஒன்றைத் தேர்ந்தெடுத்தால், அதில் குறிப்பிட்டுள்ளபடி, ஒட்டப்பட்ட தகவல் மாற்றப்படும்.
இந்த பட்டன் உங்களின் கவனத்தைத் திருப்புவதாக உணர்ந்தால், இதனைத் தோன்றாதபடி செய்துவிடலாம். அதற்கு, கீழே தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
1. Excel Options டயலாக் பாக்ஸைத் திறக்கவும். எக்ஸெல் 2007 நீங்கள் பயன்படுத்தினால், ஆபீஸ் பட்டன் அழுத்தி, கிடைக்கும் பிரிவுகளில் Excel Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் File டேப் அழுத்தி, பின்னர் Options என்பதில் கிளிக் செய்திடவும்.
2. இந்த டயலாக் பாக்ஸில் இடதுபுறம் உள்ள Advanced என்பதில் கிளிக் செய்திடவும்.
3. இனி, Cut, Copy, and Paste என்ற பிரிவில், Show Paste Options Buttons என்பதன் அருகே உள்ள செக் பாக்ஸில் உள்ள டிக் அடையாளத்தினை நீக்கிவிடவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
எக்ஸெல் ஸ்குரோலிங்: எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றில் நிறைய செல்களில் தகவல்களை அமைத்திருக்கிறீர்கள். அவற்றை ஆய்வு செய்கையில் ஸ்குரோல் செய்து கீழாக ஒரு செல்லில் இருக்கிறீர்கள். திடீரென ஆரோ கீ ஒன்றை அழுத்துகிறீர்கள்.
என்ன நடக்கிறது?
மீண்டும் நீங்கள் எந்த செல்லில் உங்கள் கர்சரை நிறுத்தியிருந்தீர்களோ அந்த செல்லுக்கு இழுத்துச் செல்லப்படுகிறீர்கள். உங்களுக்கு வியப்பு!
என்ன நடக்கிறது இங்கு?
ஏறத்தாழ 100 வரிசைகள் தாண்டி நான் இருந்தேனே? எப்படி பழைய இடத்திற்கு வந்தேன் என்று தானே வியக்கிறீர்கள். புரோகிராம் ஏன் இப்படி தவறுதலாகச் செயல்படுகிறது? அதுதான் இல்லை. நீங்கள் ஸ்குரோல் பாரைப் பயன்படுத்தி அல்லது மவுஸின் ஸ்குரோலைப் பயன்படுத்தி கீழாக அல்லது மேலாகச் செல்கையில் திரையில் காணப்படும் காட்சி தான் மாறுகிறது. புதிய செல்களுக்கு நீங்கள் செல்லவில்லை. எனவே நீங்கள் ஆரோ கீயை அழுத்தியவுடன் அது நீங்கள் இருந்த செல்லுக்கு ஒரு செல் மேலாகவோ அல்லது கீழாகவோ செல்கிறது.
எனவே தான் நீங்கள் ஸ்குரோல் செய்து சென்ற இடத்திலிருந்து உடனடியாகக் கர்சர் இருந்த செல்லுக்கு அருகே நீங்கள் அழைத்துச் செல்லப்படுகிறீர்கள். ஸ்குரோல் செய்து அடைந்த இடத்திற்கு உங்கள் கர்சர் இருக்க வேண்டும் என்றால் மவுஸால் அதனை செலக்ட் செய்திட வேண்டும். இவ்வாறு ஸ்குரோல் செய்து சுற்றி வருவதும் நல்லதுதான்.
ஒரு செல்லில் தகவல் இடுகையில் மற்ற செல்களில் என்ன உள்ளது என்று பார்க்க விரும்பினால் என்டர் செய்து சென்றால் எங்கு நீங்கள் பணியாற்றிக் கொண்டிருந்தீர்கள் என்பது மறந்துவிடும் அல்லவா? எனவே ஸ்குரோல் செய்து சுழன்று சென்று பின் மீண்டும் செயல்படும் செல்லுக்கே வரலாமே.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக