ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

நிறம் மாறிய பூ

நிறக்­கோ­டுகள் இணைந்த வான­வில்லாய் அமைய வேண்­டிய என் வாழ்க்கை கறுப்பை மாத்­திரம் கொண்ட இருளாய் மாறிப்­போ­னது. சிற­க­டித்­த­படி வானில் பறக்கும் பற­வை­யாக சுற்­றித்­தி­ரிய வேண்­டி­யவள், இப்­படி நான்கு சுவ­ருக்குள் இருளை உடை­யா­கக்­கொண்டு வருந்­திக்­கொண்­டி­ருக்­கிறேன்.

சிறைக்­கம்­பி­க­ளுக்குள் சிதைந்து போன மனத்­தோடு நிரோஷா (பெயர் மாற்­றப்­பட்­டுள்­ளது) தன் வாழ்வை எண்­ணிக்­கொண்டு நொந்து கொண்­டி­ருக்­கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதை­தனை உல­குக்குக் காட்ட எத்­த­னிக்­கிறாள்.



பிறந்­தது முதல் எனக்கு மகிழ்ச்­சி­யென்­பது அத்­திப்பூ பூப்­ப­து­போ­லவே அமைந்­தி­ருந்­தது. இரண்டு வயதில் தாய் என்னை விட்டு விட்டுப் போய்­விட்டாள். தந்­தையின் அர­வ­ணைப்பில் அறி­யாத வயதில் காலம் தள்­ளினேன். எனது எதிர்­கா­லத்தை எண்ணி எனது தந்தை வெளி­நாட்­டுக்குப் பணி­பு­ரியப் போனாராம். அப்­போது எனக்கு வயது மூன்று. போகும்­போது என்­னையென் அத்தை வீட்டில் விட்­டுச்­சென்­றுள்ளார்.

அதற்குப் பின்னர் நான் ஐந்து வய­தாக இருக்கும் போது அப்பா திரும்பி வந்­துள்ளார். நான் அவ­ரைப்­பார்த்­த­வுடன் பயந்து அழு­த­தா­கவும் பின்னர் அவரே என்னை சமா­தா­னப்­ப­டுத்தி நான் தான் உன் அப்பா என்று புரி­ய­வைக்க இரண்டு நாட்­க­ளா­னது என்றும் பின்னர் மாமா கூறி­யது நினை­வி­ருக்­கி­றது. அப்­போது நான் அம்மா எங்கே என்று கேட்­ட­தற்கு அம்மா நம்மை விட்டு சாமி­யிடம் போய்­விட்­ட­தாக எனக்கு கூறினார்.

அவர் வந்து மூன்று மாதங்­க­ளுக்கு பின்னர் மீண்டும் வெளி­நாட்­டுக்கே சென்­று­விட்டார். அத்தை என்னை அன்­பாக பார்த்­துக்­கொள்வார் என்று கூறியே அப்பா விடை­பெற்­றுச்­சென்றார். எனினும், அத்தை என்னை ஓர் வேலைக்­கா­ரி­யைப்­போன்றே நடத்­தினார். அத்­தையின் வீட்டில் மாமாவும் அவர்­க­ளுக்கு இரண்டு பிள்­ளை­களும் இருந்­தனர். மூத்­த­வ­னுக்கு என்­னை­யொத்த வயது. கடைக்­குட்டி என்­னை­விட இளை­யவன். வீட்டில் இவர்கள் இரு­வ­ரது வேலை­க­ளையும் நானே செய்­ய­வேண்­டிய நிலைக்கும் தள்­ளப்­பட்டேன். எனது தந்தை எனது செல­வுக்­காக அனுப்­பிய பணத்தை அத்தை தனக்கும் தன் குடும்­பத்­திற்கும் பயன்­ப­டுத்­திக்­கொண்டு சுக­போக வாழ்வை வாழ்ந்தார். எனக்கு கிழிந்த ஆடை­களும் கண்­ணீ­ருமே எஞ்­சி­ன. அன்­பிற்கும் பாசத்­திற்கும் ஏங்­கிய கண்­க­ளுக்கு ஏமாற்­றமே மிஞ்­சி­யது.

கால­வோட்­டத்தில் நான் பரு­வ­ம­டைந்தேன். அதே­வேளை, தந்­தையும் நாடு திரும்­பினார். என்னைப் பார்த்­ததும் அழு­தே­விட்டார்.

'மகளே நீ எவ்­வ­ளவு அழ­காக இருக்­கிறாய் தெரி­யுமா? உன் அம்­மாவைப் பார்த்­தது போல இருக்­கி­றது. உன்­னைப்­பார்க்க அவ­ளுக்கு கொடுத்து வைக்­க­வில்­லையே நீ நீடூழி வாழ­வேண்­டு­மென்று'' வாழ்த்­தினார். அவ­ருடன் நான் கழித்த பொழு­துகள் தான் என் வாழ்வில் நான் பெற்ற பொற்­சு­வ­டுகள். அவரும் குறித்த காலத்­தினுள் வெளி­நாட்­டுக்கே திரும்பிச் சென்­று­விட்டார். எனக்கோ மீண்டும் இருட்­டுக்குள் தள்­ளப்­பட்ட ஓர் உணர்வு. தந்தை இருக்கும் வரை அத்தை என்னை நன்­றாக பார்த்­துக்­கொண்டார். இல்லை இல்லை பார்த்­துக்­கொண்­டது போல நடித்தார் என்­றுதான் சொல்­ல­வேண்டும்.

தந்தை போன பிறகு அத்­தையின் மகன்­க­ளுடன் நான் பேசு­வதைத் தடுத்து வந்தாள். எனக்கு அப்­போது காரணம் விளங்­க­வில்லை நாட்கள் செல்லச் செல்ல என்னைப் பார்ப்­ப­வர்­களின் கண்­களில் நான் ஒரு மாற்­றத்தைக் கண்டேன். அதோடு எனக்­குள்ளும் மாற்­றங்கள் நடந்­தன. என்னை நானே இர­சிக்கத் தொடங்­கினேன். சில வேளை­களில் எனது அழகை கண்­ணா­டியில் பார்க்­கவே நேரக்­க­ணக்கில் செல­வி­டுவேன்.

இதன் போதுதான் சாதா­ரண தரப் பரீட்­சைத்­தேர்வை நான் எழு­தினேன். பரீட்சை முடிந்த பிறகு முடி­வுகள் வரும்­வரை வீட்டில் இருந்தேன். அத்தை வேலைக்கு போய்­வி­டுவார். அத்­தையின் மூத்த மகனும் என்­னுடன் தேர்வை எழு­தி­விட்டு வேறு வேலைக்கு சென்றான். தம்­பியும் பள்­ளிக்­கூடம் சென்று விடுவான்.

நான் மட்டும் தான் தனியே வீட்டில் இருந்தேன். வேலைக்கு போகும் மாமாவும் அதன்­பி­றகு வீட்டில் இருக்க ஆரம்­பித்தார். போகப்­போ­கத்தான் அவ­ரது சுய­ரூபம் எனக்கு தெரிந்­தது. அவர் என்னை அடைய நெருங்­கி­வந்தார். அவ­ரி­ட­மி­ருந்து விடு­பட முயற்­சித்தேன். அந்த வீட்­டி­லி­ருந்து தப்­பித்­துப்­போ­கவும் முடிவு செய்தேன்.

ஆனால், அதற்குள் எல்­லாமே நடந்­து­மு­டிந்து விட்டது. மாமா­வோடு கொண்ட உறவின் கார­ண­மாக நான் கரு­வுற்றேன். அதற்கு பின்னர் எனக்கு அத்தை வீட்டில் இருக்க பிடிக்­க­வில்லை. யாருக்கும் தெரி­யாமல் தந்­தைக்கு கடி­த­மொன்றை எழுதி தபால் செய்­து­விட்டு இர­வோ­டி­ர­வாக வீட்­டை­விட்டு வந்­து­விட்டேன்.
கரு­வுற்ற சிசுவும் வயிற்றில் தங்­க­வில்லை. அதற்கு பிறகு வீடு­களில் வேலை செய்­யத்­தொ­டங்­கினேன். ஆனாலும் தொடர்ந்து என்னால் ஒரு வீட்டில் வேலை­செய்ய முடி­ய­வில்லை. குறித்த வீட்டில் இருக்கும் ஏதா­வது ஆண்­ம­கனால் பாலியல் தொல்­லைகள் தொடர்ந்த வண்­ண­மே­யி­ருந்­தன. எனக்கே ஏன் பிறந்தோம் என்ற அள­வுக்கு வெறுப்பு ஏற்­பட்­டது. எந்­த­வொரு வீட்­டிலும் ஒன்று அல்­லது இரண்டு மாதங்­க­ளுக்கு மேல் இருக்­க­மு­டி­ய­வில்லை.

இறு­தியில் வய­தான பாட்­டி­யொ­ரு­வரை கவ­னிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்­தது. அந்த பாட்­டியும் அவ­ரது மகளும் என்னை நன்­றாகப் பார்த்­துக்­கொண்­டனர். நானும் அவர்­க­ளது பரா­ம­ரிப்பில் நல­மாக வாழ்ந்­து­வந்தேன். அவர்­க­ளது வீட்டில் இருந்த என் வயது மதிக்­கத்­தக்க சார­தியும் என்­னோடு அன்­பாக பழ­கினார். அன்­பிற்கும் பாசத்­திற்கு பாது­காப்­பிற்கும் ஏங்கித் தவித்த எனக்கு அனைத்தும் அவ்­வீட்டில் கிடைத்­தன. எனது பழைய கால கசப்­பான சம்­ப­வங்­களை மறந்தேன், அந்த வீட்டில் என்னை நான் புதிதாய் உணர்ந்தேன். அன்­பாகப் பழ­கிய சாரதி திலங்­க­வுக்கும் எனக்கும் இடையில் காதல் மலர்ந்­தது. நான் அவரை ஆத்­மார்த்­த­மாக நேசித்தேன். என்­னு­டைய கடந்த கால விட­யங்கள் அனைத்­தையும் அவ­ருக்கு கூறினேன்.
அவரும் எனக்கு ஆறு­தலாய் பேசினார். என்னை திரு­மணம் செய்­வ­தா­கவும் வாக்­க­ளித்தார். இவ்­வா­றி­ருக்க, இவ்­வி­டயம் பாட்­டிக்கும் அவ­ரது மக­ளுக்கும் தெரி­ய­வந்­தது அவர்­களும் அவனை திரு­மணம் செய்­து­கொள்­ளு­மாறு கூறினர். திடீ­ரென ஒருநாள் திலங்க காணாமல் போனார். எந்தத் தக­வலும் கிடைக்­க­வில்லை.

''நீ பயப்­பட வேண்டாம் நாங்கள் உன்­னைப்­பார்த்­துக்­கொள்வோம்'' என்று பாட்டி கூறிய வார்த்­தை­களில் சமா­தா­ன­மா­கினேன். ஒரு­மாத காலத்­திற்கு பின்னர் திலங்க என்னை வந்து சந்­தித்தார். தான் அம்­மாவைப் பார்க்­கப்­போ­ன­தாக அவர் கூறினார். திலங்க வந்த சில நாட்­க­ளுக்கு பிறகு என்­னிடம் வந்து நாம் இரு­வரும் இங்­கி­ருந்து சென்று திரு­மணம் செய்­து ­கொள்வோம் என்றார். நான் முதலில் அதற்கு மறுத்தேன். அப்­போது எனக்கு வெறும் இரு­பது வய­துதான் ஆகி­யி­ருந்­தது.

பாட்­டிக்கும் மக­ளுக்கும் சொல்­லாமல் என்னால் வர­மு­டி­யாது என்றேன். இருந்தும் திலங்க தொடர்ந்து என்னை கட்­டா­யப்­ப­டுத்தி அவ­ரு­டைய அக்­காவின் வீட்­டிற்கு அழைத்­துச்­சென்றார். ஒரு­வாரம் வரை அங்கு அவ­ருடன் தங்­கி­யி­ருந்தேன். அங்கு அவ­ரது அக்கா என்­னுடன் அன்­பாகப் பழ­கினார். பின்னர் ஒருநாள் அவ­ரது சொந்த ஊருக்கு போய் இரண்டு நாட்­களில் வந்­து­ வி­டு­வ­தாக கூறிச்­சென்றார். போனவர் போனது தான் திரும்­பவே இல்லை.

அந்த அக்­காவும் நீ இங்க தங்க வேண்­டு­மானால் வாடகை தர­வேண்டும் என்று அதட்­டினார். அதற்கு நான் ஏன் வாடகை தர­வேண்டும் எனக் ­கேட்டேன். பின்னர் அவர் கூறி­ய­வற்றை கேட்­டதும் தான் நான் மீண்டும் ஏமாற்­றப்­பட்­டதை தெரிந்து கொண்டேன். அவர் திலங்­கவைப் பற்­றிய உண்­மை­களைக் கூறினார். அவன் ஏற்­க­னவே திரு­ம­ண­மா­னவன் என்­றதும் எனக்கு தலையே சுற்­றி­யது. என்ன செய்­வ­தென்றே புரி­ய­வில்லை. தலையில் கைவைத்­த­படி கட்­டிலில் அமர்ந்து எண்­ணிக்­கொண்­டி­ருந்தேன். மீண்டும் பாட்­டியின் வீட்­டிற்கு செல்­லவும் மனம் வர­வில்லை.

அந்த அக்கா கூறினார். "உன்னைப் பற்றி திலங்க என்­னிடம் எல்­லா­வற்­றையும் கூறி­விட்டான். உன்­னிடம் தற்­போது இழப்­ப­தற்கு ஒன்­று­மில்லை. நான் கூறு­வது போல நீ நடந்­து­கொண்டால் சாகும் வரை நீ இங்கே இருக்­கலாம். மீண்டும் தெருத்­தெ­ரு­வாக சென்று சீர­ழிய வேண்­டி­ய­தில்லை" என்றார். அப்­போது எனக்கு அவர் கூறி­யதை மறுக்க முடி­ய­வில்லை. அங்­கி­ருந்து தப்­பித்­து­போ­கவும் வழி­யில்லை. விதியை நொந்­து­கொண்டு அவர் பேச்­சைக்­கேட்டு நடை­பி­ணமாய் வாழ ஆரம்­பித்தேன். ஒவ்­வொரு நாளும் நேரம் ­கா­ல­மில்­லாமல் விலை­மா­து­வாக பொழுதைக் கழித்தேன். நிறைய பணம் சேர்ந்­தது. கொடுப்­ப­தற்கு யாரு­மில்லை. அந்தப் பணத்தை வைத்­துக்­கொண்டு சிறிய வீடொன்றைக் கட்­டினேன்.

அதற்குப் பின்னர் மேர்வின் என்­ப­வரை சந்­தித்தேன். அதன் தொடர்ச்­சி­யாக பெரிய ஹோட்­டல்­களில் விலை­மா­து­வாக தொழில்­பு­ரிய ஆரம்­பித்தேன். பணக்­கா­ரர்­க­ளோடு உற­வுகள் வைத்­துக்­கொள்­ள­வேண்­டிய நிலை வந்­தது. எனினும், சில வேளை­களில் பொலி­ஸாரின் சுற்றி வளைப்­பு­க­ளிலும் சிக்கி சில நாட்கள் சிறைச்­சா­லை­க­ளிலும் அடை­பட்டு கிடந்தேன். அங்­கி­ருந்து வெளியே வந்து மீண்டும் விலை­மா­து­வாக பய­ணத்­தைத் ­தொ­டர்ந்தேன். என் வாழ்க்­கையை எண்ணி நான் கண்ணீர் விடாத நாளில்லை. இதி­லி­ருந்து விடு­படப் போய் போதை­வஸ்­து­வுக்கு அடி­மை­யாகிப் போனேன். அதுவே என் அழி­வுக்கு பிள்­ளையார் சுழி போட்­டது. போதை வஸ்­துக்­காக மீண்டும் விப­சா­ரத்தில் ஈடு­பட்டேன். நான் சம்­பா­தித்த அனைத்­தையும் போதை­வஸ்­துக்­காக செலவு செய்தேன்.

இறு­தியில் இரண்டு கிராம் போதை­வஸ்­துடன் பொலி­ஸா­ரிடம் அகப்­பட்டு சிறைக் கம்­பி­க­ளுக்குள் வாழ்க்கையை சுருக்கிக்கொண்டுள்ளேன்.

நான் பார்த்த கண்களுக்கு மற்றவர் என்னை பாலியல் பொம்மையாகவே பார்ப்பது போலவே தென்பட்டது. தந்தை என்னவானார்? என்றும் தெரியவில்லை. அவரை எண்ணி தினம் தினம் கண்ணீர் துளிகள் சொரிந்துகொண்டிருக்கிறேன். அவரை போய்ப்பார்க்கவும் எந்நிலைக் கூறியழவும் மனம் ஏங்குகிறது.

பிள்ளைகளை கவனிக்காது போன தாய் தந்தையர்க்கு என் வாழ்வு பாடமாக அமையவேண்டும். பணம் என்பது தேவைதான். இருந்தாலும், பிள்ளைகளின் பாதுகாவலராக அவர்கள் எப்போதும் அருகே இருக்கவேண்டும்.
சுகநலன்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

நான் ஒரு விலைமாதுவாக முத்திரைக் குத்தப்பட்டுவிட்டேன். குடுகாரியாக முத்திரை குத்தப்பட்டு விட்டேன். இதிலிருந்து மீள்வேனா? இல்லை மூழ்கி விடுவேனா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

 இ.சதீஸ்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல